கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லையா?
காந்தியாரைக் கொன்ற நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லை என்று சாதிக்கிறார்கள்.
இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ். எனும் அமைப்பில் உறுப்பினர் சேர்க்கை என்பது கிடையாது. அதற்கான உறுப்பினர் அட்டை என்பதுபோன்ற முறைகள் கிடையாது. வன்முறை யாளர்கள் தப்பித்துக் கொள்வதற்காக இத்தகைய தந்திரமான ஏற்பாடாகும்.
அதேநேரத்தில், கோட்சே ஆர்.எஸ்.எஸ்.தான் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் உண்டே! வெகு தூரம் செல்லவேண்டாம் - அவரின் குடும்பத்தவர் களைவிட வேறு சாட்சியம் தேவையா?
காந்தியார் கொலைக் குற்றத்தில் தூக்குத் தண்டனை பெற்ற கோட்சேயின் தம்பி கோபால் கோட் சேவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவன் விடுதலை பெற்ற போது இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த ஃப்ரண்ட் லைன் இதழ் கோபால் கோட்சேயிடம் பேட்டி கண்டு விரிவாக வெளியிட்டுள்ளதே - இந்த வார ஃப்ரண்ட் லைனிலும் விரிவாகத் தகவல்கள் வந்துள்ளன.
அந்தப் பேட்டியில் கோபால் கோட்சே என்ன சொல்லியிருக்கிறான் என்பதுதான் முக்கியமாகும்.
நான்கு சகோதரர்கள் நாதுராம் கோட்சே, தாத்ரேயா, கோவிந்த் மற்றும் நான் (கோபால் கோட்சே).
எங்கள் நால்வரையும் தொட்டிலில் போட்டு வளர்த்தது ஆர்.எஸ்.எஸ். நாங்கள் வளர்ந்தது எங்கள் வீட்டில் அல்ல; ஆர்.எஸ். எஸில் என்று தெளிவாக, உறுதியாகக் கூறினானே- மறுக்க முடியுமா?
சொல்லுவது விடுதலை அல்ல; அவர்களின் ஃப்ரண்ட் லைன் இதழ்தான்.
எங்களை ஆர்.எஸ்.எஸ். அல்ல என்று சொல்லுபவர்கள் கடைந்தெடுத்த கோழைகள் என்றும் கோபால் கோட்சே கூறினான்.
இப்பொழுதுகூட நாதுராம் கோட்சேயின் அஸ்தியை ஒரு சொம்பில் வைத்து, ஒவ்வொரு ஆண்டும் கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளில் அந்த அஸ்திக்கு வழிபாடு நடத்திக் கொண்டு இருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்கள்தானே!
பிரிந்து சென்ற பாகிஸ் தான், மியான்மா உள்ளிட்ட பகுதிகளை இந்தியாவோடு இணைத்து புனித சிந்து நதியில் கோட்சே அஸ்தி யைக் கரைக்கத் திட்டமாம்!
அமர்ந்திருப்பவர்களில் இடதுபுறமிருந்து நானே ஆப்தே, சவர்க்கார், நாதுராம் கோட்சே
காந்தியார் படுகொலை யில் ஆயுள் தண்டனை விதிக் கப்பட்ட கோபால் கோட்சே, விஷ்ணு ஆர். கார்கரே தண் டனை முடிந்து வெளியில் வந்தபோது பூனாவில் ஒரு வரவேற்பு கொடுக்கப்பட் டது (12.11.1954 மாலை 5.30 மணி) 125-லிருந்து 200 பேர் வரை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தவர் லோகமான்ய திலகர் என்று போற்றப் படுபவரின் பேரன் ஜி.வி. கட்கேர். அந்த நிகழ்ச்சியில் விஷ்ணு கார்கரே என்ன பேசினான்?
G.V. Ketkar, grandson of Lokmanya Tilak, former editor of Kesari and Tarun Bharat, and Hindu Mahasabha ideologue, presided over the function. While speaking after the puja, after Gopal Godse and Karkare had narrated their prison experiences, Ketkar revealed that he was aware of the plan to kill Gandhi much in advance and that he had been told about this by Nathuram Godse himself. He said Godse had indicated his intention at a public meeting held at Shivaji Mandir when he referred to Gandhi’s oft repeated wish to live to the age of 125 years - Nathuram is reported to have said in Marathi - ‘Pan tumhala jagu denaar kon? Who will allow you to live till then?’
காந்தியார் படுகொலை செய்யப்படுவார் என்பது எனக்கு முன்கூட்டியே தெரியும். நாதுராம் கோட்சே அதனை ஒரு கூட்டத்தில் வெளிப்படுத்தினார். நான் 125 ஆண்டுகாலம் வாழ்வேன் என்று காந்தியார் சொல்லி இருக்கிறார்! நான் விட்டு வைத்தால் அல்லவா காந்தி 125 ஆண்டு வாழ்வார்? என்று நாதுராம் கோட்சே கூறியதை அந்த வரவேற்புக் கூட்டத்தில் விஷ்ணு கார்கரே போட்டு உடைத்துவிட்டானே!
இவற்றையெல்லாம் காந்தியின் கொள்ளுப் பேரன் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் என்று எடுத்துக் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.
முதல்வரிசை: நாதுராம் கோட்சே, நானே ஆப்தே, விஷ்ணுபன்ட் கார்கரே,
இரண்டாவது வரிசை: திகம்பர் பாட்ஜே, மதன்லால் பாவா, கோபால் கோட்சே
மூன்றாவது வரிசை: சங்கர் கிஷ்தியா, கோபால் கோட்சே பின்னால் சவர்க்கார் அமர்ந்துள்ளார்
இரண்டாவது வரிசை: திகம்பர் பாட்ஜே, மதன்லால் பாவா, கோபால் கோட்சே
மூன்றாவது வரிசை: சங்கர் கிஷ்தியா, கோபால் கோட்சே பின்னால் சவர்க்கார் அமர்ந்துள்ளார்
ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லவேண்டாம் என்று கோல்வாக்கர் வலியுறுத்தியதால், கோட்சே அப்படி நடந்துகொண்டான் என்று கோபால் கோட்சே கூறியுள்ளானே.
இவ்வளவு திட்டமிட்டு காந்தியாரைப் படுகொலை செய்திருக்கின்றனர், நம் நாட்டு அரசும், காவல் துறையும், புலனாய்வுத் துறையும் என்ன செய்து கொண்டு இருந்தன?
காவல்துறையிலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி இருந்தனர் என்று இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதே - அதுதான் காரணம். நீதித்துறையும், நிர்வாகத் துறையும் பார்ப்பனர் வசமே இருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அன்றைக்கு மகாராட்டிர மாநில உள்துறை அமைச்சர் பார்ப்பனர். அதிகாரிகள் பார்ப்பனர்கள். அதனால்தான் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் உயிரோடு தப்பிக்க முடிந்தது. இல்லாவிட்டால், கோல்வாக்கர் உள்படக் கூடியிருந்த வீட்டை ஆத்திரமடைந்த பொதுமக்கள் கொளுத்தி இருப்பார்கள்.
சவர்க்கார் தூக்கிலிருந்து தப்பியது எப்படி?
1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் நாள் மதன்லால் பாவா என்பவன், காந்தியைக் கொல்ல முயற்சித்து தோல்வியைக் கண்டவுடனே, இந்தக் குற்றப் பின்னணியின் மூளையாகச் சந்தேகிக்கப் பட்டது வி.டி. சவர்க்கார்மீதுதான். புலனாய்வு அதி காரிகள் சந்தேகத்தை உறுதி செய்தனர். அவரது தொடர்பு, நீதிமன்றத்தில் சாட்சிகளால் நிரூபிக்கப்பட்டது. ஆயினும் சவர்க்கார், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுத் தப்பி விட்டார்!
துணைப் பிரதமராக இருந்த வல்லபாய் படேலிடம், சவர்க்காரின் குற்றப் பங்களிப்பைப்பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு, உண்மையை உணர்ந்து கொண்டார்.
1965 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி ஒரு விசாரணைக் கமிஷன், உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.கே.கபூர் தலைமையில் அமைக்கப்பட்டது. அதன் முடிவு 1969 இல் வெளியிடப்பட்டது. அதன்படி, சவர்க்காரும், அவரது கூட்டத்தாரும் கொலை செய்வதற்கான சதிச் செயலைத் தவிர மற்ற கருத்துகளை அழிக்கும் விதமாகத்தான், விசாரணை தொடர்பாக ஆய்ந்த பிறகு, உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
1976 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட லாரிகாலின்ஸ், டொமினிக் லாப்பியர் என்பவர்கள் எழுதிய நள்ளிரவில் விடுதலை (Freedom at Midnight) என்ற நூலில், ஏராளமான ஆதாரங்கள் காணக் கிடக்கின்றன. அந்த ஆசிரியர்களுக்கு காவல்துறை உளவுப் பிரிவின் ஆவணங்களும், உயிருடன் உள்ள முக்கிய பங்களிப் பாளர்களின் நினைவுத் தொகுப்புகளும் துணை புரிந்து உள்ளன. மதன்லால், தனது கைதுக்குப் பிறகு, கொலை முயற்சிக்கு முன்புதான் சவர்க்காரைச் சந்தித்துள்ளது பற்றி காவல்துறையிடம் குறிப்பிட்டுள்ளான்.
