Saturday, April 6, 2019

‘துக்ளக்‘ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, வெளியீட்டாளர் கே.சுவாமிநாதன், கட்டுரையாளர் சத்யா மீது காவல்துறையில் புகார்கள்

அனுப்புதல்
இரா.குணசேகரன் தபெ. ராமச்சந்திரன்
36, மருதம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு தஞ்சாவூர் - 613 005
பெறுதல்
உயர்திரு காவல் ஆய்வாளர் அவர்கள்,
மருத்துவக்கல்லூரி காவல் நிலையம் தஞ்சாவூர்
எதிரிகள் :
1. கே. சுவாமிநாதன் -  வெளியீட்டாளர் மற்றும் பதிப்பாளர், துக்ளக் பத்திரிக்கை நசிகேதன் பப்ளிகேசன் இந்தியா பிரைவேட் லிமிடெட் எண். 166, பழைய எண்.46), பசுமைவழிச் சாலை சென்னை - 600 028
2. எஸ்.குருமூர்த்தி - ஆசிரியர், துக்ளக் பத்திரிக்கை நசிகேதன் பப்ளிகேசன் இந்தியா பிரைவேட் லிமிடெட் எண்.166, பழைய எண்.46), பசுமைவழிச் சாலை சென்னை - 600 028
3. சத்யா கட்டுரை - ஆசிரியர், துக்ளக் பத்திரிக்கை நசிகேதன் பப்ளிகேசன் இந்தியா பிரைவேட் லிமிடெட் எண்.166, பழைய எண். 46), பசுமைவழிச் சாலை சென்னை - 600 028
அய்யா, வணக்கம்.
பொருள் : தமிழ்நாட்டில் பொள்ளாச்சி பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர் களைகாப்பாற்றுவதற்காக கடந்த 27.03.2019 தேதியிட்ட துக்ளக் பத்திரிக்கையின் மூலம் எழுதி மதக் கலவரத்தை தூண்டிவிடும் துக்ளக் ஆசிரியர் மற்றும் வெளி யீட்டாளர் மற்றும் கலாச்சார சீரழிவுக்கான காரணங்கள் என்ற கட்டுரையை எழுதிய சத்யா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தல் சம்பந்தமாக.
மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கமான திராவிடர் கழகத்தில் மாநில அமைப்பாளராக பொறுப்பில் இருந்து வருகிறேன்.
மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, பகுத்தறிவு சிந்தனை ஆகியவற்றை பிரச்சாரம் செய்யும் பிரச்சாரராக இருந்து வருகிறேன். திராவிடர் கழகத்தின் தற்போதைய தலைவர், விடுதலை நாளிதழின் ஆசிரியர் திரு.கி.வீரமணி எம்.ஏ., பி.எல்., ஆவார். கடந்த மாதத்தில் பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச படம் எடுத்து மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்தார்கள். மேற்கண்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சொல்லப்படும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தது.
மேலும் தமிழக அரசு 228(A) இந்திய தண்டனைச் சட்ட பிரிவின் படி பாலியல் ரீதியாக துன்பத்திற்கு உள்ளான பெண்களை பற்றி அவர்களது அடையாளம் தெரியாத வகையில் இருக்க வேண்டும் என்பதை மீறி புகார் கொடுத்த பெண்ணின் பெயர் மற்றும் முகவரியினை அரசாணையில் தமிழ அரசு வெளியிட்டது. இதனை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடுமையாக கண்டனம் செய்து, புதிய அரசாணையை வெளியிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டு புகார் அளித்த பெண்ணுக்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி பல இயக்கங்கள் போராட்டம் நடத்தினார்கள்.
கடந்த 27.03.2019 தேதியிட்ட துக்ளக் இதழில் விமர்சனம் செய்யும் வகையில் “கலாச்சாரச் சீரழிவுக்கான காரணங்கள்” என்ற தலைப்பில் தந்தை பெரியாரும் அவரது இயக்கத்தினரும் தான் கலாச்சார சீரழிவுக்கு காரணம் என்று சத்யா என்பவரால் ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்து அந்த கட்டுரையில் கடந்த ஆண்டு உச்சநீதி மன்றத்தில், ஜோசேப்ஷைணி VS யூனியன் ஆப் இந்தியா என்ற வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பைப் பற்றியும் கேவலமாக விமர்சனம் செய்து எழுதியிருக் கிறார்கள். மேலும் பெண்கள் போராடுவது தவறு. அவர்கள்தான் சமூக சீரழிவுக்குக் காரணமாக இருக்கிறார்கள் என்றும் எழுதப்பட்டிருந்தது. திராவிடர் கழகத்தைப் பற்றியும், அதன் நிறுவனர் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி மற்றும் தற்போதைய தலைவர் திரு. கி.வீரமணி அவர்களைப் பற்றியும் அறுவருக்கத்தக்க வார்த்தைகளால் இந்து இயக்கங்கள் என்ற போர்வையில் சிலர் பேசி மத ரீதியான கலாச்சாரத்தைத் தூண்ட முயற்சித்து வருகிறார்கள்.
கடந்த 27.03.2019 தேதியிட்ட “கலாச்சாரச் சீரழிவுக்கான காரணங்கள்” என்ற தலைப்பு முழுக்க முழுக்க பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கிலும் திராவிடர் கழகத்தையும் அதன் நிறுவனர் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களையும், தற்போதைய தலைவர் திரு கி.வீரமணி அவர் களையும் இழிவான வகையில் சித்தரித்து எழுதப்பட்டுள்ளது. அந்த கட்டுரையின் சாராம்சமாக பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி களுக்கு ஆதரவாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி பத்திரிக்கை கட்டுரையின் தொடர்ச்சியாக சில போராட்டங்களும், சமூக பதற்றமும் தற்போது ஏற்பட்டு வருகிறது. மேற்படி கட்டுரை எழுதிய சத்யா, துக்ளக் பத்திரிக்கையின் வெளியீட்டாளர் மற்றும் பதிப்பாளர் கே. சுவாமிநாதன் மற்றும் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி ஆகியோர் 153,153(1)(a) (b) மற்றும் 500 இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் செய்தவர்கள் ஆகிறார்கள். மேற்கண்ட கட்டுரையினை நாம் உதாசீனம் படுத்தினாலும், தற்போது தொடர்ச்சியாக நடந்துவரும் நிகழ்வுகள் தமிழ்நாட்டில் மத கலவரத்தை ஏற்படுத்திவிடுமோ என்று நான் அஞ்சுகின்றேன். எனவே அய்யா அவர்கள் தயவு கூர்ந்து உடனடியாக தலையிட்டு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, வெளியீட்டாளர் மற்றும் பதிப்பாளர் கே. சுவாமிநாதன் மற்றும் கலாச்சாரச் சீரழிவுக்கான காரணங்கள் கட்டுரையின் ஆசிரியர் சத்யா ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இணைப்பு :
1. 27.03.2019 தேதியிட்ட கட்டுரையின் நகல்
2. 13.03.2019 தேதியிட்ட அரசாணை எண்.169 நகல்
3. W.P(M.D) No.6238 of 2019 என்ற வழக்கின் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு நகல்
இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள
(இரா.குணசேகரன்)
(குறிப்பு: இதே காரணங்களின் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் மானமிகு. அ.அருணகிரி உரத்தநாட்டிலும், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் மானமிகு. ப.முத்தையன் தாம்பரத்திலும், திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் மானமிகு. ச.இன்பக்கனி சென்னை வியாசர்பாடியிலும், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் மானமிகு தி.செ.கணேசன் மாதவரத்திலும், சென்னை மண்டல திராவிடர் கழக செயலாளர் மானமிகு தே.செ.கோபால் மாதவரத்திலும், காரைக் குடி திராவிடர் கழகத்தின் சார்பில் காரைக்குடி மாநகர காவல்நிலையங்களில் புகார் மனு கொடுத்துள்ளனர் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...