Wednesday, June 5, 2019

45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவிகிதம் வேலையில்லா திண்டாட்டம்!

இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி எனப்படும் ஜி.டி.பி. 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந் துள்ளது. நாட்டின் வேலையில்லாத் திண் டாட்டமும் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017_18 ஆண்டு 6.1. சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்த புள்ளி விவரங்கள் ஏற்கெ னவே பல்வேறு தரப்பினராலும் வெளியிடப் பட்டவையே என்றா லும் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாகப் பதவி யேற்ற நாளில் மத்திய அரசே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தி இந்து' ஆங்கில நாளேட்டின் 1.6.2019 இதழில் வெளியிடப்பட்டுள்ள சிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்ப தாவது: இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 2019 ஜனவரி முதல் மார்ச் முடிய உள்ள காலாண்டுக் காலத்தில் மிகவும் குறைவான 5.8 சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சி யடைந்துள்ளது இதன்மூலம் ஆண்டு முழுவதுக்குமான வளர்ச்சி 6.8 சதவிகிதம் அளவுக்கு குறைந் துள்ளது. மோடி தலைமையிலான அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் முதல் நாளில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமான அரசுப் புள்ளி விவரங்களின் மூலம் இது வெளியாகியுள்ளது.  கடந்த வெள்ளிக்கிழமை 31.5.2019 அன்று பொருளாதார நடவடிக்கைகள் துறைச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது இந்த வீழ்ச்சி பணமாக மாற்றக் கூடிய சொத்து பற்றாக்குறை உள்ளிட்ட தற்காலிக நிலைமைகளால் ஏற்பட்டுள்ளது என்று கூறிய போதிலும், இந்த நிலை 2019 ஏப்ரல்_ஜூன் காலாண் டுக் காலத்துக்கும் நீடிக்கும் என்றார்.
புதிய நிதி ஆண்டிலும் அந்த நிலை தொடர்ந்தபோதும் இரண் டாம் காலாண்டுக்குப் பின் நிலை மாறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிவேகமாக வள ரும் நாடு என்ற நிலையில் சீனாவிடம் இந்தியா தோற்றுள்ளதே என்று கேட்டபோது, காலாண்டுக் கணக் குகள் முக்கியமில்லை. இன்னமும் அதிவேகமாக வளர்ந்து வருவ தாகவும், சீனாவின் அளவு இதை விடக் குறைவு என்று கூறிய போதி லும், இந்தியாவின் வீழ்ச்சிக்கு விவ சாயம், வனம், மீன் வளம், சுரங்கம் மற்றும் உற்பத்தித் துறை களில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவு என்று விளக்கினார்.
மோடி பதவியேற்ற மறுநாள் வெளியிடப்பட்ட வேலையில்லா திண்டாட்டப் புள்ளி விவரம் 45 ஆண்டுகளில் மிக அதிகமாக இருப்பது பற்றி கேட்டபோது, "இது புதிய வடிவம், புதிய கணக்கு இதை ஒப்பிடக் கூடாது. இது 45 ஆண்டுகளில் அதிகம் என்றோ குறைவு என்றோ நான் கூறமாட்டேன் என்று புள்ளி விவரித் துறைச் செயலாளர் பிரவீன் சிறீவஸ்தவா கூறியுள்ளார்.
எனினும் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என் பதை நிறைவேற்ற திருத்தப்பட்ட நிதி நிலை அறிக்கை மதிப்பீட்டில் 3.39 சதவிகிதமாக குறிப்பிடப்பட் டுள்ளது இது ஒட்டு மொத்தமாக 2019 மார்ச் 31 ஆம் தேதி ரூ.6.45 லட்சம் கோடியாக இருந்தது. தலைமைத் தணிக்கை அதிகாரி வெளியிட்ட புள்ளி விபரத்தின்படி ரூ.6.34 லட்சம் கோடியாக குறைக் கப்பட்டுள்ளது ஒட்டு மொத் தக் கணக்கீட்டின்படி ஒரு சதவிகிதம் சுட்டுதலாக இருந்த நிதிப்பற்றாக் குறை மொத்த உள் நாட்டு உற்பத்தி யின் மூலம் குறைக் கப்பட்டுள்ளது 2018_19 மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.190.10 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2017_18 ஆம் ஆண்டு மொத்த உள் நாட்டு உற்பத்தி ரூ.170.95 லட்சம் கோடியை விட 11.2 சதவிகிதம் அதிகமாகும்.
செலவுக்கும், வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமே நிதிப் பற்றாக்குறையாகும். 2018_2019 ஆண்டு நிதி நிலை அறிக்கையில் 3.3 சதவிகிதமாக குறிப்பிடப்பட்டிருந் தது. விவசாயிகளுக்கான திட் டத் தின்மூலம் திருத்தப்பட்ட மதிப்பீட் டில் 3.4 சதவிகிதமாக உயர்த்தப் பட்டது. 2019_2020 நிதிநிலை அறிக்கையில் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவிகிதமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு "தி இந்து' ஆங்கில நாளேட்டின் சிறப்புச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...