திராவிடர் இயக்க நூற்றாண்டுச் சிந்தனை வரிசை இளைஞர்களிடத்தில் அய்யா அண்ணா கொள்கைகள் போய் சேர வேண்டும் -
27.11.1967 தமிழின வரலாற்றில் பெருமை கொள்ளும் பொன்னாள். ஆம் அன்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிகுந்த ஒரு தீர்மானம் வடித்து எடுக்கப்பட்டது. தந்தை பெரியாரின் தத்துவ வெற்றியை தன் காலத்திலேயே கண்கூடாக அன்று கண்டார். அது மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான தன்மானமுள்ள தமிழர் குடும்பங்கள் மகிழ்ச்சியில் திளைத்தன. அறிஞர் அண்ணா தந்தையின் தலைமகன் என்பதை தரணிக்குக் காட்டினார். ஆம் அன்றுதான் சுயமரியாதை திருமணம் சட்டப்படி செல்லும் எனும் காலத்தை கடந்தும் போற்றப்படும் சிறப்பு மிகுந்த நிலையை அடைந்த நாள் அந்நாள். அந்நாளில்தான் 1955ஆம் ஆண்டின் இந்து திருமணங்கள் சட்டத்தின் பிரிவில் சிறப்பு திருமணச் சட்டத் தின்கீழ் சுயமரியாதைத் திருமணங்கள் செல்லும் என்ற திருத்தத்தை கொண்டுவர தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி தன் நன்றியை அய்யாவிற்கு செலுத்தியது.
அறிஞர் அண்ணாவின் தலைமை யிலான முதல் அமைச்சரவை பொறுப்பேற்று வடித்த முத்தான தீர்மானம் இது. இதன் சட்டத் திருத்தத்தில் சேர்க்க மக்களவை, மாநிலங்களவை ஒப்புதலுக்குப் பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் தான் சட்டத் திருத்தம் செய்ய முடியும். அப்படிப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிகுந்த தீர்மானம் சுமந்து கொண்டு டில்லிக்கு சென்றவர் அன்றைய சட்ட அமைச் சரான செ. மாதவன் அவர்கள். வரலாற்றின் பக்கத்தில் மீண்டும் பின்னோக்கிப் பயணித்திட சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்றோம். விடுதலை ஏட்டிற்காக ஒரு பேட் டியும் கண்டோம். எதிர்வரும் ஆகஸ் டில் தனது 80ஆம் வயதில் அடியெ டுத்து வைக்கும் இளைஞராக இருக் கும் முன்னாள் அமைச்சர் செ.மாதவன் நாம் கேட்ட கேள்விகளுக்கு அமைதி யாக, ஆனால் ஆழமாக பதிலளித்தார்.
ஈர்க்கப்பட்டது எப்படி?
ஈர்க்கப்பட்டது எப்படி?
விடுதலை: திராவிடர் இயக்கத்தால் தாங்கள் ஈர்க்கப்பட்டது எப்படி?
செ.மாதவன்: நீதிக்கட்சி காலத்தி லிருந்த அ. பொன்னம்பலனார் என் னுடைய உறவினர் அவர் ஈர்ப்புக் கிடைத் தது. அவர் மூலமாகத்தான். அவருக்கு தலைவர்களெல்லாம் பழக்கம். திராவிடர் இயக்க கருத்துகள் எனக்கு அறிமுகமாகின. அய்யா பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் பேச்சினை கேட்கவும், எழுத்தினைப் படிக்கவும் செய்தேன். இதுவே என்னுடைய திராவிடர் இயக்கத்தின் பால் ஏற்பட்ட ஈர்ப்புக்குக் காரணம். மாணவர் பருவந்தொட்டே ஈடுபடலானேன்.
சாதனை எது?
விடுதலை: திராவிடர் இயக்கத்தின் சாதனை என்று எதைக் கருது கிறீர்கள்?
செ.மாதவன்: ஜாதியற்ற சமுதாயம் அமைய வேண்டும் எனும் கொள் கைப்பற்று மக்களிடத்தில் பெருகி யிருக்கிறது. கிராமங்களில் கூட்டங் களே நடத்த முடியாத காலம் இருந்தது. ஆனால் இன்று பல்கிப் பெருகியிருக்கிறது. தன்னுடைய அடிமைத்தன்மை உணரத் தொடங் கியதே திராவிடர் இயக்கத்தின் வெற்றிதான்.
விடுதலை: திராவிடத்தால் வீழ்ந் தோம் என்று சில குரல்கள் ஒலிப்பது பற்றி?
