Sunday, December 23, 2012

தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும்தான் காதல் செய்கிறார்களா?


கேள்வி: :  மரணத்தைப் பற்றி தந்தை பெரி யாரின் கருத்தென்ன? - பி.வி. மூர்த்தி, திருமங்கலக்குடி
பதில்: செத்துப் போச்சு செத்துப் போனார் என்றால் சத்துப் போச்சு - அதாவது மூச்சு விடுதல் நின்றது என்பதுதான்! மனித வாழ்வின் பயன் என்ற தந்தை பெரியார்தம் அரிய சொற்பொழிவு கட்டுரைத் தொகுப்பு நூலைப் படியுங்கள்.
அதற்கு மேல் ஒன்றும் இல்லை. ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறவி முன்ஜென்ம வினைப்பயன், கர்மா எல்லாம் வெறும் கப்சா என்றார் - தந்தை பெரியார் அவர்கள்!
கேள்வி : ஜாதி ஒழிப்புக்காக சட்டத்தை எரித்து  சிறை சென்றவர்களுக்காக அரசு உதவி கேட்டு, தாங்கள் செய்த முயற்சி என்னவா யிற்று?                    - தி. நாகராஜன், கோகூர்
பதில்: திமுக ஆட்சியில் ஏதோ கொஞ்சம் நகர்ந்தது; பிறகு கிணற்றில் விழுந்த பாறை யாகிக் கிடக்கிறது!
கேள்வி:  உ.பி. முலாயம்சிங் - தாழ்த்தப் பட்டவர் களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்ப்பதற்குப் பதிலாக பிற்படுத் தப்பட்டோருக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டிருக்கலாம் அல்லவா? - வ. சங்கீதா, திருப்பதி
பதில்: அதைச் சரியாகச் செய்யத் தெரியாது திசைமாறி கெட்ட பெர் எடுக்கும் பண்பாட்டு அநாகரிகவாதிகளாக முலாயம் சிங்கும், அவரது கட்சியும் ஆகிவிட்டதே! அவர்கள் கொள்கை வழி பயன்பட பல முயற்சிகள் தேவை!
கேள்வி :  குஜராத் வெற்றிக்குப் பிறகு மோடி யின் பார்வை அடுத்து பிரதமர் நாற்காலி யாமே?        - மு. சுதர்சனன், சென்னை - 6
பதில்: மோடி பதவி ஆசை இல்லாதவர் அல்லவே! ஆனால் அவரது ஆசையை நிறை வேற்றிட அவரது கட்சியினரே விட மாட்டார்களே!
கேள்வி:  தருமபுரியில் தி.க. மாநாட்டையும் பார்த்தேன் - அதற்கு சில நாட்களுக்கு முன் மருத்துவர் ஒருவரின் பேச்சையும் கேட்டேன். மருத்துவரின் பேச்சில் எல்லாம் ஒருமைதான். அவன் - இவன்தான் - ஏனிப்படி? - மு. உஸ்மான், தருமபுரி
பதில்: அவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை இப்படி இடம் மாறி என்னிடம் கேட்டுள்ளீர்களே!
பெரு நிலைக்குச் சென்று விடுபவர்கள் சிலர். இப்படி பண்ணையார் - மனப்போக்கு கொள் ளுவது வழமை; ஆனால் பாட்டாளிகளின் தலைவருக்கு இப்படி வரலாமா?
கேள்வி:  காவிரிப் பிரச்சினையில் அனைத் துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்குத் தமிழக முதலமைச்சருக்கு என்ன தயக்கம்? - வ. சாவித்திரி கணேசன், மேட்டூர் அணை
பதில்: பாட்டும் நானே! பாவமும் நானே! என்பதுபோன்று ஆட்சியும் நானே!  அனைத்தும் நானே! என்ற ஏகாதிபத்திய மனப்போக்கே காரணம்! (கருநாடகத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் வேதனையே!)
கேள்வி:  இந்தியப் பத்திரிகைக் கவுன்சில் தலைவர் கஜேந்திர கட்சு தடாலடியாய் அடிக் கிறாரே?                   -மு.அ. சந்திரன், மாமண்டூர்
பதில்: உண்மையைப் போட்டுடைக்கும் அவர் வாழ்க! அவர் மனப்போக்கு வளர்க!!
கேள்வி:  சென்னையில் சபாக்கள், அத் தோடு அறுசுவை விருந்தாமே?
- பொத்தேரி சுந்தரன், சென்னை - 2
பதில்: அவாளுக்கு அறுசுவை விருந்து போஜனம், கும்பகோணம் 360 டிகிரி காஃபி வறுவல் -சீவல் - அப்பளம் - வடாம், அக்கார அடிசல் ததி வன்னம் இத்தியாதி! இத்தியாதி! இசைவிழா சங்கீத சாம்ராஜ்ய அனுபவிப்பு - சாலோப சாரூகம்!
உலகம் அநித்தியம் என்பதே இதற்கு மூல காரணமோ!
கேள்வி:  பார்ப்பனர்கள் திராவிடர் இயக்கத் தின்மீது வைக்கும் குற்றச்சாற்றுகளுக்கு (எடுத்துக்காட்டு உடையும் இந்தியா) தாங்கள் பதிலடி கொடுத்தபின் அதற்கு மறுப்புக் கூற முன் வருவதில்லையே - ஏன்? - துரை. குணாளன், சின்ன காஞ்சிபுரம்
பதில்:  என் புத்தகத்திற்கு மட்டுமா? நம் கழக வெளியீடுகள் எதற்கும் அவாளால் பதில் கூற முடியாதே! சட்டியில் இருந்தால் அல்லவோ அகப்பையில் வரும்!
கேள்வி:  தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும்தான் காதல் செய்வதுபோல ஒரு தோற்றம் உருவாக்கப் படுகிறதே?             - செ.பாரி, அச்சிறுபாக்கம்
பதில்: சில குறிப்பிட்ட ஜாதி வெறியர்களின் சதி அது; பார்ப்பன ஊடகங்கள் அதற்குக் கொம்பு சீவி விடுகின்றன! எனவே ஏமாறாதீர்! ஏமாற்றாதீர்!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...