Saturday, June 1, 2013

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு பெரியார் கல்வி நிறுவனங்கள் சாதனை


மாணவ - மாணவிகள் 100% வெற்றி பெற்றனர்
சென்னை மே, 31 - தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (31.5.2013) காலை வெளி யிடப்பட்டதில், பெரியார் கல்வி நிறுவனங்களில் படித்த மாணவ - மாணவிகள்  100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் பெரியார் கல்வி நிறுவனங்கள் சாதனை செய்துள்ளன.
திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி
திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 196 மாணவியரும் தேர்ச்சி பெற்றனர் தேர்ச்சி சதவீதம் 100ரூ .
100/100 மதிப்பெண் பெற்ற  மாணவி களின் எண்ணிக்கை 23, கணிதம் பாடத்தில் 13 மாணவிகள் 100/100, அறிவியல் பாடத்தில் 7 மாணவிகள் 100/100, சமூக அறிவியலில் 3 மாணவிகள் 100/100 எடுத்து சாதனை படைத்தனர்.
480-க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாண வியர் 14 பேர், 450-க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவியர் 57 பேர், 400-க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவியர் 105 பேர் ஆகும்.
நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் தேர்ச்சி
திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தைச் சேர்ந்த தேர்வு எழுதிய மாணவியர்களின் எண்ணிக்கை - 17, தேர்ச்சி பெற்ற மாணவியர்களின் எண்ணிக்கை - 17, தேர்ச்சி சதவீதம் 100ரூ.
450க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவி யர்கள் - 2, 400-க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவியர்கள் - 8 பேர் ஆகும்.
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளி
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ - மாணவிகள் 82 பேரும் தேர்ச்சி பெற்றனர் 100/100.
475-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர் கள் 17 பேர், 450-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் 32 பேர். 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் 62 பேர்.
அறிவியலில் 16 மாணவ - மாணவிகள் 100-100  மதிப்பெண்கள் பெற்றனர்.
கணிதத்தில் 5 மாணவ - மாணவிகள் 100-100 மதிப் பெண்களும், சமூக அறிவியல் பாடத்தில் 4 பேரும் 100-100 மதிப்பெண்கள் பெற்றுள் ளனர்.
வெட்டிக்காடு பெரியார் பள்ளி
வெட்டிக்காடு பெரியார் பள்ளியில் தேர்வு எழுதிய 15 மாணவ - மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர் 100% தேர்ச்சி.
இதில் 8 மாணவ - மாணவிகள் 440-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
ஜெயங்கொண்டம் பெரியார் மேல்நிலைப் பள்ளி
ஜெயங்கொண்டம் பெரியார் மேல் நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ - மாணவிகள் 63 பேரும் தேர்ச்சி பெற்றனர்   100% தேர்ச்சி. இதில் 54 பேர் 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற் றுள்ளனர்.
கணித பாடத்தில் 100-100 மதிப்பெண்களை 9 பேரும், அறிவியலில் 100-100 மதிப் பெண்களை 5 பேரும், சமூக அறிவியலில் 100-100 மதிப்பெண்களை 14 பேர் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

தாளாளர் விகேயென்னுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
மேற்கண்ட நான்கு பள்ளிகளின் தாளாளரான வீகேயென் கண்ணப்பன் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் பேரில் ஆலோசனை களை வழங்கி மாணவ - மாணவிகளையும் ஆசிரியர் பெரு மக்களையும் நல்வழியில் நடத்தி அச்சாதனை செய்தமைக்காக அவருக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்தார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...