ஷோபா டே
இந்தியாவில் திருவிழாக் காலம் என்று
அழைக்கப் படுவது அதிக அளவில் இறுதி ஊர்வலங்களைக் கொண்டதாக இருக்கிறது.
மிகுந்த அதிர்ச்சி அளிக்கத் தக்கதும், அதே நேரத்தில் எளிதாக
தவிர்த்திருக்கக் கூடியதுமான, மும்பை ரயில் மேம்பால கூட்ட நெரிசலில் 23
மனித உயிர்களின் இழப்பு, அவ்வப்போது இது போன்ற மக்களின் இறப்புகளைப் பற்றிய
அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ளும் மும்பை நகருக்கு மட்டுமன்றி, ஒட்டு மொத்த
இந்தியாவையும் அதிர்ச்சி அடைந்து விழித்தெழச் செய்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்
காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு நமக்காக விட்டுவிட்டுச் சென்ற நமது இரயில்வே
துறை, மக்களுக்குப் பயன் அளிக்கும் வழியில் இல்லாமல் மிகமிக மோசமான
கட்டமைப்பைப் பெற்றதாக இன்று இருக்கிறது. அன்றாடம் ரயில் விபத்துகள்
ஏற்படாமல் இருப்பது ஏதோ ஓர் அற்புதம் போலவே தோன்றுகிறது. இந்தியா
முழுவதிலும் உள்ள ரயில்வே மேம்பாலங்கள், மக்கள் கடந்து செல்லும் பாலங்களைப்
பற்றிய ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டால், அதன் முடிவுகள் உங் களை மிகப்பெரிய
அதிர்ச்சிக்கு உள்ளாக்க இயன்றதாக இருக்கும். ஒரு விசாரணை ஆணையத்தை அமைப்
பதை விட உருப்படியானதொரு வழியில் ரயில்வே துறை அதிகாரிகளை நடவடிக்கை
எடுக்கச் செய்வதற்கு ஒரு நகர்ப்புற ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 23 மக்கள்
உயிரிழக்க வேண்டியதாக இருக்கிறது.
உறுதியுடன் செயல்படுபவர் என்ற பெயர்
பெற்ற, மும்பை நகர வாசியான ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல், ரயில்வே
துறையின் திறமையின்மை யையும், சுறுசுறுப்பின்மையையும் அவரது முகத்தில்
அறைவதைப் போல் தோன்றுவதை நன்றாக உணரவே செய்கிறார்.
அவரது அமைச்சரகமும், அவரது பெயரும் இந்த நிகழ்ச்சியில் தாக்குதலுக்கு உள்ளாகி யுள்ளன. மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள இயன்ற அளவுக்கு அறிவு படைத்தவராகவும் அவர் இருந்தார். அதனால்தான் புல்லட் ரயில் பற்றிய விவாதத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. மிகுந்த ஆடம்பரத்துடன், மார் தட்டிக் கொண்டு மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ள மிகுந்த செலவு கொண்ட பயண திட்டம்தான் இந்த புல்லட் ரயில் திட்டம்.

அதற்கான செலவினை ஒப்பிட்டுப் பாருங்கள்.
பாங்காக்கை தென்சீனாவுடன் இணைப்பதற்கான 3000 கி.மீ. தொலைவு கொண்ட புல்லட்
ரயில் திட்டத் துக்கான செலவு 5.5 மில்லியன் டாலர்கள் மட்டுமே. ஆனால்,
மும்பையை அகமதாபாத்துடன் இணைக்கும் 500 கி.மீ. தொலைவு கொண்ட புல்லட் ரயில்
திட்டத் துக்கான செலவினம் 17 பில்லியன் டாலர். பாருங்கள்! இதுபோன்ற புல்லட்
ரயில் நமக்குத் தேவையா? நிச்சயமாகத் தேவையே இல்லை. யார் அதனைப்
பயன்படுத்தப் போகிறார்கள்? அதிவேகமாக அகமதா பாத்துக்கு மக்கள் சென்றடைய
வேண்டிய அவசியம் என்ன? அவ்வாறு செல்ல தின்று கொழுத்த வியா பாரிகளைத் தவிர
வேறு யார் இருக்கிறார்கள்? மும்பை மாநகரத்தின் ஒரு முனையை மற்றொரு
முனையுடன் இணைக்கும் மாநகர ரயில் பயணத்தில் மக்கள் கூட்ட வெள்ளத்தில்,
நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். அன்றாடம் பயணம் செய்யும் கோடிக்கணக்கான
பயணிகளுக்குப் பயன்படும்படி நகர்ப்புற ரயில் போக்குவரத்தை
மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்குவதை விட்டுவிட்டு, நம் மீது தேவையே அற்ற
இந்த புல்லட் ரயில் திட்டம் திணிக்கப்படுகிறது.
இந்த இந்தியா-ஜப்பான் கூட்டு திட்டம் நுண்ணிய மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படாமல் போனால், இந்த நிர்வாகமே தடம் புரண்டு போய்விடும் என்பது மட்டும் நிச்சயமானது ஆகும். அகமதாபாத்துக்கு அடிக்கடி செல்லும் மக்கள் அங்குள்ள மக்களின் மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதை கவனித்து வருகின்றனர். எப்போதும் மவுனமாக வாய் மூடி இருந்து, மோடி-ஷா-அதானி மூன்று பேரையும் கண்களை மூடிக்கொண்டு ஆத ரித்து வந்த சாதாரணமான வியாபாரியும் கூட, இழந்து போன தங்கள் குரலைத் திரும்பப் பெற்று உரக்கப் பேசுவதுடன், நகைச்சுவை உணர்வோடும் பேசத் தொடங்கியிருப்பதாக மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர். மக்களின் அரசியல் விசுவாசத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்வதைச் சுட்டிக்காட்டும் நிகழ்ச்சிகள் போதுமான அளவுக்கு சமூக வலைதள மேடைகளில் நடந்து கொண்டிருக்கின்றன. மக்களை நம்பவைத்து ஏமாற்றி விட்டதற்காக, மோடியைத் துணிவுடன் கண்டித்து கேலி செய்யும் கேலிச் சித் திரங்கள் ஏராளமாக புதிது புதிதாக தோன்றிக் கொண்டே இருக்கின்றன. தங்கள் வியாபாரத்தை இழந்துவிட்ட வணிகர் சமூகத்தின் கோபம் மாபெரும் பொருளாதார பேரிழப்பை ஏற்படுத்திய பண மதிப் பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களாக உருவெடுத்து வந்தன.
நடுத்தரக் கடைக்காரர்களில் இருந்து பெருந்தொழிலதிபர்கள் வரை, ஒட்டு மொத்த குஜராத் மாநிலமே, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு நடைமுறை இரண்டும் எதேச்சதிகாரத்துடன் நடைமுறைப்படுத்தப் பட்டதை எதிர்த்து கோபத்தால் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. குஜராத்தில் ஒரு தடையை நீங்கள் விதிக்க நேர்ந்தால், அதாவது வன்முறையைக் கையாள நேர்ந்தால், உடனடியாக நீங்கள் மக்கள் விரோதியாக ஆகிவிடுகிறீர்கள். தங்களது ஆதர்ச நாயகனான நரேந்திர மோடிக்கு எதிராக இந்த அளவுக்கு பலமாக மக்கள் எழுச்சி பெறுவார்கள் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அன்றாடம் மக்களிடைய பேசிக் கொள்ளப்படும் கேலிப் பேச்சுகள் ஒரு புறமிருக்க, நன்கு உணரக்கூடிய ஏமாற்ற உணர்வு மக்களிடையே நிலவுவதையும், அவற்றை வெளிப் படுத்துவதற்கான தொரு மக்களின் புரட்சி கனன்று கொண்டிருப்பதையும் நன்றாகக் காணமுடிகிறது. குஜராத் மக்களின் உணர்வு களை நன்கு அறிந்திருக்கும் டில்லி எஜமானர்கள், மக்களின் இந்த புதிய மனநிலையைக் கண்டுணர்ந்து மிகப் பெரிய அளவில் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்து வருகின்றனர்.

சகிப்புத் தன்மையின்மையின் கொடூரமான முக
மும் குஜராத்துக்குள் தென்படுகிறது என்ற கருத்தும் நிலவுகிறது. 2017
நவராத்திரி கொண்டாட்டங்களின்போது ஆனந்த் மற்றும் வதோதராவில் இருந்து
வந்துள்ள செய்திகளில், மிகுந்த கவலை அளிக்கும் செய்தி, ஜெயேஷ் சோலங்கி என்ற
20 வயது தலித் இளைஞன் மேல் ஜாதி படேல்களின் குழு ஒன்றினால் அடித்துக்
கொல்லப்பட்டிருக்கிறான் என்பதுதான். வெளியே சென்று விட்டு வருகிறேன் என்று
தனது தாயிடம் ஒரு மணி நேரத்துக்கு முன்பு சொல்லிவிட்டுப் போன அந்த இளைஞன்
கொல்லப்படுவதற்கு என்ன குற்றம் செய்தான்? பக்கத்தில் நடைபெற்ற உயர்ஜாதி
கர்பா நடனத்தைப் பார்க்க அவன் துணிந்ததுதான் அவன் செய்த குற்றம்.
கிராமத்தில் உள்ள பழமையான சோமேஸ்வர்
ஆலயத்தில் நடனக்காரர்கள் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருந்தபோது, அந்த
இடத்திற்கு அருகிலேயே, பாதுகாப்பு அற்ற அந்த இளைஞன் கொல்லப்படுவதை எவருமே
தடுத்து நிறுத்த முன்வராத நிலையில் மிகவும் கொடூரமான முறையில்
கொல்லப்பட்டிருக்கிறான். அவன் செய்த ஒரே தவறு பாதுகாப்பான ஒரு தூரத்தில்
இருந்து மேல்ஜாதியினர் நடனத்தைப் பார்த்தான் என்பதுதான். இதுதான் மோடியின்
இந்தியாவா? உயர் வேகம் கொண்ட அதிக விலை கொண்ட புல்லட் ரயிலும் யாருக்கும்
தேவையில்லை; அப்பாவி மக்கள் மீது அன்றாடம் வன்முறைத் தாக்குதல்கள் மேற்
கொள்ளப்படவும் தேவையில்லை.
‘‘இரண்டரை மனிதர்களின் அரசு'' என்று மோடி
அரசை, தான் அளித்த சூடான பேட்டி ஒன்றில் அருண் ஷோரி குறிப்பிட்டுள்ளார்.
கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு முன்பு எப் போதுமே இல்லாத
அளவுக்கு மேற்கொள்ள நடை முறைப்படுத்தப்பட்டதுதான் பணமதிப்பிழப்பு நட
வடிக்கை என்று அருண்ஷோரி மிகச் சரியாக விவரித்துள்ளார். ஒரு தொலைக்காட்சி
நிகழ்ச்சியில் பேசும்போது, ‘‘பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நியாயப்படுத்த
அரசு கூறிய காரணங்கள், நோக்கங் களில் எது இது வரை நிறைவேறியுள்ளது?
கருப்புப் பணம் திரும்ப வந்துவிட்டதா? அனைத்துக் கருப்புப் பணமும் வெள்ளைப்
பணமாக ஆகிவிட்டது. தீவிர வாதம் ஒழிந்துவிட்டதா? தீவிரவாதிகள் இந்தியாவுக்
குள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்'' என்று அருண் ஷோரி பதில்
அளித்துள்ளார்.
‘‘இரண்டரை மனிதர்களின் அரசு'' என்று
மக்கள் வெளிப்படையாகவும், வேகமாகவும் பேசுவதைப் பற்றிதான் மிகவும் புகழ்
பெற்ற சிந்தனையாளர்களும் மேலும் மேலும் பேசுகிறார்கள். மக்களின் மனநிலையில்
ஒரு மாபெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதற்கு இது மற்றுமொரு நல்ல
சான்றாகும்.
