Tuesday, July 9, 2019

ஜெயலலிதா கொள்கைப்படி 10% இட ஒதுக்கீட்டில் முடிவு செய்வோம்: துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்க சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக அரசின் தலைமை செயலகத்தில் துணை முதல் வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நேற்று (8.7.2019) மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது

இந்த கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடை அமல்படுத்தினால் தமிழகத் திற்கு கூடுதலாக ஆயிரம் மருத்துவபடிப்பு இடங்கள் கிடைக்கும் என குறிப் பிட்டார்.

துணை முதல்வரின் இந்த உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான கட்சித் தலைவர்கள் புதிய சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில் அனைத்துக்கட்சி கூட் டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 10% இட ஒதுக்கீடு குறித்து பேசுகையில், 21 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்றும், அந்த கட்சித்தலைவர்கள் ஒவ்வொரு வரும் நல்ல கருத்துகளை கூறியதாக தெரிவித்தார். ஜெயலலிதா கொள் கையின்படி நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக சட்ட வல்லு நர்களுடன் ஆலோசித்து, ஜெயலலிதா வழியில் அரசு நல்ல முடிவை எடுக்கும் என குறிப்பிட்டார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...