இந்தியாவின் வட மாநிலங்களில் பாயும் கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள் குளிப்பதற்கு ஏற்ற தகுதிகூட இல்லாத அளவிற்கு மாசு அடைந்துள்ளன என்று பத்மஸ்ரீ விருது பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் அனில் ஜோஷி தலைமையில் டேராடூனில் இயங்கிவரும் ஹெஸ்கோ என்ற அரசு சாரா அமைப்பு ஆய்வு செய்து அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
ஒரு நாளல்ல; இரு நாள்கள் அல்ல, 27 நாள்கள் 1800 கி.மீ. அளவிலான தூரத்தைக் கடந்து இந்த ஆய்வினைத் துல்லியமாக மேற்கொண்டுள்ளது.
கங்கை, யமுனை நதிகளை மட்டுமல்ல; 24 நதிகளில் இந்த ஆய்வினை நடத்தியுள்ளனர். இந்த நதிகளில் பெரும்பாலும் சாக்கடை நீர் ஓடுகின்றது. இதன்மூலம் அந்நதிகளைச் சார்ந்து வாழும் மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் எதிர்காலம் கேள்விக் குறியே என்றும் எச்சரித்துள்ளனர்.
பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வழிகோலு கிறதோ, அதேபோல இயற்கை நீர் வளங்களான இத்தகைய நதிகள் உள்ளிட்ட நீர் நிலைகளைக் காக்கும் பொருட்டு, ஜி.இ.பி. எனப்படும் மொத்தச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற திட்டத்தை அரசு வகுத்து, நீர் நிலைகளைப் பாதுகாக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்று அக்குழு தெரிவித்துள்ளதோடு, இதுகுறித்து பிரதமர் மற்றும் அனைத்து முதலமைச்சர்களுக்கும் அறிக்கை தயாரித்து அனுப்ப இருப்பதாக ஆய்வுக் குழுவின் தலைவர் அனில் ஜோஷி தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் எதையும் தெய்வத்தோடு முடிச்சுப் போட்டு விடுவதால் அதைப்பற்றி சிந்திக்கும் கூர்மையை இழந்துவிடுகின்றனர்.
ஆறுகளை எல்லாம் கடவுளாகப் பாவிக்கும் மனப்பான்மை, கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்பதெல்லாம் எத்தகைய மூட நம்பிக்கை! தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்ற ஆபத்தான பழமொழிகள் எல்லாம் இந்த நம்பிக்கையில் வந்தவைதான்.
செத்த மனிதர்களை மட்டுமல்ல; மாடுகளையும் தூக்கிக் கங்கையில் வீசி எறிவார்கள் என்றால், இந்த மூட நம்பிக்கையை எள்ளி நகையாட வேண்டியதுதான்.
இப்பொழுது மட்டுமல்ல, இதற்கு முன்பும்கூட இது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுண்டு.
இப்பொழுது மட்டுமல்ல, இதற்கு முன்பும்கூட இது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுண்டு.
மும்பையைச் சேர்ந்த மருத்துவக் குழு ஒன்று அத்தகைய ஆய்வினை மேற்கொண்டது. அந்தக் குழுவில் இடம்பெற்ற மருத்துவர் ஜெகன்நாத் என்பவர் தெரிவித்துள்ள தகவல் பெரிதும் கவலை அளிக்கக் கூடியதாகும்.
பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் மட்டும் ஆண்டுக்கு 20 முதல் 30 ஆயிரம் மக்கள் வரை பித்த நீர்ப் பையில் உருவாகும் புற்றுநோயால் பாதிக்கப்படு கின்றனர். மும்பையில் உள்ள டாடா நினைவு மருத் துவமனையில், பித்த நீர்ப் புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளில் பெரும்பாலோர் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் கங்கை நதிக் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
கங்கை நதியில் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கலந்து மிக மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் கங்கை நதிக்கரையோரத்தில் நிலத்தடி நீரும் கடுமையாக மாசுபட்டுள்ளது. அந்த நிலத்தடி நீரில் அளவுக்கும் அதிகமாக இரும்புச் சத்துக்களும், நச்சுப் பொருள்களும் கலந்துள்ளன என்று அந்தக் குழுவின் அறிக்கை கூறுகிறது.
இன்னும் ஒரு கூடுதலான அருவருக்கத்தக்க தகவல் உண்டு. இப்புனித நதிகள் ஓடுவதாகக் கருதப்படும் பகுதிகளில் வாழ்வோரிடையே எய்ட்ஸ் நோய் தொற்றியவர்கள் அதிகம் என்பதுதான் அந்தத் தகவல். சுவிஸ் அரசு உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இதனைத் தெரிவித்துள்ளது. கஞ்சா மற்றும் ஹெராயின் போதைக்கு ஆளாகின்றனராம் - இப்பகுதிக்குச் சுற்றுலாவாக வரும் பயணிகள்.
பக்தி என்னும் மூட நம்பிக்கை அறிவை மட்டுமல்ல, ஒழுக்கத்தையும், உடலையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்குகிறதே!
இதனை எடுத்துச் சொல்லும் பகுத்தறிவுவாதிகள் தானே உண்மையில் மனித குலத்துக்குத் தேவை யான நற்றொண்டு செய்யக் கூடியவர்கள்.
முதலில் ஒழிக்கப்படவேண்டியது இந்தக் கடவுள் நம்பிக்கையும், பக்தியும்தான்! அப்பொழுதுதான் மனித குலம் தப்பிப் பிழைக்கும் - எச்சரிக்கை!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- மிரட்டலுக்கு அஞ்ச வேண்டாம்!
- 2013ஆம் ஆண்டே வருக!
- உள ரீதியான உறுதி தேவை!
- அரசுக்குப் பொறுப்பில்லையா?
- ஆருத்ரா தரிசனம்!
No comments:
Post a Comment