கடந்த பொதுத்தேர்தலில் பா.ஜ.க. பெற்ற
மாபெரும், வியக்கத் தக்க வெற்றியைக் கண்ட மக்களில் எவருமே, மக்கள்
மனநிலையில் இத்தகைய மாற்றம் ஏற்படப் போகிறது என்று எதிர்பார்த்து இருக்க
மாட்டார்கள். நீண்டதொரு காலத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதர வாளராக இருந்த
நான் கடந்த பொதுத் தேர்தலில், பா.ஜ.க.வுக்கு வாக்களித்தேன் என்பதை ஒப்புக்
கொள்வதில் எனக்கு எந்தவித சங்கடமும் இல்லை. நாட்டிற்கு வளர்ச்சியை
ஏற்படுத்துவதாகவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதாகவும் உறுதி
அளிக்கும் பா.ஜ.க.வுக்கு ஒரு மாற்றத்திற்கான வாய்ப்பை அளித்துப்
பார்க்கலாமே என்று என்னைப் போன்று நினைத்து வாக்களித்த பல நகர்ப்புற வாக்
காளர்கள் பலரும் இருந்திருக்கக் கூடும். அவர்களுக்கு உறுதி அளித்தவைகளில்
மாற்றத்தைத் தவிர வேறு எதுவுமே கிடைக்கவில்லை. இந்தியாவுக்கு ஒரு மாற்றம்
கிடைத்தது. அதுவும் எப்படிப்பட்ட மாற்றம்? மிகமிக மோசமான மாற்றம். புதிய
வேலை வாய்ப்பு களும் இல்லை; வளர்ச்சியும் இல்லை. கடுமையாகவும் நேரடியாகவும்
கூறுவதானால், இந்தியா அரசு ரீதியாக ஏமாற்றப்பட்டது என்றே சொல்லலாம்.
அதனால் ஏற்பட்ட பேரழிவு ஈடு செய்ய முடியாதது; சரி செய்ய முடியாதது.
வாக்காளர்கள் அனைவரும் ஆட்சியா ளர்கள் மீது கடுங்கோபத்தில் உள்ளனர்.
தீபாவளி சமயத்தில் சந்தடியுடன் விளங்கும்
கொலாபா சந்தைக்கு இந்த வாரம் நான் சென்றிருந்த போது, உற்சாகமற்ற
முகங்களைத்தான் நான் பார்த்தேன். இங்குள்ள பெரும்பாலான வியாபாரிகள்
குஜராத்திகள். பழைய சரக்கு இந்த அளவுக்குத் தேங்கி இருக்கும் நிலையில்,
இந்தநெருக்கடியில் இருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது பற்றி அவர்கள்
வியப்பும் கவலையும் கொண்டவர்களாக உள்ளனர். கார்ப்பரேட் நன்கொடைகள் 70
விழுக்காடு குறைந்து போயிருந்தது. தனது கடையில் இருந்த விற்கப்படாத
பொருள்களையெல்லாம் பார்த்துவிட்டு ஒரு வெள்ளி வியாபாரி, இந்த ஆண்டு
தீபாவளிக்கு முன் வியாபாரம் முன்னேற்றம் அடையும் என்பதற்கான நம்பிக்கை
சிறிதும் இல்லை என்று ஒப்புக் கொண்டார். நீண்ட தொரு காலம் அவர்
காத்திருந்தால், தங்கள் சொந்தக் காரர்களைக் காண்பதற்கு அவர் புல்லட்
ரயிலில் போகமுடியும் என்று நான் கூறினேன். அதனைக் கேட்டு சிரித்த அவர்,
‘‘அதற்கு முன் ஏமாற்றத்தினால், எனது தலையை குண்டினால் வெடித்துக் கொள்வேன்.
2014 இல் இதற்காக நான் பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்கு அளிக்கவில்லை''
என்று கூறினார். இந்தியாவின் நீள அகலம் முழுவதிலும் அந்த உணர்வு எதிரொ
லித்துக் கொண்டிருப்பது அதிகரித்து வருகிறது.
நன்றி: ‘‘தி டெக்கான் கிரானிகிள்'', 06.10.2017 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment