நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
தரணி ஆண்ட தமிழருக்குத்
தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு
என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பால் தமிழன் புத்தாண்டு சித்திரை முதல் நாளாயிற்று. வெட்கக் கேடு என்னவென்றால் தமிழாண்டுகள் என்று திணிக்கப்பட்டுள்ள 60 ஆண்டுகளின் பெயர்களில் ஒரு பெயர்கூட தமிழில் இல்லை என்பதுதான்! இந்த வெட்கக் கேட்டுக்குப் பொட்டு வைத்துப் பூ சூட்டியது போல சமஸ்கிருதப் பெயர்களைச் சுமந்திருக்கும் இந்த அறுபது ஆண்டுகளும் நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த பிள்ளைகளாம்.
ஆரியக் கலாச்சாரம் என்றாலே அது ஆபாசத்தின் பேரூற்று! இங்கிலாந்தில் விவேகானந்தர் மாக்ஸ் முல்லருடன் சந்தித்த நேரத்தில் முல்லர் சொன்ன கருத்து மிகவும் முக்கியமானது. "இந்துக்கள் மதத்தை ஆராய்ச்சி செய்யுமிடத்து சுவாசமிடும் நுரையீரல் எரிந்து விடும்" என்று விவேகானந்தரிடம் நேருக்கு நேர் சொன்னதுண்டே!
குரு பத்தினியை சந்திரன் எனும் சரடன் கற்பழித்தான் என்பதும், பெற்ற மகள் சரஸ்வதியையே படைத்தல் கடவுளான பிர்மா மனைவியாகக் கொண்டான் என்றும் கூறும் மதத்தை உலகில் எங்காவது கண்டதுண்டா?
ஆரியர்களின் இந்த ஆபாசக் குப்பைகள் திரா விடர் இனத்தின்மீது திணிக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை!
தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கமும், தந்தை பெரியாரால் தொடர்ந்து நடத்தப்பட்ட 'குடிஅரசு', 'பகுத்தறிவு', 'புரட்சி', 'விடுதலை', 'உண்மை' போன்ற ஏடுகளும், கொளுத்திய புரட்சியும், ஏற்படுத்திய விழிப்புணர்வும் தான் தமிழன் தன்னை ஓர் இனத்தவன் என்ற உணர்வுக்கு ஆளாக்கின.
தமிழன் என்று சொல்லிக் கொண்டு அவன் கொண்டாடும் பண்டிகையெல்லாம் ஆரியத்தன்மை கொண்டவையே! 'தீபாவளி' என்ற ஆரியப் பண்டிகை திணிக்கப்பட்டதே மதுரை, செஞ்சி நாயக்கர் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில்தான் (16ஆம் நூற்றாண்டில்).
திராவிடர்களின் திருநாள் தை முதல் நாளான பொங்கல் என்பதை நாடு முழுவதும் பரப்பி நிலை கொள்ளச் செய்தது திராவிடர் இயக்கமே! பொங்கல் வாழ்த்து அனுப்புவது என்ற புதுமையைப் புகுத்தியதும் திராவிடர் இயக்கமே!
இன்றைக்குக்கூட தீபாவளியை அறவே கொண் டாடாத ஊர்கள் தமிழ்நாட்டில் உண்டு. ஆனால் பொங்கல் விழாவை கொண்டாடாத ஊர் எதுவும் இல்லை - தமிழர் வீடு எதுவும் இல்லை.
உலகெங்கும் அறுவடைத் திருவிழா கொண்டாடப் படுகிறது. அந்த வகையில் பார்த்தாலும் தைப் பொங் கல்தான் தமிழர்களின் அறுவடைத் திருவிழாவாகும்.
ஆரியம் அதனையும் சங்கராந்தியாக்கி மதப் புனைவுகளைத் திணித்ததுண்டு. அவற்றை எல்லாம் அம்பலப்படுத்தி பொங்கல் விழாவை முன்னிறுத்தி - ஆரியர் கலாச்சாரம் வேறு, திராவிடர் கலாச் சாரம் வேறு என்று வகைப்படுத்திப் பிரச்சாரம் செய் வதற்கான ஒரு விழாவாக பொங்கல் அமைந்து விட்டது.
உழவன் தான் உழைத்து விளைவித்த புத்தரிசியைக் கொண்டு பொங்கி மகிழும் அந்த உணர்வினை வார்த்தைகளால் வடித்திடவே முடியாது.
வேளாண்மைக்கு முக்கிய கரணியாக இருக்கக் கூடிய மாடுகளுக்கென்றே ஒரு விழா மாட்டுப் பொங்கல்; நண்பர்களை, உறவினர்களைக் கண்டு மகிழும், உறவாடும் ஒரு நாளாகக் காணும் பொங்கல் என்று அறிவுத் திருத்தமாக இயற்கையோடு இயைந்து அமைந்ததுதான் திராவிடர்களின் தமிழர்களின் பொங்கல் திருவிழா.
இந்நாளில் ஆரியக் கலாச்சாரத்தின் அனைத்து இணைப்புகளிலிருந்தும் விடுவித்துக் கொள்ளும் விடுதலை உணர்வினை ஒவ்வொரு திராவிடனும் பெறுவானாக!
இனவுணர்வு பொங்கட்டும்-
பகுத்தறிவுச் சிந்தனை
வானோங்கி வளரட்டும்!
மனிதநேயம்
மலரட்டும்-
தொண்டறத்தால்
சகோதரத்துவத்தைப் பேணும் உள்ளம் விரிவடை யட்டும்!!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!
No comments:
Post a Comment