Sunday, June 16, 2013

அட கிருஷ்ணா . . . நீ பண்ணின சேட்டைகள் கொஞ்சமா, நஞ்சமா?

- பிரதிபா
கிருஷ்ண லீலைகள் கேள்விப்பட்டு இருக்கேன். ஆனால், நீ பண்ணினதோ காமலீலைகள் ஆக அல்லவா இருக்கின்றன. எத்துணை அநியாயங்கள் படைத்திருக்கிறாய்?
உன்னைக் கடவுளாக சித்தரித்துக் கொண்டாடும் மக்களை நினைத்துச் சிரிப்பதா.. அழுவதா என்று கூடத் தோன்றவில்லை. கிருஷ்ண ஜெயந்தி என்ற உன்ற பிறந்தநாளை விழாக்கோலமாக அல்லவா கொண்டாடி மகிழ்கின்றனர் என் குலமகள்கள்.
அவர்களுக்குத் தெரியுமா? அடுத்தவன் மனைவியைக்கூட நீ விட்டுவைத்தது இல்லை என்பது. அவர்களுக்கு நான் சென்று என்னவென்று புரியவைப்பேன்.
என்னைப் பகுத்தறிவு முட்டாள் என்று கூறிவிட்டு, அவர்கள் அநாகரிக கோமாளிகள் ஆகிவிடுகின்றனர். அவர்களைக் கண்டால் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.
புதிது புதிதாக விரதங்கள், அதும் பார்ப்பன சமுதாய விரதங்களைக் கடைப்பிடித்தால் நாமும் பார்ப்பனர்கள் போல் அறிவாளிகள் ஆகிவிடலாம் என்று தப்புக்கணக்குப் போட்டு விழா எடுக்கிறார்கள். கிருஷ்ண ஜெயந்தி விழாவையெல்லாம் தற்போதுதான் பேமஷாக்கிக் கொண்டு வருகிறார்கள்.
அவர்கள் எல்லாம் கிருஷ்ண லீலைகளும், கிருஷ்ணனின் வாழ்க்கையையும் படித்துப் பார்த்து இருப்பார்களா? படித்துப் பார்த்தும் அப்படி இருக்கலாம் தம் பிள்ளைகளும் என்று நினைக்கிறார்களா?
எப்படி ஒரு தாயால் தன் ஆண்பிள்ளை மற்ற பெண்களுடன் கூத்தாடி மகிழ்வதை ஏற்றுக்கொள்ள முடியும்? அல்லது பொய், திருட்டு என்று வாழ்ந்த கிருஷ்ணனை தங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்ள முடிகிறது.
தன் ஆண்மகனும் அந்தக் கிருஷ்ணனைப்போல் திருடி, பிராடுத்தனம் பண்ணியும், பெண்கள் பலருடன் கூடிக் கலவியில் ஈடுபடுவதையும் சகித்துக்கொள்ள முடியும்?
கர்ப்பிணிப் பெண்கள் தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக கிருஷ்ணனை வழிபட்டு வருகிறார்கள். எனக்குக் கிருஷ்ணன் போல் அழகான ஆண்மகன் பிறக்க வேண்டும் என்றும், பிறந்தால் கிருஷ்ண ஜெயந்தி விழா எடுத்து சீரும் சிறப்புமாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறேன் என்று வேண்டுதலையும் வைத்துக் கொள்கிறார்கள்.
ஒன்று ஆண் குழந்தை இல்லையெனில், பெண் குழந்தை பிறந்துதான் ஆகவேண்டும்.
தப்பித்தவறி வேண்டியபடியே (இயற்கையாக) ஆண் குழந்தை பிறந்துவிட்டால் போதும்.. கிருஷ்ணன் பிறந்துவிட்டான் என்று அந்தக் குழந்தைக்குக் கிருஷ்ணக் கொண்டையும்,  கிருஷ்ணன் அணிவது போன்ற உடையும் அணியவைத்து அழகுபடுத்தி கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடி மகிழ்கின்றனர்.
பிறந்ததில் இருந்து சேட்டையும், பொய்யும், புரட்டும், அடுத்த குடும்பங்களில் சென்று கலகங்களை ஏற்படுத்தி அதில் மனமகிழ்வது எல்லாம் கிருஷ்ணனின் மனபாவமாக இருந்து இருக்கிறது. தெரிந்து மூன்று கல்யாணம், தெரியாமல் பதினோராயிரம் பெண்களுடன் வாழ்ந்த கிருஷ்ணன் எப்படி ஒரு கடவுளாகவோ அல்லது பண்பிற்குரியவராகவோ ஏன் மனிதனாகவோ கூட இருக்க முடியும் என்று சாதாரண மனிதர்களால் உணர முடியாமல் போகுமா?
அல்லது எதையுமே தெரிந்து கொள்ள முற்படாமல் யாராவது சொல்றாங்களா அதையே கண்முன் தெரியாமல் நாமளும் பாலோ பண்ணுவோம் என்று பண்ணிக்கொண்டு இருக்கிறார்களா மக்கள்..!
அந்த மக்களுக்கு எப்படிப் புரிய வைப்பது..? இதையெல்லாம் யார் எடுத்துச் சொல்வது..?
சொன்னால் புரியும் மனநிலையில் இருப்பார்களா? அல்லது படித்துத் தெரிந்து கொள்வார்களா.?
எனக்கு என்னவோ சந்தேகம்தான். மக்கள் பகுத்தறிவுப் பாதையைவிட மூடநம்பிக்கைப் பாதைக்குத்தான் அதிகமாக இழுத்துச் செல்லப்படுகிறார்கள். அவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.
கிருஷ்ணனின் லீலைகளுக்கு _ அவனின் அயோக்கியத்தனத்துக்கு இரண்டு உதாரணங்கள் சொல்கிறேன்.
கிருஷ்ணன் மன்னன் ஒருவனைச் சந்திக்கச் சென்றான். அவனுக்கு நல்ல ஆடை வேண்டும், அப்போது அரண்மனைக்குச் சலவை செய்து கொடுப்பவனைக் கண்டு ஆடை கேட்கிறான். அரசனுடையது எனவே நான் கொடுக்க மாட்டேன் என்றவனைத் தலையில் தட்டி அவனைச் சாகடித்து ஆடைகளைத் திருடிச் செல்கிறான் கிருஷ்ணன். அடாவடித்தனம் பண்ணி ஜெயிக்கும் இவன் எப்படிக் கடவுளாக முடியும்?
பின்னர் வழியில் பூ விற்கும் பாட்டியைக் காண்கிறான். அவள் கூன் விழுந்த கிழவியாக இருக்கிறாள். தனக்குச் சந்தனம் பூசிவிடும்படிக் கேட்கிறான். அவள் பூசிவிட்டதும், அந்தப் பாட்டியின் கூன் விழுந்த முதுகைச் சரிசெய்ய இடுப்பு எலும்பில் கை வைக்கிறான். (அந்தக்காலத்து ஆர்த்தோ டாக்டர் போல) உடனே கூன் சரியாகி பாட்டி இளமை வடிவம் எடுத்து கிருஷ்ணனின் கை பட்டதால் உணர்ச்சி கொள்கிறாள். கிருஷ்ணன் இது கண்டு மகிழ்ந்து அந்தப் பாட்டியுடன் கலவி கொள்கிறான். என்ன ஒரு முட்டாள்தனமான செயல். இதை வரலாறும் சொல்கிறது.
அந்த வரலாறைப் படித்தும் புத்தி இல்லாமல் கிருஷ்ணன் அவதாரமாக தன் பிள்ளைகளை நினைத்துக் கொண்டு அப்படியே கிருஷ்ணனைப்போல் வளர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
கிருஷ்ணா தயவு செய்து நீ கடவுள் அவதாரமாக இருந்தால் உடனே கிளம்பி வந்து  உன் நடத்தையை எல்லோருக்கும் புரிய வை. இல்லையெனில், பகுத்தறிவுப் பார்வை பார்க்கும் எங்களுக்கு நீ நல்லவனாகவாவது ஆகிக்காட்டு.
இரண்டில் எது நடந்தாலும் சந்தோஷம் தான். இல்லையெனில் இந்த மூடநம்பிக்கையில் தினந்தோறும் ஊறிப்போய் இருக்கும் மக்கள் இன்னும் மூடநம்பிக்கை வியாதிக்காரர்கள் ஆகி, அதற்கான மருந்தும் கிடைக்கப்பெறாமல் கஷ்டப்படப் போகிறார்கள்.

வலைப்பூவிலிருந்து..

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...