இந்தி மொழி பேசாத மாநிலங்கள் கூட்டு சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா கூறியுள்ளார். கன்னட வளர்ச்சி ஆணையம் கன்னட மொழி வளர்ச்சிக்காக கருநாடக அரசால் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகிறது.
கன்னட வளர்ச்சி ஆணையத்தின் தலைவரான எஸ்.ஜி.சித்தராமையா, தமிழ் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
‘‘மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு, ரயில்வே, கல்வி, வேலைவாய்ப்பு, வங்கி சேவை கள், அஞ்சலகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும், நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தி திணிக்கப்பட்டு வருகிறது. இந்தித் திணிப்பு மொழி பிரச்சினை மட்டும் கிடையாது, மக்களின் வாழ்வாதார பிரச்சினையாகும். மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன.
எந்தமாநிலத்தைச்சேர்ந்தவர்களாகஇருந் தாலும், எங்கே வேண்டுமானாலும் பணி செய்ய வழி செய்யப்பட்டுள்ளது. இதனால் தென் மாநிலங்களை இந்தி மொழி வழியாக பிறர் ஆக்கிரமித்துவிடுவார்கள். மத்திய அரசு பணிகளுக்கு இந்தி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதே, தென் மாநில மக்களை வேலைவாய்ப்பு ரீதியாக சுரண்டும் முயற்சிதான்.
இதுகுறித்து தென் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை. சிலருக்குத் தெரிந்திருந்தாலும் அக்கறை இல்லை. ‘‘இந்தி பேசத் தெரியாவிட்டால் இந்தி யாவில் இருந்து வெளியேறு'' என்று கன்னடர்களை மிரட்டும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
வாழ்வாதாரம் மற்றும் தாய் மொழி சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க இந்தி அல்லாத மாநிலங்களின் மொழி நல்லிணக்க கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். திராவிட மொழியினரிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த இது உதவும். தாய் மொழியை காப்பாற்றிக்கொள்ள 50 ஆண்டுகளுக்குமுன்பே தமிழகம் எழுச்சியுடன் போராடியது. அப்போது இதை மொழி வெறி என்று கொச்சைப்படுத்தி கடந்து சென்றோம். ஆனால், இப்போதுதான் தமிழர்களின் தொலைநோக்குச் சிந்தனை புரிகிறது. திராவிட மாநிலங்களின் கூட்டமைப்பை உருவாக்கவேண்டும். இதில், தமிழகம் எங்களை வழிநடத்த வேண்டும்.'' -இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காலந்தாழ்ந்தாலும் மிகவும் சரியான - துல்லிய மான முடிவை கருநாடகம் எடுத்துள்ளது வர வேற்கத்தக்கது.
கருநாடகம் என்றாலும் அது திராவிடத்தைச் சேர்ந்ததுதான்; சமஸ்கிருத ஊடுருவலால் அது தமிழிலிருந்து துண்டிக்கப்பட்டது என்பதுதான் உண்மை.
ராஜாஜி அவர்கள் 1937 இல் சென்னை மாநிலத் தின் பிரதமராக இருந்த அந்தக் காலகட்டத்தில் லயோலா கல்லூரியில் உரையாற்றியபோது ‘‘சமஸ் கிருதத்தைக் கொண்டு வரத்தான் முதற்கட்டமாக இந்தியைக் கொண்டு வந்துள்ளேன்'' என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டதுண்டு.
சமஸ்கிருதமானாலும், இந்தியானாலும் அவற் றின் கலாச்சாரம் ஆரிய பார்ப்பனீயக் கலாச்சாரமே! இந்தியில் துளசிதாசர் இராமாயணம் என்றால், சமஸ்கிருதத்தில் வேதங்களும், ஸ்மிருதிகளும், இதிகாசங்களும், புராணக் குப்பைகளும்தான் அதிகம்.
இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், அவை வெறும் மொழி திணிப்பு மட்டுமல்ல; அதன் பெயரால் ஆரிய கலாச்சாரத் திணிப்பே!
இந்தி அபாயத்தை ‘‘தமிழிற்குத் துரோகமும் இந்தியின் ரகசியமும்'' எனும் தலைப்பில், ‘குடிஅரசு' இதழில் (7.3.1926) தந்தை பெரியார் எழுதினார் என்றால், 92 ஆண்டுகளுக்கு முன்பே எவ்வளவுத் தொலைநோக்கோடு தந்தை பெரியார் எச்சரித்திருக்கிறார் என்பதை உணரவேண்டும். கருநாடகத்தைப் போல கேரளமும், ஆந்திராவும், தெலங்கானாவும் உணர்ந்து தமிழ்நாட்டோடு ஒன்றுபட்டால் அந்தக் கணமே இந்தி - சமஸ்கிருதத் திணிப்பு என்ற எண்ணம் புதைக் குழிக்குப் போய்விடுமே!
No comments:
Post a Comment