செ.மாதவன்: திராவிடம் என்பதே இனத்தின் அடிப்படை. ஆரியம், திராவிடம் என்பது இனத்தின் அடையாளம். தமிழ் என்பது மொழி. தமிழர் என்பது மொழி அடிப் படையில் வருவது.
விடுதலை: சுயமரியாதைத் திருமணச் சட்டம் நிறைவேற்றப்படும் போது தாங்கள் சட்ட அமைச்சர் அதனை எப்படி உணர்ந்தீர்கள்?
செ.மாதவன்: நானே 1967-_க்கு முன்பே சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவன்தான். வழக் கறிஞர். என்னைப்பார்த்து நீ சுய மரியாதை திருமணம் செய்து கொண்டவன். உன் குழந்தைகள் எல்லாம் இல்லீகல் என்றார். மறுஆண்டு நான் சட்டமன்ற உறுப்பினர் ஆகி விட்டேன். அப் போது காங்கிரஸ் ஆட்சி ஆனால் சுயமரியாதைத் திருமணங்கள் சட் டத்தின் தீர்மானத்தை தோற்கடித் தார்கள். அதன் பிறகு அண்ணா ஆட்சிக்கு வந்ததும் சட்டத் திருத்தம் கொண்டு வந்தார்கள். அண்ணா திருத்தத்தை கொண்டு வரச் சொன்னார். நான் தயார் செய்து கொடுத்தேன். பிறகு அண்ணா என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அய்யாவிடம் கலந்து விட்டு வா என்றார். நான் உடனே பெரியார் திடலுக்கு போனேன். நான் போன உடனே, எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எழுந்திருச்சு நின்னு வரவேற்றார். நான் யெங்கெஸ்டு மினிஸ்டர் நான் அய்யாவை உட்காருங்கள்அய்யா என்றேன்.
அதற்கு முன்பாக ஆசிரியர் வீரமணி அவர்கள் மூலம் அந்த வரைவை தந்தை பெரியார் அறிந்து வைத்திருந்தார். என்னிடம் ஒரே ஒரு திருத்தம் சொல்லலாமுங்களா? என்றார். சொல்லுங்க அய்யா என்றேன். அதற்கு அய்யா தாலின்னு போட்டு அண்டு என்று போட் டிருக்கிறீர்கள். அதை ஆர் (ஷீக்ஷீ)னு மாத்த முடியுமா என்றார். சரிங் கய்யா என்று விடை பெற்றேன். அதாவது தாலி கட்டினாலும், கட் டாவிட்டாலும் சுயமரியாதைத் திருமணம்தான் எனும் பொருள் படவே அப்படிச் சொன்னார்.
பார்ப்பன சட்ட அமைச்சரின் எதிர்ப்பு
நான் இத்திருத்தத்தை எடுத்துக் கொண்டு நேராக டெல்லிக்குப் போனேன். அப்போது மத்திய சட்ட அமைச்சராக இருந்தவர் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் படித்தவர். கேரளாக்காரர். மத்திய சட்டத்துறை செயலாளராக இருந்தவர் மேற்கு வங்க பார்ப்பனர். இவர் இச்சட்டத் திருத்தத்தை எதிர்த்தார். எங் களுடைய வாதம், தமிழ்நாட்டில் வாழுகின்ற தமிழர்களில், யார் இந்தத் திருமணத்தை விரும்புகிறார்களோ, அவர்களுக்குத்தான் இந்தச் சட்டம். அப்படி இருக்கும்போது நீங்கள் ஏன் எதிர்க்க வேண்டும் என்றேன். அதனால் பதில் சொல்ல முடியாமல் ஒத்துக் கொண்டு சட்டம் நிறை வேறியது. யாரும் இதை எதிர்க்க வில்லை, காங்கிரஸ் உள்பட.
ஜாதி உணர்வு தலைதூக்குவது ஏன்?
ஜாதி உணர்வு தலைதூக்குவது ஏன்?
விடுதலை: தமிழ்நாட்டில் மீண்டும் ஜாதி உணர்வு தலை தூக்குவது போன்ற தோற்றம் உருவாகியுள்ளதே! என்ன காரணம்? என்ன செய்யலாம்?
செ.மாதவன்: 1957இல் எங்க ளுடைய தொகுதியில் கண்ணதாசன் தேர்தலில் நின்றார். 1962இல் நான் நின்றேன். அப்போதெல்லாம் இயக்க உணர்வு, கொள்கை உணர்வு, திரா விடர் இன உணர்வு, மக்களிடத்தில் இருந்தது. தலைவர்கள் அப்படித்தான் இருந்தார்கள். தொண்டர்களும் அப்படித்தான். 1984 தான் கடைசியாக நான் நின்ற தேர்தல். அதுவரை யாரும் ஜாதியை சொல்லியோ பணத்தைக் சொல்லியோ ஒட்டு கேட்கவில்லை. இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. இதற்குக் காரணம் நான் நினைப்பது மக் களிடத்தில் தான் அப்போது நாங்கள் வசூலித்தோம். தொண்டனும் எதையும் எதிர்பார்த்ததில்லை. ஆசைப்பட்டதில்லை. சில ஆயிரங் கள் செலவழித்துதான் நாங்கள் அமைச்சர் ஆனோம்.
