கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் குடும்பச்சண்டை காரணமாக ஆண் பெண் இருபாலருமே தற்கொலை செய்துகொள்வது அதிகமாகிக்கொண்டு இருக்கிறது.
இந்த மாதம் முழுவதும் தொடர்ந்து தற்கொலை செய்திகள் பத்திரிக்கைகளில் வந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் தூத்துக்குடியை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் தற்கொலைக்கு முயன்று அவரது கணவன் மற்றும் 8 மற்றும் 3 வயது குழந்தை என குடும்பமே தீயின் வேதனையில் உயிரிழந்தது மிகவும் கொடுமையான ஒன்றாகும்.
(ஆட்சியாளர்களின் தவறுகளினாலும், தங்களது கோரிக்கை ஏற்கக்கோரி ஆட்சியாளர்களை திசைதிருப்ப செய்யும் தன் உயிர்மாய்ப்பு என்பது இங்கு கணக்கில் கொள்ளவேண்டாம்) கடந்த ஆண்டு மட்டும் தற்கொலையால் தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 15,963. . தற்கொலையில் தமிழகம் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.இதில் வியப்புக்குரிய தகவல் என்னவென்றால், கல்லாதோர் அதிகம் கொண்ட பீகார் மாநிலத்தில் தற்கொலைகள் மிகவும் குறைவாக இருப்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
பெண்களின் தற்கொலைக்கு முதன்மைக்காரணமாக அமைவது கணவனின் குடிப்பழக்கம். இது முன்பு இருந்த நிலை. ஆண்களின் தற்கொலைக்கு முதன்மைகாரணமாக அமைவது பாலியல் தொடர்பான நோய். இதற்கு காரணம் ஏமாற்றும் போலி பாலியல் மருத்துவர்கள் என்று கண்டறியபட்டுள்ளது.
ஆண்களின் தற்கொலையில் இந்த பாலியல் தோல்வி விவகாரம் யாருக்கும் தெரியாமல் போவதே இதற்கான தீர்வு காணப்படாமல் போகும் காரணியாக அமைந்து விடுகிறது. ஆகையால் பொதுவாக வறுமை, கடன்சுமை அல்லது தீராத நோய் என்று காவலர்களாலேயே கண்மூடித்தனமாக நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு காவலர்களை குறைசொல்லிப் பலனில்லை. ஏனென்றால் சாவுக்கான உண்மை தீர்வை தற்கொலை செய்பவரும் எழுதிவைப்பதில்லை, அவரது துணையும் இது குறித்து வெளியில் சொல்வதில்லை. இது தமிழகத்தில் மட்டுமின்றி பொதுவாக ஏழைநாடுகள் அனைத்திலும் நடந்து வருகிறது. பணக்கார நாடுகளில் வியாபார நட்டம், காதல் தோல்வி மற்றும் மன இறுக்கம் ஆகையவை காரணமாக அமைகின்றன.
அ. ஏன்?
தமிழகத்தை பொருத்தவரை தற்கொலைகள் என்பதற்கு முழுமுதல் காரணமாக
1.மதுப்பழக்கமே முதலாக(முன்பு) இருக்கிறது, அடுத்து வருவது
2.ஆண் பெண் நட்பு- _ காதல் தோல்வி\திருமணமுறிவு\ நண்பர்கள் பிரிதல்(பெண்கள்), பிறரால் ஏமாற்றப்படுதல்,
3.கடன் பிரச்சனை(கந்து வட்டி, நிதி நிறுவனங்களினால் ஏமாற்றம், அதிக எதிர்பார்ப்பு)
4.பணி(வேலை கிடைக்காமை, பணிபுரியும் நிறுவனத்தில் தன்னைவிட குறைந்த வயதுடைய\தகுதியுடைய ஒருவரின் கீழ் பணிபுரிதல்)
தற்போதைய காரணத்திற்கு, வறுமையே தற்கொலைக்கு காரணம் என்று சொல்வது முட்டாள்தனமாகும்.
அந்தஸ்து பார்த்து வேலைகிடைக்கவில்லை என்று கூறி தற்கொலை செய்வதை தற்கொலைக்கான காரணம் என்று எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். உதாரணத்திற்கு இந்தியா முழுவதிலும் நகரம், சிறுநகரம் மற்றும் கிராமங்களில் கூட வேலைவாய்ப்புகள் கிடைக்கும் நிலை இன்று உள்ளது. அரசு வேலைதான் வேண்டும், இல்லை என்றால் தனக்கு தகுதியான வேலைதான் வேண்டும் என்று கூறி அது கிடைக்காமல் தற்கொலை செய்வதும் அதிகமாகிவருகிறது. ஆனால் இதை தற்கொலைக்கான முக்கியக் காரணம் என்று கூற முடியாது, ஏனெனில் இந்தக் கணக்குப்படி பார்த்தால் மக்கள் தொகையில் 70% பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கவேண்டும்
ஆ. சிக்கல்கள்:
தற்கால சூழலை பொருத்தவரை தற்கொலைக்காண காரணங்கள் என்பது தங்கள் வாழ்வில் ஏற்படும் சில தவிர்க்கமுடியாத சிக்கல்களை எதிர்கொள்ளும் திறனில்லாமை என்று தான் கூறவேண்டும். சமீபத்திய காலங்களில் ஏற்பட்ட தற்கொலைகள் இதற்கு உதாரணமாக பார்க்கலாம், தனது கணவர் குடிகாரர் என்றால் அவருக்கு அறிவுரைகள் கூறலாம், வீட்டு சூழ்நிலையை கூறி மூத்தோர்களிடம் அவரை அழைத்து சென்று அறிவுரை கூறவைக்கலாம், பல வழிகள் இருக்கிறது, இதை கணவர் குடிகாரர் தினமும் குடித்துவிட்டு வருகிறார், என்று கூறி தற்கொலை செய்வது சூழ்நிலையை எதிர்
கொள்ளும் தகுதியின்மை என்றே கருத்தில் கொள்ளவேண்டும். .இது போன்ற அனைத்து சம்பவங்களிலும் நாம் தீர்வை காணாமல் வெறுமையால் (இனிமேல் ஒன்றுமில்லை என்ற மனநிலை) இருந்து விடுவதால் அந்த வெறுமை வெறுப்பாக மாறி இறுதியில் நம்மை தற்கொலைக்கு தூண்டிவிடுகிறது, இது அனைத்து தற்கொலை செய்யும் அனைவரின் இறுதிகட்ட நடவடிக்கையாக அமைந்து விடுகிறது.
இ. வினாடிகளில் முடிவு:
தற்கொலை சேய்து கொண்டவர்கள் 99% பேர் இறுதி நேர முடிவின் காரணமாக உயிரை மாய்த்துக்கொள்கின்றனர், பல நாட்களாக செத்துதொலையலாம் என்று நினைத்துக்கொண்டு இருந்தாலும் அவர்களின் முடிவு என்னவோ திடீர் என வருவது தான், உதாரணமாக நஞ்சருந்தி மாள்பவர்கள் பல நாட்களுக்கு முன்பு வாங்கி இருந்தாலும் அவர்கள் மனம் பெரும் போராட்டத்திற்கு உள்ளாகிறது இந்த நேரத்தில் பலர் வாங்கிய நஞ்சை எறிந்து விடுகின்றனர், வெகு சிலரே இறுதி நேரம் முடிவில் குடித்துவிடுகின்றனர், சில சண்டையின் போது மிரட்டுவதற்காக பினாயிலை குடிப்பது, எரிஎண்ணெயை உடலில் ஊற்றிக்கொள்வது, தூக்குபோட்டுக்கொள்வது போன்ற செயல்கள் செய்கின்றனர், ஆனால் அங்கும் வினாடிகளில் நடக்கும் செயல்களால் அவர்கள் விரும்பாமலே விபத்தாக தற்கொலைகள் அமைந்து விடுகின்றது, இவை முக்கியமாக பெண்களால் நடத்தப்படுபவை ஆகும்,
ஈ. தீர்வுகள்:
முன்பு கூறியது போல் 99% தற்கொலைகளை நாம் இறுதி வினாடியில் நிறுத்தி விட முடியும், அதே நேரத்தில் மிரட்டுவதற்காக சில ஆபத்தான செயல்களை செய்பவர்களையும் நாம் இறுதிவினாடியில் காப்பாற்றிவிட முடியும், நாம் செய்யவேண்டியது முக்கியமாக அதிக அளைவு சண்டை, அல்லது நம்மை புரியாமல் ஏசிக்கொண்டும், திட்டிக்கொண்டும் இருப்பவர்களிடன் நாம் எதிர்கொண்டு பேசாமல் அமைதியாக இருக்கவேண்டும். கண்டிப்பாக அவர் நாம் சொல்வதை கேட்கும் மனநிலையில் சில நேரங்கள் இருப்பார் அந்த நேரங்களில் பக்குவமாக எடுத்துச்சொல்ல வேண்டும்,
முதல் தீர்வு எளிமையான ஒன்று. அவர்களை மக்கள் அதிகம் கூடும் பகுதிகளாக கடற்கரை, கேளிக்கை அரங்கம், திரை அரங்கம், அல்லது பணியில் இருந்து விடுப்பு கிடைத்தால் வசதி இருந்தால் அருகில் உள்ள கோடைவாஸ்தலங்களுக்கு சென்று இரண்டு நாள் மூன்று நாட்கள் தங்கலாம், இவை அனைத்துமே மனதை இளகவைக்கும் தீர்வுகள், முக்கியமான பெண்களுக்கான தீர்வுகள் இவை.
உ. ஆலயங்களுக்கு செல்வதும் ஜோதிடர்கள் பிராடுத்தனமும்:
மன இறுக்கத்தில் நாம் செய்யும் மிகவும் ஆபத்தான காரியம் ஆலயங்களுக்கு அழைத்துச்செல்வது!ஆம், இது உண்மை. நாத்திகம் பேசுகிறோம் என்று நினைக்கவேண்டாம், ஏன் தெரியுமா- கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், கடவுளிடம் முறையிட்டால் நிம்மதி கிடைக்கும் என்ற எண்ணத்தில் நடக்கும் பிரச்சனைகளை மெல்ல மெல்ல நினைவிற்கு கொண்டு வருகிறார்கள், அதாவது மறந்து போன என்றோ நடந்த சம்பவங்களை கூட வற்புறுத்தி நினைவுபடுத்தி இப்படி இப்படி சிக்கல்கள் இருக்கிறது இதற்கு தீர்வு கொடுங்கள் என்று கூற ஆரம்பிக்கின்றனர்.
இங்கு தான் மிக ஆபத்தான் ஒரு ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. அதாவது, ஆலயத்தில் சென்று நாம் வாழ்வில் பட்ட துண்பத்தை எல்லாம் சொல்லிவிட்டோம் இனி மனசு லேசாகிவிட்டது என்று சொல்வது பல சிக்கல்களால் பாதிக்கப்பட்ட மனதை ஏற்கனவே மறந்து போன பல வேதனையான சம்பவங்களையும் நினைவில் கொண்டு வந்துவிடுவது.
ஜாதகம் சொல்பவர்கள் நீண்ட காலம் வேதனையில் மூழ்க வைத்து சம்பாதிக்கும் தந்திரங்களில் வித்தகர்களாக இருக்கின்றனர். அதாவது அந்த ஸ்லோகங்களை சொல்லுங்கள்; தினமும் அந்த பூவினால் அருச்சனை செய்து வழிபடுங்கள், இந்த கோவிலுக்கு செல்லுங்கள்; அந்த கோவிலுக்கு செல்லுங்கள் என்று சொல்வது மேலும் மேலும் நமது வேதனையை அதிகபடுத்தவே அன்றி, தீர்வை காண்பதற்கு வழிகோல்வதில்லை. இங்கு கிடைக்கும் போலியான தீர்வுகள் நமக்கு தற்காலிக நிம்மதியை தருவதாக இருப்பதால் நாம் பிறருக்கும் இவரை பற்றி சொல்ல அவர்களும் மறந்து போன பல சம்பவங்களை வற்புறுத்தி மனதிற்குள் கொண்டுவந்து அதற்கான தீர்வை தேடி ஜோதிடர்களிடம் ஓடுகின்றனர்.
ஊ. நாம் செய்யவேண்டியவை:
கடமை உணர்ச்சி என்பது இயற்கையிலேயே இரண்டு விதமான எண்ணத்தை கொடுப்பது ஒன்று மன அழுத்தை தீர்க்கும். மற்றொருவிதம் மன அழுத்தை அதிகமாக்கும். முதல் வகை சிந்தித்து செயல்படும் போது மனம் லேசாக ஆகும்.இங்கு தற்கொலை எண்ணம் குறையும். உதாரணமாக குழந்தைகளை கவனித்தல், விட்டுப்போன வேலைகளை மீண்டும் தொடருதல், வீட்டு வேலைகளை பார்த்தல், வெள்ளையடித்தல், தோட்டங்களை சீரமைத்தல், புதிய செடிகளை நட்டு அவைகளை பாதுகாத்தல், படம் வரைதல்,
எ. நாம் செய்யக்கூடாதது:
இரண்டாம் வகை வரம்புக்கு மீறி செலவு செய்து தீர்வுகான முயல்வது.இது புண்ணியஸ்தலங்களுக்கு செல்வதையும் சேர்த்துத்தான், பணம்கொடுத்து சுற்றுலா சென்று அங்கும் மனவேதனையை அதிகரித்துக்கொண்டு வருவது, செலவு செய்து உறவுகளை அழைத்து விழா எடுப்பது. உதாரணத்திற்கு ஏதாவது காரணம் கூறி(பிறந்தநாள் விழா, திருமண நாள் விழா) என சொல்லி ஆடம்பரமாக செலவு செய்து அனைவரையும் அழைப்பது. இது என்ன ஆகும் என்றால் வருபவர்கள் நமது ஆடம்பரத்தை பார்த்து வேண்டுமென்றே நம்மை மறைமுகமாக குறை சொல்லவும், கிண்டல் செய்வார்கள். இது நம்மை மேலும் வேதனைக்குள்ளாக்கும், ஆகையால் நாம் இரண்டாம் வகை தீர்வை எக்காரணம் கொண்டு செயல்படுத்தக்கூடாது.
ஏ. தற்கொலையை தடுத்து நிறுத்தலாம்:
ஆம் தற்கொலையை எளிமையாக தடுத்து நிறுத்தலாம், மேலே கூறியதை படித்தாலே உங்களுக்கு பல செய்திகள் புரிந்து இருக்கும், வாழ்க்கை என்பது நமது சில நடவடிக்கைகளால் இன்ப துன்பங்கள் நிறைந்த பயணமாக அமைந்து விடுகிறது. அதே நேரத்தில் நமக்கான சிக்கல்களில் நம்மிடமே தீர்வு உள்ளது அதை நிவர்த்தி செய்ய முக்கியமாக நாம் செய்யவேண்டியது, தகுதியுள்ளவரை கண்டு அல்லது நம் நலனில் உன்மையிலேயே அக்கரையுள்ள வரை கண்டு மனம் விட்டுப்பேசுதல், முக்கியமான முற்போக்கு சிந்தனை கொண்ட நூல்களை படித்தல். பலருக்கும் தெரியாத ஒன்று இது உண்மையும் கூட திருக்குறள் நூல் தற்கொலை மனநிலையை சாதாரண மனநிலைக்கு மாற்றும் திறன் கொண்டது, இரண்டு அடிகள் இருப்பதாலும் எளிமையாக இருப்பதாலும், முற்போக்கு சிந்தனையுடன் இருப்பதாலும் முக்கியமாக தமிழில் இருப்பதாலும் அதன் கருத்தாழம் நம்மை சிந்திக்க வைக்கிறது. இந்த சிந்தனை நமது தற்கொலை எண்ணத்தை மாற்றும் சிந்தனை மற்றும் எதிர்கால நம்பிக்கை அதோடு துணைக்கு அறிவுறை கூறும் திறனையும் சேர்த்து நல்ல வாழ்க்கை வாழ ஓர் அமிழ்தம் வழங்கும் நூலாக உள்ளது,
ஐ. உறவுகளின் நிலை:
மனித வாழ்விலும் சரி மிருகங்களின் வாழ்விலும் சரி கூட்டுவாழ்க்கை என்பது ஒன்றை ஒன்று சார்ந்து அவற்றின் தேவைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து வாழ்வது இயற்கை நமக்கு அளித்த பாடம். கிராம சூழலில் வாழ்ந்த போது கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து தங்களுக்கு தேவையானவற்றை பிறருடன் பகிர்ந்து மேலும் ஆலோசனைகளை கேட்டும் வழங்கியும் வாழ்ந்து வந்தனர். நகரவாழ்க்கையில் கூட்டுக்குடும்பம் அல்லாது, போயினும் உறவு மற்றும் அருகில் உள்ளோர்களின் அன்பைப் பெற்று அவர்களுடன் நட்புறவாக வாழ்வதும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை தான், நகரங்களில் உறவுகள் என்பது அருகில் இல்லாது போனாலும் அவ்வப்போது உறவுகளுடனான தொடர்பை நாம் பேணிவளர்த்து வரவேண்டும்.
நகர வாழ்க்கையில் மன இறுக்கம் மற்றும் இதர காரணிகளால் குடும்பத்தில் சிக்கல்கள் தோன்றும் போது நல்ல உறவுகள் மற்றும் சுற்றத்தாரின் ஆலோசனை அறிவுரை நமக்கு அவசியம் தேவைப்படும். கோவிலுக்கு சென்று தங்களது குறைகளை கற்சிலைகளின் முன் நின்று புலம்புவதை விட நாம் மீது நமது எதிர்காலத்தின் மீது அக்கரையுள்ள உறவுகளை சந்தித்து தங்களது மனக்குறைகளை கூறலாம். முக்கியமாக மூத்தோர்களிடம் கூறும் போது நமக்கு நல்ல தீர்வுகள் கிடைக்கும். தனிவாழ்க்கை திடீர் செல்வச்செறுக்கின் காரணமாக உற்றார் உறவுகளை அண்டாமல் வாழ்பவர்கள் தான் தற்கொலை செய்வர்களில் அதிகம் இருக்கின்றனர். இதில் இருந்தே தற்கொலைக்கான காரணம் தெளிவாகி இருக்கும்.
ஒ. வாழ்க்கை முறை
இயற்கை நமக்கு அழகான பல உதாரணங்களை தந்திருக்கிறது, கடலில் காணும் சில மெல்லுடலிகள் இயற்கையிலேயே அவற்றிற்கு பாதுகாப்பு கவசமான சுண்ணாம்பு ஓடுகள் இல்லாமையினால் காலியான சங்கு, பவளப்பாறைகளின் பிளவுகள், மற்றும் சிப்பிகளில் சென்று வாழத்துவங்கும், அப்படி சங்குகளிலும் சிப்பிகளிலும் வாழ்வதற்கேற்ப தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும். அப்படி வாழும் மெல்லுடலிகள் பல நூறு ஆண்டுகள் வரை வாழும், தங்களுக்கு ஏற்ற வாழ்விடமான சங்கு சிப்பிகளை அண்டாத மெல்லுடலிகள் ஆக்டோபஸ், மீன்கள், மற்றும் இதர கடல் உயிர்களாலும், கடல்நீர் வெப்பமாற்றத்தாலும் விரைவில் உயிரிழந்து விடுகிறது. இதை அப்படியே மனித இனத்திற்கு மாற்றிக்-கொள்ளாம், சிலர் இன்றும் புலம்புவார்கள் கிராமவாழ்க்கை கூட்டுக்குடும்ப வாழ்க்கை என்று தற்போதைய சூழலில் அவை எல்லாம் முடியாதவைகள் அதற்காக நாம் நகரங்களில் வாழாமல் இருந்து விடுவதா அல்லது வேலை எழுதிகொடுத்துவிட்டு கிராமங்களுக்கு சென்று விடுவதா? வாழ்வதற்கேற்ப மெல்லுடலிகள் போல் வாழ கற்றுக்கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் நாமும் சீராக வாழ்ந்து நமது குழந்தைகளையும் பெருமையுடன் வாழவைக்க முடியும். மனிதபடைப்பு என்பது ஒரு உயிரின பிரமீடின் உச்சி நிலை. தினம்தினம் வளரும் விஞ்ஞானத்தில் நமது பங்கும் உண்டு, ஒவ்வொரு மனிதரும் உயிர்வாழ்வது இந்த சமுதாயத்திற்கு அவர்களால் ஆன தங்களது பங்கை அளிக்கவேண்டும். நமது அறிவுத்திறன் அதை கொண்டு தான் உருவானது, மேலை நாட்டவர்கள் தங்களது அன்றாடையை வாழ்க்கையை கூட ஒரு இன்பசுற்றலா பயணம் போல் கொண்டு செல்கின்றனர். நம் தமிழர்கள் சுற்றுலா செல்வதே ஒரு கடிணமான காரியமாக கருதுகின்றனர். 40 நாட்கள் மாலைபோட்டு பட்டினி கிடந்து, உடலைவருத்தி ஐயப்பாகோவில் செல்வபவர்கள் தங்களது குடும்பத்தாரை மாதம் ஒருமுறை ஒரு இரண்டு நாள் வெளியிடங்களுக்கு அழைத்து சென்றால், அவன் ஐயப்பா கோவிலுக்கு செல்லும் தேவையே இருக்காதே?
பணம் என்பது தேவையே இல்லை என்று யாரும் கூறமுடியாது. தற்கொலை செய்வர்களில் பலரின் வாழ்க்கையை சற்று பார்ப்போமானால் அவர்கள் பணம், அதன்மூலம் வரும் சுகங்களுக்காக வாழ்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதையும் தாங்கள் தான் அனைவரைவிடவும் சிறந்தவர்கள் பிறர் தங்களுக்கு கீழ் என்று நினைப்பிலும் வாழ்கின்றனர். இந்த நினைப்பில் தான் சிக்கல் ஆரம்மாகிறது, அதாவது தங்களது பொருளாதார வளர்ச்சியை விட சிலர் முன்னேறி வரும் போது அவர்களின் மனம் பொறாமையில் வீழ்கிறது, இந்த பொறாமையின் முற்றிய நிலை விரக்தி விரக்தியின் முடிவு மரணம்\தற்கொலை என்று முடிகிறது. பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியார் கூறிய நாகரீக வாழ்க்கை விதி
மனிதன் நாகரீகமாக வாழ்வது என்பது தான் வாழ்வேண்டும் என்ற நினைப்பில் பிறரையும் வாழவைப்பது வாழவழிகாட்டுவது தான் வாழ்க்கை என்றார். வள்ளுவரும்
இருள் நீக்கி இன்பம் பயக்கும், மருள் நீங்கி
மாசுஅறு காட்சி யவர்க்கு
மாசுஅறு காட்சி யவர்க்கு
அறியாமையால் வரும் மயக்கத்திலிருந்து நீங்கி மாச்ற்றுவாழும் மாந்தர்க்கு துண்பம் நீங்கி இன்பம் உண்டாகும். தற்கொலைக்கு தீர்வும் நாம் மாசுசற்று எளிய வாழ்க்கை வாழ்வோமானால் நமது வாழ்வில் எக்குறையும் வராது.
- சரவணா ராஜேந்திரன்
No comments:
Post a Comment