Friday, April 27, 2018

நாத்திகமே நம்பிக்கை ஒளி!

உலக நாத்திகர் மாநாடு  ஒப்பரிய மாநாடாக மூன்று நாள்கள் திருச்சியில் நடைபெற்றது. உலகின் பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்றது தனிச் சிறப்பாகும். தமிழ்நாட்டி லிருந்தும், திராவிடர் கழகத் தோழர்கள் மட்டுமல்ல; பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், கட்சிகளுக்கு அப் பாற்பட்ட பகுத்தறிவாளர்கள் இருபாலரும் பங்கேற்றனர். குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் பெரும் எண் ணிக்கையில் கலந்து கொண்டது நம்பிக்கை ஒளியைக் கொடுக்கிறது.
"மதம் - மதத்தைச் சேர்ந்தவர்களிடம் தான் தொடர்பு கொண்டிருக்கிறது. பகுத்தறிவு மனித சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொண்டிருக்கிறது" என்று 46 ஆண்டுகளுக்கு (14.10.1971) முன்பே சொன்னவர் தந்தை பெரியார். அது எத்தகைய உண்மை என்பதற்கு இந்த மாநாடு ஓர் எடுத்துக்காட்டாகும்.
மதம் மாற்றத்திற்கு இடமில்லாதது - ஆனால் மாறுதல் என்பதுதான் மாறாதது என்பது அறிவியல் சிந்தனை. உலக நாத்திகர் மாநாட்டில் திமுக மகளிரணி செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி. அவர்கள் உரையாற்றுகையில் கடவுள், மதக் காரணங்களுக்காக சிந்தப்பட்ட ரத்தம் தான் உலக வரலாற்றில் அதிகம் என்றார். இதனை மறுக்க முடியுமா?
இந்தியாவை எடுத்துக் கொண்டால் 450 ஆண்டு கால வரலாறு படைத்த இசுலாமியர்களின் வழிபாட்டுத்தலத்தை இடித்தவர்கள் யார்? இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் தானே - இந்து ராஜ்ஜியத்தை ஏற்படுத்துவோம் என்று சொல்லுகிற ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார், பிஜேபி வகையறாக்கள்தானே!
ஆனால், நாத்திகம் என்ன சொல்லுகிறது? மனித நேயத்தை வலியுறுத்துகிறது.  உலக நாத்திக அமைப்பான அய்.எச்.இ.யூ (மிபிணிஹி) என்பதன் விளக்கம் என்ன?
மனிதநேய நன்னெறி ஒன்றியம் (மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ பிuனீணீஸீவீst ணீஸீபீ ணிtலீவீநீணீறீ ஹிஸீவீஷீஸீ) என்ற அமைப்பின் பெயரிலேயே அதன் நோக்கும், பண்பும் பளிச்சென்று ஒளிவிடவில்லையா?
கடவுள் கருணையைக் காட்டியுள்ளதா? மதத்தில் கருணைக்கும், மனிதநேயத்துக்கும் இடம் உண்டா? இந்துக் கடவுள்களின் கைகளில் கொலைக் கருவிகள் இருப்பதன் பொருள் என்ன? இந்துக் கடவுள்கள் சண்டை போட்டன, எதிரிகளைக் கொன்றன - என்பதெல்லாம் எதைக் காட்டுகின்றன?
கடவுளே விபச்சாரம் செய்தது என்றால் இந்தக் கேவலத்தை என்னவென்று சொல்லுவது? மதம், கடவுள், நம்பிக்கை அவசியம் என்று கருதுபவர்கள் அவரவர்களின் வீட்டுக்குள் வைத்திருக்கலாம், பூஜையறைகளில் பூசிக்க லாம். அதனை யாரும் தடுக்கப் போவதில்லை.
அதனைப் பொது வெளிக்குக் கொண்டு வரும்போது தான் பிரச்சினையே; பார்ப்பனர்களின் அரசியல் குருவான ராஜகோபாலாச்சாரியார் ஒரு முறை சொன்னாரே!
"நம் நாட்டில் மற்றவர்கள் சண்டையைக் காட்டிலும் பக்தர்கள் சண்டையே அதிகம். என் தெய்வம் பெரிதா? உன் தெய்வம் பெரிதா? என்ற சண்டைதான் அதிகம்" என்று அவர் முதல் அமைச்சராக இருந்தபோது சென்னை தமிழிசை சங்க கட்டடத் திறப்பு விழாவில் (15.4.1953)  சொன்னதுண்டு.
காஞ்சிபுரம் யானைக்கு வட கலை நாமம் போடுவதா, தென் கலைநாமம் போடுவதா என்ற வழக்கு இலண்டன் பிரிவு கவுன்சில் வரை போய் உலகமே சிரிக்கவில்லையா?
இன்றைக்கும் இந்துத்துவாவாதிகள் பசு மாமிசம் என்ற பெயரால் படுகொலைகளைச் செய்து கொண்டு இருக்கவில்லையா? குஜராத்தில் இரண்டு ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறுபான்மை மக்களை இந்துத்துவாவாதிகள் கொன்று குவிக்கவில்லையா? நிறை மாதக் கர்ப்பிணிப் பெண்ணின் குடலை கத்தியால் கிழித்து அந்தச் சிசுவைத் தீயில் தூக்கி எறிந்து குத்தாட்டம் போட்ட கொடியவர்கள் யார்? யார்?
மதம் அபின் என்று சும்மாவா சொன்னார் கார்ல் மார்க்ஸ்? ஜெகத் குரு என்று பார்ப்பன வட்டாரம் ஊதிப் பெருக்கி ஆகாயத்தில் பட்டமாகப் பறக்க விடுகிறார்களே - அந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி 'நாஸ்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே!' என்று திருவாய் மலர்ந்தருளவில்லையா?
"ஆயுர் வேதத்தில் "நாஸ்திகனுக்கு வைத்யம் செய் யாதே" என்று அதில் சொல்லியிருக்கிறது. அது இந்த உள்ளார்த்தத்தில்தான். கேட்கிறபோது, "இதென்ன? கருணையில்லாமல் இப்படிச் சொல்லியிருக்கே!" என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் இப்படிச் சொன்னதே கருணையில்தான்." (தெய்வத்தின் குரல் பாகம் 3 - பக்கம் 734).
கருணைக்கு எப்படிப்பட்ட விளக்கம் வைத்துள்ளனர் பார்த்தீர்களா? "கடவுளை மற மனிதனை நினை" என்று சொன்ன தந்தை பெரியார் எங்கே? காவி வேட்டிக்குள் மறைந்திருக்கும் காழ்ப்புணர்வும், கயமைத்தனமும் எங்கே - எங்கே?
இப்பொழுது யாரும் சொல்லட்டும்! மானுட சமூகத் துக்குத் தேவை ஆத்திகமா - நாத்திகமா என்று.
உலகில் அமளி குறைந்து அமைதி ஆட்சி செய்ய, சகோதரத்துவம் செழித்தோங்க மலரட்டும் எங்கும் எங்கும் நாத்திகத் தென்றல்.
நாத்திகமே - எதிர்கால நம்பிக்கை!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...