செ.மாதவன்: 1957இல் எங்க ளுடைய தொகுதியில் கண்ணதாசன் தேர்தலில் நின்றார். 1962இல் நான் நின்றேன். அப்போதெல்லாம் இயக்க உணர்வு, கொள்கை உணர்வு, திரா விடர் இன உணர்வு, மக்களிடத்தில் இருந்தது. தலைவர்கள் அப்படித்தான் இருந்தார்கள். தொண்டர்களும் அப்படித்தான். 1984 தான் கடைசியாக நான் நின்ற தேர்தல். அதுவரை யாரும் ஜாதியை சொல்லியோ பணத்தைக் சொல்லியோ ஒட்டு கேட்கவில்லை. இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. இதற்குக் காரணம் நான் நினைப்பது மக் களிடத்தில் தான் அப்போது நாங்கள் வசூலித்தோம். தொண்டனும் எதையும் எதிர்பார்த்ததில்லை. ஆசைப்பட்டதில்லை. சில ஆயிரங் கள் செலவழித்துதான் நாங்கள் அமைச்சர் ஆனோம்.
தற்போது நிலைமை மாறியிருக் கிறது. பதவி, பணம் இந்த இரண்டு காரணங்களால்தான் ஜாதிய உணர்வு பரவுகிறது. நம்ம ஜாதிக்கு பதவி வேண்டும் என்று கேட்கும்போது தான் ஜாதி உணர்வு தோன்றுகிறது.
முதல் திமுக மாநாட்டுக்கு பேருந்தில் சென்று மாநாட்டுத் திட லிலேயே படுத்திருந்தேன். 1967இல் அண்ணா அமைச்சரவை பொறுப் பேற்றதும் எங்களை அழைத்து அறிவுரை கூறினார். அமைச்சர் களுக்கு 1000 ரூபாய் என்றிருந்த ஊதியத்தை 500 ஆக மாற்றினார். யாரும் இதை எதிர்த்ததாக பேசிக்கூட நான் கேட்டதில்லை.
விடுதலை: திராவிடர் இயக்கத்தின் இன்றைய நிலை?
செ.மாதவன்: ஆட்சி, அதிகாரத்தை மட்டும் முன் வைக்காமல் அய்யாவும் அண்ணாவும் சொன்ன கொள்கைப் பற்றை மக்களிடத்தில் குறிப்பாக இளைஞர்களிடத்தில் பரப்ப வேண்டும்.
ஆளுங்கட்சியை எதிர்க்கட்சி குறை சொல்வது உலகம் முழுவதும் நடக்கிறது? மக்கள்கிட்டே தற்போது இந்தக் கருத்துகளை கிராமங்கள் தோறும் கொண்டு செல்ல வேண்டும்.
எத்தனை நூற்றாண்டுகளானாலும் பகுத்தறிவு கருத்துகளைச் சொல்ல லாம். இன்றைய இளைஞர்களுக்கு இதனை எடுத்துச் சொல்ல வேண்டும். தற்போது இந்த தலைமுறையிடம் இந்தக் கருத்துகள் குறைவாக உள்ளன. நான் திமுகவில் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது தந்தை பெரியாரை அழைத்து எங்கள் ஊரில் கூட்டம் நடத்தினேன். அது போல தற்போதும் கூட்டங்கள் நடத்த வேண்டும், என்று தன் அவாவை வெளியிட்டார். முன்னாள் அமைச் சரும் திராவிடர் இயக்க பழம் பெரும் தோழரான செ. மாதவன் அவர்களிடம் நன்றி கூறி விடை பெற்றோம்.
பேட்டி: மு. சென்னியப்பன்,
ஒளிப்படங்கள்: பெரியார் வலைக்காட்சி
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- திராவிட மொழிகள் பேசுவோர் வாழும் இடங்கள்
- எது பைத்தியகாரத்தனம்?
- வள்ளுவர் - பெரியார் பார்வையில் மருத்துவர் சி. நடேசனார்
- படித்தாலும் பணி புரிந்தாலும் மீண்டும் வலம் வருவேன் தடகள வீராங்கனை சாந்தி பேட்டி
- அறிவியல் சிந்தனை - முதுமை அடைவது எப்படி?
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment