- ஊசி மிளகாய்
விஸ்வரூபம் படத்தில் வரும் பிரச்சினைக் குரிய சில காட்சிகள் பற்றி இஸ்லாமியருக்கும், படத் தயாரிப்பாளருக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டு, இனி படம் வெளிவரத் தடையில்லை என்ற ஒரு சூழ்நிலை வந்து, அரசும் தடை யுத்தரவை ரத்து செய்துள்ளது. இப்போது, திடீரென கிடப்பது கிடக்கட்டும்; கிழவியைத் தூக்கி மணையில் வை என்பதுபோல், திடீ ரென்று தமிழ்நாடு பிராமணர் சங்கத்தவருக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து சென்னை காவல்துறை ஆணையரிடம் இவாள் தங்களது சங்கத்தின் சார்பில், பிராமண சமூகத்தின் கலாச்சாரத்தைக் கேலி செய்வதுபோல் சில காட்சிகள், சில வசனங்கள் விஸ்வரூபம் படத்தில் உள்ளன என்று புகார் மனு கொடுத்து அக்காட்சிகளை நீக்கிவிட வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்!
அந்தக் காட்சி என்னனாண்ணு அவாள் சொல்றான்னு நோக்குத் தெரியுமோ?
நடிகர் கமல்ஹாசன் திரைக்கதை இயக்கத்தில் வெளிவர உள்ள விஸ்வரூபம் படத்தில் எங்களது பிராமண சமூகத்தின் கலாச்சாரத்தைக் கேலி செய்வதுபோல் சில காட்சி வசனங்கள் உள்ளன.
அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் பார்த்த பலர்; கதாநாயகி பிராமண சமூகத்தைச் சார்ந்த பெண் என்றும், ஒரு காட்சியில் கமல் அவளுக்கு மாமிசம் சமைத்துக் கொடுப்பது போலவும் இருப்பதாக எங்களிடம் கூறினர்.
இது திரைக்கதைக்குத் தேவையற்றது. இந்தக் காட்சிகள் பிராமண சமூகத்தின் பழக்க வழக்கங்களை கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளது. எனவே நீக்க வேண்டும், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்!
பிராமண சமூகத்துப் பெரியவாள்களே, சின்னவாள்களே, உங்களுக்கு உங்களது பாரம்பரியம் கலாச்சாரம் என்ன என்பது மறந்துவிட்டதா?
வேதம், சதபத பிரமாணம், இராமாயணம், மஹாபாரதம் - இத்தியாதி இத்தியாதி உங்கள் கலாச்சாரத்திற்கு வேர்கள் தானே?
யாகக் கலாச்சாரம் ஆரியக் கலாச் சாரம்தானே! அவை அத்தனையிலும் யாகத்தில் பசுக்களையும், பிராணிகளையும், குதிரைகளை யும் வெட்டி கொன்று அப்படிக்கூட இல்லாமல் ஆடுகளின் அவிர்ப் பாகங்களுக்காக, அவற்றின் விதைகளை அழுத்தி ஹிம்சித்து (அப்போதுதான் உறுப்புகளின் சுவை குன்றாமல் இருக்குமாம்; என்னே மாமிச ருசி!) உயிர்களைக் கொன்று யாகம் நடத்தும் முறை சிவானந்த சரஸ்வதி எழுதிய ஞானசூரியன் அட்டைப் படத்தில் அப்படியே போடப்பட்டுள்ளதே - அதை ஏன் பிராமண சங்கத்தவர்கள் வசதியாக மறந்து விட்டார்கள்?
பார்ப்பனர்கள் காய்கறி சாப்பிடும் பழக்கத்தை, மகாவீரர், புத்தர் ஆகிய சமண, பவுத்தப் பிரச்சாரங்களுக்குப் பிறகுதான் என்பதை எவராது மறுக்க முடியுமா? (இந்துமதம் எங்கே போகிறது? - அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் - காண்க பக்கம் 25-26)
வால்மீகி இராமாயணத்தில் எத்தனை வகை மாமிசத்தை காட்டில் சாப்பிட்டான் ஸ்ரீராமபிரான் என்பதை எந்த பிராமணர் சங்க நிருவாகியாவது மறுக்க முடியுமா?
மஹாபாரதத்திலும் பார்ப்பனர்கள் இறைச்சி -மாமிசம் சாப்பிடும் காட்சிகள் இல்லையா?
மஹாபாரதத்திலும் பார்ப்பனர்கள் இறைச்சி -மாமிசம் சாப்பிடும் காட்சிகள் இல்லையா?
அது அப்போது; இப்போது அப்படி இல்லை என்றாவது சங்கத்தவர் மறுக்க முடியுமா? காலஞ்சென்ற இதயம் பேசுகிறது மணியன் தனது வெளிநாட்டுச் சுற்றுப் பயண அனுபவங்களைப்பற்றி எழுதி வந்த போது, ஒரு செய்தியைக் குறிப்பிடத் தவறவில்லை.
அமெரிக்காவில் இவரை வரவேற்ற பார்ப்பன நண்பர், இவருக்கு காய்கறி சாப்பாடு போட்டுவிட்டு, அவர் மாட்டு மாமிசம் - (க்ஷநநக) பசு மாட்டிறைச்சியை வறுத்து சாப்பிட்டபோது, மணியன் ஏன் ஓய், நீர் இப்படி மாட்டிறைச்சியை (பீப்பை) சாப்பிடலாமோ? என்று கேட்டபோது, அவர், மிஸ்டர் மணியன், நான் சாப்பிடுவது இந்தியாவின் ழடிடல ஊடிற இந்திய புனித பசு அல்ல; மாறாக அமெரிக்க ஊடிற பசு மாமிசம்தான். இந்தியன் ஊடிற தானே சாப்பிடக் கூடாது என்று சொன்னது இவரைத் தூக்கி வாரிப் போட்டது என்று கூறியுள்ளார்!
இன்றும் முட்டை, கோழிக்கறி, ஆட்டுக்கறி, மீன் இவற்றை பார்ப்பனர்கள் சாப்பிடும் பழக்கமில்லை என்று கூறி விட முடியுமா பி.சங்க.பிரமுகர்களால்?
அவ்வளவு தூரம் போவானேன்? மேற்கு வங்கத்திற்குச் சென்று விஜிட்டேரியன் ஹோட் டல்களில் உணவு உண்ணட்டுமே!
அங்கே மீனே விஜிட்டேரியன் அய்ட்டம் தானே?
பேனர்ஜி, முக்கர்ஜி, சட்டர்ஜி என்ற ஜியில் முடியும் அத்தனை வங்கத்துப் பார்ப்பனர்களும் மற்றும் அடுத்த பெரிய ஜாதியான காயஸ் தர்களும் மீன் உணவை சர்வ சாதாரணமாக சாப்பிடுகின்றனரே அங்கே!
எனவே இப்படி குறுக்கு வழியில் பி. சங்கத் திற்கு விளம்பரம் தேட முயற்சிப்பது நல்லதோ!
இந்து மதக் கடவுள்கள் பல மிலிட்டரி ஓட்டல் கடவுள்கள்தானே?
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment