Tuesday, July 9, 2019

சாலை விபத்துகளைத் தடுக்க வாகனங்களில் நைட்ரஜன் வாயு: மத்திய அரசு திட்டம்

சாலை விபத்துகளைத் தடுக்க ரப்பர்களில் சிலிகான் சேர்த்து டயர்கள் தயாரிப்பதையும் அவற்றில் நைட்ரஜன் வாயு நிரப்புவதையும் கட் டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்கள் கேட்ட துணைக் கேள்விகளுக்கு, மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதிலில் கூறியி ருப்பதாவது: நொய்டா - ஆக்ரா நெடுஞ்சாலையில் இன்று (நேற்று) நடைபெற்ற விபத்து கெட்டவாய்ப்பானது. (பேருந்து ஒன்று கால்வாயில் விழுந்ததில் 29 பேர் பலியாயினர்.) விபத்துக்கான பின்னணி குறித்து விசாரணை நடத்த உத்தர பிரதேச அரசு ஏற்கெனவே குழு ஒன்றை அமைத்துள்ளது.

விபத்து நடந்த யமுனா அதிவிரைவு நெடுஞ்சாலையை உ.பி. அரசுதான் கட்டியது. அந்த சாலைக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை. மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து பராமரித்து வருகிறது. இதில் நொய்டா - ஆக்ரா யமுனா நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை அல்ல.

எனினும், விசாரணை குழுவின் பரிந்துரைகளில் என்ன கூறப்படுகிறதோ அவற்றை கண்டிப்பாக அமல்படுத்தும் படி உத்தரபிரதேச அரசை மத்திய அரசு கேட்டுக் கொள்ளும். இந்த விபத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க உத்தரவிடப்படும்.

சிமென்ட் கான்கிரீட் நெடுஞ்சாலை யால், கடந்த 2016ஆ-ம் ஆண்டு 133 பேர் உயிரிழந்தனர். 2017ஆம் ஆண்டு 146 பேர் இறந்தனர். கடந்த ஆண்டு 11 பேர் உயிரிழந்தனர். இதுபோல் சாலை விபத் துகள் ஏற்படுவதைத் தடுக்க, வாகன டயர்களின் தரத்தை மேம்படுத்த வேண் டும். அதற்கு, ரப்பருடன் சிலிகான் சேர்த்து தரமான டயர்கள் தயாரிப்பதையும், டயர்களில் சாதாரண காற்றுக்குப் பதில் நைட்ரஜன் வாயு நிரப்புவதையும் கட்டாயமாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...