Friday, April 27, 2018

நீதித்துறையில் பெண்களும், தாழ்த்தப்பட்டவர்களும்!

உயர்நீதிமன்றங்களில் தலித் தலைமை நீதிபதி ஒருவர் கூட இல்லை; தாழ்த்தப்பட்டோருக்கான வன்கொடுமை தடுப்பு சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொண்டதை கண்டித்துப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் உயர்நீதிமன்றங்களில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒரு நீதிபதி கூட தலைமை நீதிபதியாக இல்லை என்பது அதிர்ச்சிக்குரியது. 1989இல் உருவாக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோருக் கான வன்கொடுமை தடுப்பு சட்டம் அமலில் இருந்து வந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் அந்த சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் அளவுக்கு  அதில் திருத்தங்களை கடந்த 20ஆம் தேதி மேற் கொண்டது. இதற்கு தலித்துகள் எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத் தில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
இத்தனைப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவின் உயர் நீதிமன்றங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைமை நீதிபதி ஒருவர் கூட இல்லை என்ற தகவல் வேதனை அளிக்கிறது.   கடந்த 8 ஆண்டுகளாக உச்சநீதிமன்றங்களில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்து வழக்குரை ஞர்களுக்கு நீதிபதிகளாக இதுவரை பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. நாட்டில் உள்ள 24 உயர்நீதி மன்றங்களில் ஒரு தாழ்த்தப்பட்ட நீதிபதி கூட தலைமை நீதிபதியாக பணியாற்றியது இல்லை.
கடைசியாக 2010ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த கேரளா வைச் சேர்ந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்றது டன் சரி; அதன்பிறகு அப்பதவிகளுக்கு வேறு தாழ்த் தப்பட்டவர்கள் யாரும் இன்னும் நியமனம் செய் யப்படவில்லை. இதுகுறித்து ஜஸ்டிஸ் கே.ஜி.பால கிருஷ்ணன் கூறுகையில், தாழ்த்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்த ஒருவர் திறமையான அனுபவம் பெற்ற மூத்த வழக்குரைஞர் என்றால் அவரை நீதிபதியாக நியமனம் செய்ய எந்தவிதத் தடையும் கிடையாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்டத் துறையில் உயர் பதவிகளுக்கு சட்டத்துறை அமைச்சகமும், உச்சநீதி மன்றமும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த நீதிபதி களை பரிந்துரை செய்து தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளது. எனினும் அந்தக் கடிதங்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எந்த ஒரு கருத்தை யும் தெரிவிக்கவில்லை.
இந்திய நீதித்துறையில் முக்கால்வாசி இடங்களை பார்ப்பனர்கள் பிடித்துள்ளனர். உச்சநீதிமன்றத்திலும், மாநில உயர்நீதிமன்றங்களிலும் பார்ப்பன நீதிபதிகள் நிரம்பி வழிகின்றனர். அங்கு இட ஒதுக்கீடு இல்லாத நிலையில் மற்ற யாருக்கும் இடம் கொடுக்காவண்ணம் 3 விழுக்காடு உள்ள பார்ப்பனர்களே தங்கள் ஆதிக் கத்தைச் செலுத்தி வருகின்றனர்.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 24 என்றால், அதில் பார்ப்பனர்கள் 9 பேர். இந்தியா முழுவதும் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண் ணிக்கை 380 பேர்கள் என்றால், இதில் பார்ப்பனர்கள் 166 பேர்.
கீழமை நீதிமன்றங்களில் இந்தியா முழுவதும் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 160; இதில் பெண்கள் 4 ஆயிரத்து 704 பேர்கள் மட்டுமே; மீதி இடங்கள் அனைத்திலும் ஆண்களின் ஆதிக்கம் தான்.
உச்சநீதிமன்றத்தில் ஒரே ஒரு பெண் நீதிபதி தமிழ்நாட்டைச் சேர்ந்த பானுமதி யாவார். 2014 முதல் இதுவரை, புதிதாக ஒரு பெண்கூட உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை.
தாழ்த்தப்பட்டவர்களும், பெண்களும் இந்து மதத்தில் அய்ந்தாம் வருணத்தவர்களே என்பதால் நீதித் துறையில் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டவர் களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் இல்லை. சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீதம் அளிக்கப்பட்டாலொழிய, அவர்களின் உரிமைகளைத் தட்டிக் கேட்கும் வாய்ப்புக் கிடைக்கப் போவதில்லை. அந்த நிலை அவர்களுக்குக் கிடைக்கக்கூடாது என்பதால்தான் இந்த முட்டுக்கட்டை!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...