மேலும் கோட்சே பற்றிய விவரங்களை இந்துராஷ்ட்ரா என்ற மராத்திய நாளிதழ் பூனாவிலிருந்து வெளிவரும் (அதன் ஆசிரியர் என்.வி. கோட்சே; உரிமையாளர் என்.டி. ஆப்தே;) சவர்க்காரின் குழுமத்தைச் சேர்ந்த செய்தி இதழ் என்றும் கூறியுள்ளார்.அவனது கொலை முயுற்சி தோல்வி யுற்றபோது, மதன்லாலின் சகாக்கள் விட்டுச் சென்ற துணிகளில் பொதுவான சலவையகத்தின் பொதுவான அடையாளம் என்.வி.ஜி. என்று குறிக்கப்பட்டிருந்தது.
அவர்கள், விசாரணை ஆரம்பத்தில் நன்கு சுறுசுறுப்பாக இயங்கியது. ஆனால், தற்பொழுது நீர்த்துப்போன திறமை யற்ற முறையில் கையாளப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிரச்சினைத் தீயாகப்பற்றி எரியக்கூடியதாக அமைந்து உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
காவலர்கள் இதைவிட அதிகமாக விரும்பி இருக்க மாட்டார்கள் என்று காலின்சும், லாப்பியரும் குறிப்பிடு கிறார்கள். புதுடில்லி காவல்துறையின் திறமையின்மையும், மும்பை காவல்துறையின் திறமையும் முரண்பட்டுள்ளன. மும்பாய் புலனாய்வு காவல்துறையின் சிறப்புப் பிரிவின் பொறுப்பிலிருந்த காவல்துறை துணை கமிஷனரான ஜம்சீட் நாகன்வாலா(32) என்பவர் மும்பை உள்துறை அமைச்சராக இருந்த மொரார்ஜிதேசாயினால் பொறுப்பளிக்கப்பட்டார்.
காந்தியைக் கொலை செய்ய முயற்சித்து தோற்ற பிறகு, மதன்லால் ஒப்புதல், சவர்க்கார் இந்தக் கொலை முயற்சியின் பின்னணியில் இருப்பதை ஏற்றுக் கொண்டு, சவர்க்காரை கைது செய்யவேண்டி மொரார் ஜியின் அனுமதியை நாகன் வாலா வேண்டினார். மொரார்ஜி தேசாய் கோபத்துடன் அந்த வேண்டுகோளை மறுத்துவிட்டார். ஆனாலும், சவர்க் காரின் வீட்டை தனது கண்காணிப் பிலேயே வைத் திருந்தார். காந்தி கொலையுண்ட பிறகு, 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 22 ஆம் நாளன்று காவல் துறைக்கு எழுத்து மூலமான ஒரு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில்தான் எந்த ஒரு பொது அரசியல் செயல்பாட்டிலும், அரசு விரும்பும் வரை பங்கேற்கமாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார் சவர்க்கார்.
இருந்தாலும் சவர்க்கார் கைது செய்யப்பட்டார். திகம்பர் பாட்கே என்ற அப்ரூவர், அவருக்கு எதிரான முக்கிய சாட்சியானார். சவர்க்கார் வீட்டிற்கு அவர் போனதை மற்ற இரண்டு சாட்சிகள் உறுதிப்படுத்தினார்கள். நீதியரசர் ஆத்ம சரண் பாட்கேயை ஒரு உண்மையான சாட்சியாகக் கண்டார்.
பல இடங்களில் அவருடைய சாட்சியம் மற்ற தனிப்பட்ட சாட்சியங்களுடன் ஒத்துப் போயிற்று.
பல இடங்களில் அவருடைய சாட்சியம் மற்ற தனிப்பட்ட சாட்சியங்களுடன் ஒத்துப் போயிற்று.
ஆனால், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில், கோட்சேயும், அவனது கூட்டாளியான நாராயண் ஆப்தேயும் சவர்க்கார் வீட்டிற்குப் போனது மற்ற சாட்சியங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. அப்பொழுது பாட்கே வெளியே இருக்கும்படி சொல்லப்பட்டார். இரண் டாவது சந்தர்ப்பத்தில் கோட்சேவுக்கும், ஆப்தேவுக்கும் சவர்க்காரின் உற்சாகமூட்டும் விதமாக வெற்றியுடன் திரும்பி வா! என்ற வார்த்தைகளைக் கேட்டார்.
