இந்திய ராணுவத்தைவிட தங்களது அமைப்பு வலிமை யானது என இழிவுபடுத்திப் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? இதே நேரத்தில் ஒரு இசுலாமிய அமைப்பு இப்படி பேசியிருந்தால், என்ன நடந்திருக்கும் என்பதும் இப்போது எழும் கேள்வியாகும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், பீகார் மாநிலம் முசாபர்பூரில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மத்தியில் பேசும் போது, ‘‘போருக்கு வீரர்களை தயார்படுத்த ராணுவத்திற்கு ஆறேழு மாதங்கள் தேவைப்படும். ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது மூன்றே நாள்களில் போருக்கு ஆட்களை தயார் செய்யும். இதுவே எங்களின் திறமை'' என்று கூறியுள்ளார்.
‘‘நாட்டிற்கு அச்சுறுத்தல் என்றதும் அதற்காக உடனடி யாக களமிறங்க ஆர்.எஸ்.எஸ். தயாராக இருக்கிறது. சட்டமும், அரசியலமைப்பும் இடம் கொடுத்தால், அதனை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்றும் அவர் கூறியுள்ளார்.
‘‘ஆர்.எஸ்.எஸ். என்பது ராணுவ அமைப்போ அல்லது மத்திய துணை ராணுவ அமைப்போ அல்ல. நாங்கள் குடும்ப அமைப்புபோல செயல்பட்டாலும், ராணுவம் போன்றஒழுங்குகளைபின்பற்றுகிறோம்.ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் எப்போதும் நாட்டிற்காக தியாகம் செய்யத் தயாராக இருக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சொந்த வாழ்க்கை, குடும்பம் மற்றும் சமூகப் பணியில் சிறப்பாக செயல்படுவதாகவும்'' மோகன் பகவத் பாராட்டி யுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். என்பது வன்முறை செயல்கள் மூலம் சிறுபான்மையினரை அன்னியப்படுத்துகிற ஒரு மதவெறிக் கூடாரமாகும். பன்மைத்தன்மை கொண்ட இந்தியாவை இந்துக்களுக்கான நாடாக்க வேண்டும் என்ற இந்துராஜ்ஜியம் பேசுகிற அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ்.
இந்திய தேசம் என்பது வேற்றுமையில் ஒற்றுமையுடன் பல்வேறு மொழி, தேசிய இனங்களை கொண்ட ஒரு பெருநிலப்பரப்பு. ஆனால், இந்த நிலப்பரப்பில் இருக்கிற அத்தனை மொழிகளையும், தேசிய இனங்களையும் வன்முறை மூலமாக ஒழித்துக் கட்டி சமஸ்கிருதத்தையும், இந்தியையும் இந்த நிலப்பரப்பின் மொழிகளாக்கி, இந்து என்கிற ஒற்றை கலாச்சாரத்தை உருவாக்க முயலும் பாசிச அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.!
நாடு விடுதலை அடைந்ததுமுதல் இன்று வரை ஆர்.எஸ்.எசும், அதன் பல்வேறு முகங்கள் கொண்ட அமைப்புகளும்தான் மத மோதல்களுக்குக் காரணமாக இருந்து வருகின்றன. மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பும்கூட! அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து நாடு முழுவதும் மத வன்முறைகளுக்கு வித்திட்டதும் இவர் கள்தான், குஜராத் இனப்படுகொலைகளை நிகழ்த்தியதும் இவர்கள்தான்!
இதன் அரசியல் பிரிவான பாஜக மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் அமர்ந்துவிட்டதால், தேசத்தின் ராணுவத்தை இழிவாக பேசுகிறார்கள். இதுபோன்ற கருத்தை வேறு ஒருவர் தெரிவித்திருந்தால் ஆன்ட்டி இந்தியன், தேசத்துரோகி, பாகிஸ்தான் கைக்கூலி என சங் பரிவார் வகையறாக்கள் வரிந்து கட்டிக் கொண்டு முத்திரை குத்தும்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பேசினால், எல்லையில் பனியில் காவல் காக்கிற ராணுவ வீரரைப் போல தாங்கிக் கொள்ளுங்கள் என எகத்தாளம் பேசுகிற பாஜகவினர், இன்று அந்த வீரர்களை இழிவாகப் பேசுகிற போது, அமைதி காக்கிறார்கள். எல்லையில் கொட்டும் பனியிலும், வாட்டும் குளிரிலும் நாட்டைக் காக்கப் போரிடும் ராணுவ வீரர்களை இழிவுபடுத்திய மோகன் பகவத்தை தேசத் துரோகப் பட்டியலில் சேர்ப்பார்களா?
தேசிய இன பிரச்சினையை பேசினாலே தேச துரோக வழக்கு போடும் அரசுகள், தேசத்தின் ராணுவத்தையே அவமதித்து தங்களது கும்பல்தான் வலிமையானது எனப் பேசியிருக்கும் மோகன் பகவத்மீது எத்தனை தேசத் துரோக வழக்குகள் போடப்படவேண்டும்?
‘‘இதுபோல் ராணுவத்தின் இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள், வீரமரணமடைந்த வீரர்களை தரக்குறைவுப் படுத்தும் வகையில் காங்கிரசு கட்சியோ, வேறு கட்சிகளோ கருத்து கூறியிருந்தால், இனி வரும் தேர்தல்களில் அவர்கள் கூறிய கருத்துகளைச் சுட்டிக்காட்டி இந்தியர்களுக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தியிருக்கும்.
‘‘இசுலாமிய அமைப்புகளோ அல்லது இதர சிறுபான்மை அமைப்புகளோ இப்படிக் கூறியிருந்தால், அவர்களை பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள், வாட்டிகனுக்குச் செல்லுங் கள்'' என்று அனைத்து பாஜக மத்திய அமைச்சர்கள் முதல் சில்லுண்டிகள் வரை போராட்டம் நடத்தி இருப்பார்கள். அவர்கள்மீது தேசத் துரோக வழக்கு பாயும். பாஜகவிற்கு எதிராக கருத்து சொல்பவர்கள், பாஜகவின் திட்டங்களை எதிர்ப்பவர்களை தேச விரோதி என்று சொல்வது அந்தக் கட்சித் தலைவர்களின் வாடிக்கை. இராணுவத்தையே விமர்சித்துவிட்டு அதற்கு மழுப்பலான ஒரு விளக்கத்தையும் ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. ஆனால், இது குறித்து பாஜக வாய் திறக்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மோகன்பகவத்தின்சர்ச்சைபேச்சுகுறித்துடுவிட் டரில்கருத்துபதிவிட்டுள்ளஇராகுல்காந்தி
‘‘ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சு ஒவ்வொரு இந்தி யரையும் அவமானப்படுத்துவதாக உள்ளது. ஏனெனில் நாட்டிற்காகப் போராடி உயிரை விட்ட ஒவ்வொருவரையும் அவமரியாதை செய்வதுபோல உள்ளது அவரின் பேச்சு'' என்று மிகவும் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்.
வழக்கம்போல உயர்ஜாதி ஊடகங்கள் மவுன விரதம் மேற்கொள்கின்றன. எவ்வளவு சீக்கிரம் இவ்வாட்சி ஒழி கிறதோ, அந்த அளவுக்கு நாட்டுக்கு நல்லதே!
No comments:
Post a Comment