Monday, July 10, 2017

ஹைட்ரோ கார்பன் திட்டம்: போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய முதல்வருக்கு கண்டனம்


நெடுவாசல், ஜூலை 10- கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தும் மக்களை சட்ட மன்றத்தில் முதல்வர் கொச்சைப்படுத்தி பேசியதற்கு நெடு வாசல் போராட்டத்தில் விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்துசெய்யக் கோரி புதுக் கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தினர்.

திட்டம் செயல்படுத்தப் படாது என்ற மத்திய, மாநில அமைச்சர்களின் உறுதிமொழியை ஏற்று மார்ச் 9ஆம் தேதி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. அமைச்சர்களின் உறுதிமொழிகளுக்கு மாறாக கருநாடகாவைச் சேர்ந்த ஜெம் நிறுவனத்துடன் மத்திய அரசு திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டது. இதனால் ஆவேச மடைந்த விவசாயிகள் கடந்த ஏப்ரல்12-ஆம் தேதி முதல் இரண்டாம்கட்டப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் நூதன வடிவங்களில் நடைபெறும் இந்தப் போராட்டம் 89-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது. விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் கலந்துகொண்டு தலையில் பச்சை மற்றும் கருப்புத்துணிகளைக் கட்டிக்கொண்டு போராட்டத் தில் ஈடுபட்டனர்.

போராட்டத் தின் போது ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்துசெய்யவும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். மேலும், சட்டமன்றத்தில் மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் மக்களை கொச்சைப் படுத்தும் விதமாகப் பேசிய முதலமைச்சருக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டம் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...