அவர் வாக்குமூலத்தை ஒத்துப் போகும் மற்ற இரு சாட்சிகள் அந்த மூன்று பேரும் வீட்டிற்கு முன் இறங்கிப் போனார்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல வில்லை. ஆனால், அந்த வீட்டில் வேறு இரண்டு குடித்தனக் காரர்களும் உள்ளனர். ஒரு அப்ரூவரின் வாக்குமூலம் மற்றொரு தனிப்பட்ட சாட்சியின் வாக்குமூலத்துடன் சட்டப்படி ஒத்துப் போகவேண்டும். ஆகவே, இந்த காரணத்தின் அடிப்படையில் சவர்க்கார் விடுதலை செய்யப்பட்டார்.
ஆயினும், சவர்க்கார் இறந்து ஓராண்டு கழிந்த பிறகு அவருடைய பாதுகாவலர் ஆப்தே ராமச்சந்திரகாசரும், அவரது செயலாளர் கஜானன் விஷ்ணு டாம்லேயும், கபூரின் விசாரணைக் கமிஷனின் ஏற்பட்ட இடைவெளியை நிரப்பினர். அதன்படி, இரண்டு சாட்சிகளின் வாக்குமூலங் களின்படி, ஆப்தேயும், கோட்சேயும் பம்பாயில் சவர்க்காரை அடிக்கடி சந்தித்துள்ளனர்.
தவிரவும், மாநாடுகளிலும் மற்றும் ஒவ்வொரு கூட்டத்திலும், அவர்கள் சவர்க்காருடன் சேர்ந்து காணப்படுகிறார்கள். இந்த சாட்சியத்தின்படி கார்கரேயும், சவர்க்காருக்குத் தெரிந்தவராகவும், சவர்க்கார் வீட்டிற்கு அடிக்கடி போகக்கூடியவராகவும் இருக்கிறார். பாட்கேயும், சவர்க்கார் வீட்டிற்குப் போய் வருபவர். டாக்டர் பார்ச்சுரேயும் அங்கு போயிருக்கிறார்.
இதிலிருந்து, மகாத்மா காந்தி கொலையில் பின்னாளில் தொடர்புடையவர், அடிக்கடி சவர்க்காரின் வீட்டில் கூடி அவருடன் நீண்ட உரையாடல் களை நடத்தியுள்ளனர். டில்லி செல்வதற்கு முன்பு ஆப்தேயும், கோட்சேயும் சவர்க்கார் வீட்டிற்குப் போயியுள்ளனர். குண்டுவீச்சுக்கு முன்னாலும், அவர்கள் கொலை செய் வதற்கு முன்னாலும், அவர்கள் இருவரும் சவர்க்காரைச் சந்தித்து நீண்ட உரை நிகழ்த்தியுள்ளனர். அதில் குறிப்பாகக் கவனிக்கப்படவேண்டியது என்னவெனில் கோட்சேயும் ஆப்தேயும் 1946, 1947 மற்றும் 1948 ஆம் ஆண்டுகளில், பல இடங்களில் அவர்கள் சவர்க்காருடன் பல பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டிருந் தால், சவர்க்காருக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கும். 1948 இல் ஜனவரி 14, 17 ஆகிய தேதிகளில் கோட்சே மற்றும் ஆப்தேயின் சவர்க்கார் வீட்டிற்குப் போனதுபற்றி தெளிவாகி யிருக்கும். அவர்கள் 23, 24 ஆகிய தேதிகளில் குண்டு வீச்சுக்குப் பிறகு வந்திருந்ததாக சவர்க்காரின் மெய்க் காவலர் கமிஷன் முன்பு சொன்னார். சவர்க்காரின் செயலாளர் டாம்லே, ஜனவரி மாத மத்தியில் கோட்சேயும், ஆப்தேயும் சவர்க்காரைச் சந்தித்ததாகவும், அவர்கள் அவருடன் தோட்டத்தில் உட்கார்ந்து இருந்ததாகவும் சொன்னார்.
நாகன்வாலா முதல் குற்றக் குறிப்பின்படி, இந்தச் சதிச் செயலுக்குப் பின்னே இருந்தவர் சவர்க்கார்; அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். கொலை நடந்த மறுநாள், 1948, ஜனவரி 31 ஆம் நாளிட்ட நாகன்வாலாவின் கடிதம், டில்லி போவதற்கு முன்பு, கோட்சே, ஆப்தே, சவர்க்கார் மூவரும் ஒன்றுகூடி பேசியுள்ளனர் என்று குறிப்பிடுகிறது.
காசரும், டேம்லியும் கொடுத்துள்ள தகவலின்படி, மேலும் அவ்விருவரும் சவர்க்காரின் வீட்டிற்கு எந்த நேரத்திலும் தடை இல்லாமல் சென்று வருபவர்கள். பாட்கே இல்லாமல் ஜனவரி 14, 17 ஆகிய தேதிகளில் மீண்டும் ஒருமுறை கூடிப் பேசி உள்ளார்கள். அவர்கள் ஏன் நீதிமன்றத்தில் சாட்சிகளாக கொணரப்படவில்லை என்பது ஒரு புதிர்.
வல்லபாய் படேல் பழிவாங்கப்பட்டார். 1948, பிப்ரவரி 27 ஆம் நாள் அவர் நேருவுக்கு ஒரு கடிதம் எழுதினார். நான் காந்தியார் கொலைபற்றிய விவரங்களைப்பற்றி ஆராயும் தொடர்புகளில் இருக்கிறேன். முடிவு இதுதான். அது, சவர்க்காரின் தலைமையின்கீழ் உள்ள இந்து மகாசபையின் வெறிபிடித்த ஒரு கிளையாகும்; சதி செய்து அவர்கள் நிறைவேற்றியும் விட்டார்கள் என்று கூறியுள்ளார்.
காந்தியார் கொலைபற்றி விசாரணை நடத்திட நீதிபதி கபூர் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்ட அந்தக் காலகட்டத்தில் சவர்க்கார் இறந்துவிட்டார். கபூர் ஆணையத்தின் முன் சவர்க்காருக்கு எதிராகவே சாட்சியம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், என்ன செய்ய? சவர்க்கார்தான் மரணம் அடைந்துவிட்டாரே!
கோல்வாக்கருக்கே இவன்தான் குருநாதர். இந்துத்துவா கோட்பாட்டை உருவாக்கிக் கொடுத்தது இந்த ஆசாமிதான்.
நீதிமன்றத்தில் நாதுராம் கோட்சே கொடுத்த 192 பக்க அறிக்கைகூட சவர்க்கார் எழுதிக் கொடுத்ததுதான். அந்த அறிக்கை பிற்காலத்தில் கோபால் கோட்சேவால் May It Please Your Honour என்ற பெயரால் வெளியிடப்பட்டது.
வீரசவர்க்கார் என்று பெயர்தானே தவிர, செயலில் கடைந்தெடுத்த கோழை.
பிரிட்டீஷ் அரசிடம் எட்டு முறை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த வீராதி வீரர் இவர் (கூட்டத்தில் பலத்த சிரிப்பு).
நான் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கியே இருக்கிறேன். என்னை விடுதலை செய்து அருள்க என்று மண்டியிட்டு மன்னிப்புக் கோரியிருந்தாலும், வெளியில் வந்து தன் பார்ப்பன வன்ம வேலையில் ஈடுபட்ட அறிவு நாணயங்கெட்ட ஆசாமிதான் சவர்க்கார்.
காந்தியார் படுகொலை வழக்கில் டெக்னிக்காக அவர் தப்பியிருந்தாலும், காந்தியாரின் கொலைக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் இந்த சவர்க்கார்தான் என்பது உலகறிந்த உண்மையாகும்.
இதில் வெட்கக்கேடு என்னவென்றால், நாடாளுமன்றத் தில் காந்தியார் படத்தோடு, அவரை சுட்டுக்கொன்ற இந்த சவர்க்கார் படமும் வைக்கப்பட்டதுதான்.
ஒவ்வொரு ஆண்டும் சவர்க்காரின் பிறந்த நாள், நினைவு நாள்களில் பூமாரி பொழிந்து மரியாதை நிமித்தமாகத் தலைகுனிந்து நிற்கிறார்களே - இதைவிடத் தலைகுனிவு உண்டா?
- என்ற கேள்வியோடு சிறப்புக் கூட்டத்தில் உரையை நிறைவு செய்தார் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
90 நிமிடங்களில் அலை அலையாக கருத்துகளும், தகவல்களும் வந்து விழுந்துகொண்டே இருந்தன.
சிறப்புக் கூட்டத்திற்குப் புதுப்புது முகங்கள் ஏராளம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment