குடந்தை
என்ற கும்பகோணம் தன் வரலாற்றில் புரட்சி
மகுடத்தைப் பொறித்துக் கொண்டது. கும்பகோணம் என்றால் மகாமகம் என்பதுதான்
மூட பக்தி மக்களின் நினைவிற்கு
வரும்.
இந்த
நிலையில் இது போன்ற மூட
மக்களை நெடுந் தூக்கத்திலிருந்து கரையேற்றிட
இந்த ஒரே ஒரு இயக்கம்தான்
இந்த நாட்டில் இருக்கிறது. 28 விழுக்காடு மலக்கழிவும், 40 விழுக்காடு சிறுநீர்க் கழிவும் கொண்டது அந்த
மகாமகக் குளம் என்று கருஞ்சட்டைத்
தோழர்களாகிய நாம் கூறினால் அதற்கு
உள்ளர்த்தம் கற்பிப் பார்கள் கருத்து
விழியை இழந்தவர்கள்.
இந்த
நீரில் இ.கோலி (எசரிக்கியா
கோலி) கிருமிகள் குடி கொண்டிருந்தன.
அந்தக்
குளத்து நீரைப் பரிசோதனைக்கு அனுப்பி,
அதனடிப்படையில் தகவலைத் தெரிவித்தவர் தஞ்சாவூர்
மாவட்ட ஆட்சியர் ('DT NEXT' 23.2.2016).
மகா
மகத்தின் போது பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்ட 25,000 காவல்துறையினர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர் என்பது கூடுதல் தகவலாகும்.
இத்தகைய மூடத்தனத்தை மொத்த குத்தகை எடுத்த
மகாமகம் நடைபெறும் ஓர் ஊரில்தான் கடவுள்
ஒழிக, மதம்
ஒழிக, ஜாதி ஒழிக, மூடநம்பிக்கைகள்
முற்றாக ஒழிக என்ற முழக்கத்தை
மக்கள் மத்தியில் வைக்கும் திராவிடர் கழகத்தின் -அதன்
மாணவர் அமைப்பினர் மாநாடு நடைபெற்றது என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.
1943 டிசம்பர் முதல்
தேதியன்று குடந்தைக் கல்லூரி - அதன் விடுதியில் பிரசவிக்கப்பட்டது.
திராவிட மாணவர் கழகம்.
'பிராமண'
மாணவர்களுக்குத் தனித் தண்ணீர்ப் பானையாம்
- அதில் பார்ப்பனர் அல்லாத 'சூத்திர' 'பஞ்சம'
மாணவர்கள் தண்ணீர் எடுத்துக் குடிக்கக்
கூடாதாம் - என்னே கொடுமை!
இந்த
மனித உரிமைக் கொடுமைக்கு - இழிவுக்கு
வேட்டு வைக்கப்பட்டது. சம்பந்தம் என்ற மாணவர் அந்தப்
'பிராமண' தண்ணீர்ப் பானையிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடித்ததால்
பிரளயமே ஏற்பட்டது
போல கூச்சல் போட்டது ஆரியம்!
விடுதி காப்பாளர் கணேச அய்யர் பூணூலை
உருவிக் கொண்டு அந்த மாணவனுக்கு
ஒரு ரூபாய் அபராதம் விதித்தார்.
மானமிகு
எஸ். தவமணிராசன் தலைமையில் மாணவர்கள் திரண்டனர். போர்க் கொடி உயர்த்தினர்.
அதன் விளைவு அபராதம் ரத்துச்
செய்யப்பட்டது.
கழகத்
தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி
அவர்கள் நேற்றைய குடந்தை மாநாட்டில்
(8.7.2018) மிகச் சரியாக சொன்னதுபோல அந்த
மனித உரிமைப் போராட்டத்தால் தோன்றியதுதான்
திராவிட மாணவர் கழகம் (1.12.1943).
அதற்கு
முக்கிய காரணமாகவிருந்த தவமணிராசன், கவிஞர் கருணானந்தம், பூண்டி
கோபால்சாமி (செங்குட்டுவன்), கோ. இலட்சுமணன் ஆகியோரின்
உருவப் படங்கள் திறந்து வைக்கப்பட்டது
மிகவும் பொருத்தமானதாகும்.
அவர்களின்
அரும்பணிகள், ஆற்றலை மாநாட்டில் கழகத்
தலைவர் சிறப்பாக எடுத்துக் கூறி நினைவு கூரப்பட்டது.
அப்படித்
தோற்றுவிக்கப்பட்ட திராவிட மாணவர் கழகத்தில்
நாற்றுகளாக முளை கண்டவர்கள்தான் திராவிடர்
கழகத்தின் தன்னிகரற்ற நமது தலைவர் ஆசிரியர்
மானமிகு கி. வீரமணி போன்றவர்கள்.
பிற்காலத்தில்
திராவிடர் இயக்கத்தில் முன்னணித் தலைவர்களாக முளைத்தவர்கள் எல்லாம் திராவிட மாணவர்
கழகக் கழனியில் விதைக்கப்பட்டவர்களே!
திராவிட
மாணவர் கழகத்தில் அடி எடுத்து வைத்த க.
சண்முகம் (பொத்தனூர்) அவர்கள் பெரியார் சுயமரியாதைப்
பிரச்சார நிறுவனத்தின் தலைவர் ஆவார். இன்றைக்கு
அவர் 96 வயதைக் கடந்த முதுபெரும்
பெரியார் பெருந்தொண்டர். அவர் போன்றவர்கள் எல்லாம்
நேற்றைய குடந்தை மாநாட்டில் பங்கேற்றுப்
பெருமிதம் அடைந்தனர்.
தம்
வாழ்நாளில் இத்தனை ஆயிரம் மாணவர்களை,
இளைஞர்களை இந்த மாநாட்டிலும், பேரணியிலும்தான்
ஒரே நேரத்தில் கண்டேன் என்று அவரைப்
போன்றவர்கள் உணர்ச்சிப் பூர்வமாக சொன்னது - குடந்தை மாநாட்டின் சிறப்புக்கு
அளவுகோலாகும்.
குமரி
முதல் திருத்தணி வரை தோழர்கள் குவிந்தனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேருந்துகளிலும், வேன்களிலும்
வந்து குவிந்தது இந்த மாநாட்டில்தான்.
மாநாட்டின்
முத்தாய்ப்பு - அந்த பத்தொன்பது தீர்மானங்கள்.
கல்வியும்,
அரசின் கடமையும், பாடத் திட்டங்களில் மாற்றம்
தேவை, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக்
கொண்டு வருதல், மாணவர்களின் கடமை,
மறுக்கப்படும் கல்விக்கான உதவித் தொகை, 'நீட்'
முதலிய அனைத்து நுழைவு தேர்வுகள்
ரத்தின் அவசியம், சமூகநீதி, பெண்ணுரிமை, மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுகலாறுகள், தீண்டாமை
ஒழிப்பு - கோயில் கருவறையிலிருந்து தொடங்கப்பட
வேண்டிய அவசியம், இயக்க ஏடுகள், நூல்களைப்
பரப்புதல், நடைபாதைக் கோயில்கள் அகற்றம், நாடு தழுவிய இரு
கட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரம், பிஜேபி ஆட்சி வீழ்த்தப்பட
வேண்டிய அவசியம், அதே போல அதற்குத்
துணை போகும் அதிமுக ஆட்சியும்
அகற்றப்பட வேண்டிய கட்டாயம், தமிழகத்தில்
அகழ் வாராய்ச்சி முடக்கம், பகுத்தறிவாளர்கள் படுகொலை, மாநாட் டின் வழிகாட்டுச்
சூளுரை என்று வரலாறெங்கும் பேசப்படும்
வழிகாட்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சுருக்கமாகச்
சொன்னால் குடந்தை மாநாடு கழகத்தின்
வலிமையையும், வழிகாட்டும் தனித்தன்மையையும் ஒலித்த - ஒளி கூட்டும் மாநாடே!
No comments:
Post a Comment