காந்திநகர், அக்.20 குஜராத் தேர்தல்
தேதியை அறிவிப்பதில் தேர்தல் ஆணையம் தாமதித்து வருவதன் உள்நோக்கம் குறித்து
பாஜக அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் காங்கிரசு உள்ளிட்ட
எதிர்க்கட்சிகள் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்ற நிலையில், பாஜக முதல்வரான
விஜய் ரூபானியின் குஜராத் மாநில அரசு பல்வேறு சலுகைத்திட்டங்களை
அறிவித்துள்ளது.
தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில் குஜராத் மாநில அரசு ஆசிரியர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பிற அரசுத்துறை ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.
குஜராத் மாநில துணை முதல்வர் நிதின் படேல் அறிவிப்பின்படி, குஜராத் மாநில அரசு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதிய நிரந்தரம் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் களுக்கு ஊதிய உயர்வு செய்வதாகவும் அறிவித் துள்ளது.
105 நகராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரை அடிப் படையில் ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மா வத்சால்யா திட்டத்தின்கீழ் மருத்துவ சிகிச் சைக்கு ரூ.2 லட்சத்தின்கீழ் பயன்பெறும் பய னாளிகள் ஆண்டு வருவாய் 1 லட்சத்து 50ஆயிரம் என்ற கட்டுப்பாட்டினை 2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தி அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment