தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திராவிடர் இயக்கம் இல்லாமல் எந்தச் சாதனையும் இல்லை - எந்த வளர்ச்சியும் கிடையாது.
1) பார்ப்பனர் அல்லாதாருக்காக ஓர் அமைப்புத் தொடங்கப்பட்டதே - அது என்ன சாதாரணமா?
2) பார்ப்பனர்கள் உருவாக்கிய வருண சமூக அமைப்பில் பார்ப்பனர் அல்லாதாரின் சமூகத் தகுதி என்ன? சூத்திரர்கள்தானே?
3) சூத்திரர்கள் என்றால் யார்? பிறவி அடிமைகள் தானே? வேசி மகன் தானே?
4) அந்தச் சூத்திரனுக்கு, பஞ்சமர்கட்கு படிக்கும் உரிமை உண்டா? பொது வீதிகளில் நடக்கும் உரிமை உண்டா? அரசர்கள் காலத்திலும் அதே நிலைதானே?
5) இலண்டன் வரை சென்று பார்ப்பன அல்லாதாரின் இடஒதுக்கீட்டுக்காக பிரிட்டிஷ் பாராளுமன்றமும் சாட்சியம் அளித்தது திராவிடர் இயக்கம்தானே?
6) பொது வீதிகளில் நடக்கும் உரிமை, பொது நீர் நிலைகளைப் பயன்படுத்தும் உரிமை, பேருந்துகளில் தாழ்த்தப்பட்டோர் பயணம் செய்யும் உரிமை, கல்விக் கூடங்களில் தாழ்த்தப்பட்டோர் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்ற நிலை இவை எல்லாம் திராவிடர் இயக்க ஆட்சியின் சாதனை அல்லாமல் வேறு என்னவாம்?
7) கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கக் குழு அமைத்து, பார்ப்பனர் அல்லாதாரும் கல்லூரிக்குள் நுழைய கதவைத் திறந்து விட்டது யார்?
8) அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்ய தனி அமைப்பை (ளுவயகக ளுநடநஉவடி க்ஷடியசன) உண்டாக்கியது எந்த ஆட்சி?
9) வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணையைக் (ஊடிஅஅரயேட ழு.டீ.) கொண்டு வந்து தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கல்வி, வேலை வாய்ப்பில் இடம் பெற்றதற்கு யார் காரணம்?
10) பெண்களுக்கு வாக்குரிமை இந்தியாவிலேயே முதன் முதலாக அளித்தது எந்த ஆட்சி?
11) பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக் கட்டி விட்டு, இழிவுபடுத்திய முறையை ஒழித்திட தேவதாசித் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது எந்த ஆட்சி?
12) பார்ப்பனர்களின் சுரண்டல் கேந்திரமாக இருந்த கோயில்களை இந்து அறநிலையத்துறையை உண்டாக்கிக் கொள்ளையைத் தடுத்தது எவர் ஆட்சியில்?
13) ஆங்கிலேயர் மயமாக இருந்த மருத்துவத் துறையை இந்திய மயமாக்கியது எந்த ஆட்சி?
14) சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு இடம் அளித்தது யார்?
15) இந்தியை எதிர்த்ததும், தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்று சட்டம் செய்ததும் யார் - எவர்?
16) சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று சட்ட ரீதியாகப் பெயர் சூட்டியது யார்?
17) பார்ப்பனீய முறையில் நடைபெற்று வந்த விவாஹ சுபமுகூர்த்த முறையைத் தூக்கி எறிந்து சுயமரியாதைத் திருமண முறையை அறிமுகப்படுத் தியது யார்? அதற்குச் சட்ட வடிவம் கொடுத்ததும் யார்?
18) தமிழுக்குச் செம்மொழித் தகுதியை ஏற்படுத்தியது யார்?
19) மாநில அரசு மட்டுமளவில் இருந்த இட ஒதுக்கீட்டை மய்ய அரசின் துறைகளிலும் (மண்டல் குழுப் பரிந்துரைகளை) பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்திய அளவில் கொண்டு வந்ததற்கு யார் காரணம்?
20) சுதந்திர தினக் கொடியை முதல் அமைச்சர் ஏற்றுவதற்கான உரிமையை அகில இந்திய அளவில் வாங்கிக் கொடுத்தவர் யார்?
இவை அனைத்திற்குமே முழு முதற் காரணம் திராவிடர் இயக்கமும், அதன் ஒப்பற்ற தலைவர்களும் அல்லவா?
இவற்றில் ஒன்று நீங்கினாலும் அது எவ்வளவுப் பெரிய இழப்பு என்பதை அறிவு நாணயத்தோடு எண்ணிப் பார்த்தால் திராவிடர் இயக்கத்தின் அருமை - பெருமை என்ன என்று எளிதில் விளங்குமே!
இனி மேலாவது திராவிடர் இயக்கத்தின்மீது சேற்றை வாரி இறைக்கும் துரோகத்தைக் கை விடுவார்களா - தமிழ்த் தேசியவாதிகள்?
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
2 comments:
பதவியில் இருந்தால்தான் நாலு காசு பார்க்க முடியும் என்று எண்ணி 1967=இல் பாப்பான் காலில் விழுந்து பச்சை தமிழன் ஆட்சியை கவிழ்த்தது எந்த இயக்கம் .பார்ப்பன இந்திராவுடன் சேர்ந்து சூத்திரன் சஞ்சீவ ரெட்டியை தோற்கடித்து பார்பன கிரியை ஜனாதிபதி ஆக்கியது எந்த இயக்கம்.எமெர்ஜென்சியில் பார்பன இந்திராவிடம் எவ்வளவு மிதி வாங்கியும் புத்தி வராமல் இன்றைய வரைக்கும் அந்த அம்மாளின் கட்சியின் காலை நக்கி கொண்டிருப்பது எந்த இயக்கம்.
நீங்கள் பட்டியலிட்டவைகள் யாவும் கடமைகள். எனினும் இதை நான் ஆமோதிக்கிறேன். அதற்காக பாராட்டுகிறேன்.
அதேநேரத்தில் இவைகளையும் மனதில் கொள்ளவேண்டாமா?
ஒரு தமிழன் பிரதமராவதை தடுத்தது எந்த இயக்கம்?
அப்துல் கலாம் இரண்டாவது முறை ஜனாதிபதியாக வாய்ப்பு இருந்தும் ஆதரவு அளிக்க தவறிய இயக்கம் எந்த இயக்கம்? (மராட்டியத்தில் கட்சி பாகுபாடில்லாமல் மராட்டியர்களுக்கு முன்னுரிமை அதனால் தான் பிரதீபா பட்டேல் ஜனாதிபதியாக முடிந்தது)
இலங்கை தமிழர்கள் படுகொலையின் போது காங்கிரசுக்கு ஆதரவு அளித்தது எந்த இயக்கம்?
தமிழ் மீனவர்கள் கொல்லப்படுவதை இன்னும் தடுத்து நிறுத்தாத இயக்கம் எந்த இயக்கம்?
இவை அனைத்திற்குமே முழு முதற் காரணம் திராவிடர் இயக்கமும், அதன் ஒப்பற்ற தலைவர்களும் அல்லவா?
இவைகள் எவ்வளவுப் பெரிய இழப்பு என்பதை அறிவு நாணயத்தோடு எண்ணிப் பார்த்தால் திராவிடர் இயக்கத்தின் அருமை? - பெருமை? என்ன என்று எளிதில் விளங்குமே!
Post a Comment