உலகத்திலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 13ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலுக்கு யாரை ஆதரிப்பது என்று அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட் டுள்ளன. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்குக் கூட்டணிக்கு அறுதி பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், இன்னும் சில கூட்டணிக் கட்சிகளின் ஆதர வைப் பெற பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
அதேபோல் அய்க்கிய முற் போக்குக் கூட்டணியின் குடி யரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் தங்களது வேட்பாளரை அறிவிக்கப் போவ தாக பா.ஜ.க., கூறி வருகிறது. இதற்கிடையே அதன் தலை மைக்கோ, மற்ற எந்தக் கட்சிக் கும் விசுவாசமாக இருந்ததில்லை என்கிற அவப்பெயரைப் பெற்று ள்ள பி.ஏ. சங்மாவை அதிமுக பிஜு ஜனதாதளம் பரிந்துரைத் துள்ளன.
இன்னும் ஓரிரு நாள்களில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, தேர்தல் களம் சூடுபிடிக்கப் போகிறது. இந் நிலையில், குளுகுளு அறையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு சிந்தித்துப் பழக்கப் பட்ட சில அதிமேதாவிகள், தங்களுக்குப் பிறவியிலேயே இருக்கும் ஆங்கிலப் புலமையின் காரணமாக நாளேடுகளில கட் டுரை எழுதி, அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். இதன் மூலம் தனி மனிதர்களை இழிவு படுத்துவதோடு, போற்றுதலுக் குரிய பெருமைமிக்க குடியரசுத் தலைவர் பதவியையும் சிறுமைப் படுத்தி வருகின்றனர்.
ஜுன் 6இல் வெளிவந்த தினமணி நாளேட்டின் நடுப் பக்கத்தில், கடவுளுக்குத்தான் வெளிச்சம் என்கிற தலைப்பில் எஸ். குருமூர்த்தியின் கட்டுரை வெளிவந்திருந்தது. இது தேசிய நண்பர்களைக் கொதிப்படைய செய்திருக்கிறது. இவர் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு கொள்கை கொண்ட ஒரு பிற்போக்குவாதி என்பதில் எமக்குச் சந்தேக மில்லை! இவரது பல கட்டுரை கள் ஜவஹர்லால் நேரு குடும் பத்தின்மீது சேற்றை வாரி இறைத்து எழுதுவதை வழக்க மாகக் கொண்டுள்ளன. அந்த அடிப்படையில்தான் இந்தக் கட்டுரையும் எழுதப்பட்டுள்ளது.
அந்தக் கட்டுரையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பதவி, தனது இழந்த மரியாதையையும் பெருமையை யும், ஆர். வெங்கட்ராமன் குடி யரசுத் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டபோதுதான் மீட்கப்பட்டது. விதிமுறைகளை நிலைநாட்டிய குடியரசுத் தலை வர் Rule Book President என்று சரித்திரத்தில் இடம் பெற்றவர் ஆர். வெங்கட்ராமன் என்று எழுதியிருக்கிறார்.
இந்திய நாடு சுதந்திரம் பெற்றதும் முதல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட் டவர் டாக்டர் ராஜேந்திர பிர சாத். அன்றைய குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளில் 99.24 சதவிகித வாக்குகளைப் பெற்று சாதனை புரிந்தார். இவர் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபை தலைவராக இருந்தவர்.
இவரைத் தொடர்ந்து, டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், டாக்டர் ஜாகீர்உசேன், கேரள ஆளுநராக இருந்து, துணைக் குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து, குடியரசுத் தலைவராகத் தேர்வு பெற்ற தொழிற்சங்கத் தலைவர் வி.வி.கிரி பக்ருதீன் அலி அஹமத், நீலம் சஞ்சீவி ரெட்டி, பிற்படுத்தப்பட்ட விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த கியானி ஜெயில்சிங், ஆர். வெங்கட்ராமன், டாக்டர் சங்கர் தயாள் சர்மா, தலீத் சமுதாயத்தைச் சேர்ந்த கே.ஆர். நாராயணன், விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம், மகளிர் சமுதாயத்தின் பிரதிநிதி யான பிரதிபா பாட்டீல் எனப் பன்னிரெண்டு குடியரசுத் தலை வர்களை இந்த நாடு பெற்றி ருக்கிறது.
இவர்களுடைய பதவிக் காலத்தில் அரசமைப்புச் சட்டம் எத்தகைய அதிகாரங்களை வழங்கியதோ, அதற்குட்பட்டு செயல்பட்டதன்மூலம் இந்திய ஜனநாயகத்தைக் காக்கும் பணியைச் சிறப்பாகச் செய்தனர். இவர்கள் எல்லாரையும் விட்டு விட்டு ஆர். வெங்கட்ராமன் மட்டும்தான் குடியரசுத் தலைவர் பதவிக்குப் பெருமை சேர்த்தார் என்றும், மற்றவர்களெல்லாம் பதவியைச் சிறுமைப்படுத்தினர் என்றும் எஸ். குருமூர்த்தி எழுதி யிருப்பதில் என்ன பொருள் இருக்கிறது? எந்த அடிப்படை யில் அவர் எழுதுகிறார்?
விதிமுறைகளை நிலைநாட் டிய குடியரசுத் தலைவர் என்று யாரை வேண்டுமானாலும் பாராட்டலாம். ஆனால், அத் தகைய பாராட்டைப் பெறுவ தற்கு ஆர். வெங்கட்ராமனுக்கு என்ன தகுதி இருக்கிறது? ராஷ் டிரபதி மாளிகையில் அமர்ந்து கொண்டு தமிழ்நாட்டில் அவர் செய்த குசும்புகளுக்குக் கணக் குண்டா? தமிழக காங்கிரஸ் கட்சியில் அவர் செய்த சகுனி வேலைகளுக்கு அளவுண்டா? தமிழக காங்கிரசில் உள்ள அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மக்கள் தலைவர் மூப்பனாருக்கு எதிராக எம்.பி. சுப்பிரமணியத்தை முன் னிலைப்படுத்தியது யார்?
நீண்ட கால நண்பரான நடிகர் திலகம் சிவாஜியை மூப்பனாருக்கு எதிராக முடுக்கிவிட்டது யார்? தொழிற்சங்கப் பணிகளை ஆற்றிக் கொண்டிருந்த கூ. ராமமூர்த்தியை மூப்பனாருக்கு எதிராகக் கொம்பு சீவிவிட்டது யார்? களத்துக்கு வராமலேயே ராஷ்டிரபதி பவனில் இருந்து கொண்டு காங்கிரசுக்குள் கோஷ்டி மோதலை ஊக்கப் படுத்தியது யார்?
1984இல் குடியரசுத் துணைத் தலைவராகப் பிறகு குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றது முதல் 1992 வரை மக்கள் தலைவர் மூப் பனாருக்கு எதிராக ஆர். வெங்கட் ராமன் செய்த சதி வேலைகள் ஒன்றா, இரண்டா? குடியரசுத் தலைவ ரானதும் வாழப்பாடி ராமமூர்த்தி யைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட் டிக்குத் தலைவராக்க வேண்டும் என்று 1989இல் ராஜீவ் காந்தி யிடம் நச்சரித்தது யார்? தமது உயர்ந்த பதவியை வைத்துக் கொண்டு, சிறுமையான அரசியல் நடத்தத் துணைபோனது யார்? பெரிய பதவி யிலிருந்த ஆர். வெங்கட்ராமனுக்கு இத்தகைய சின்னபுத்தி இருக்க லாமா? குருமூர்த்தி இதை அறிவாரா?
தினமணி நாளேட்டில் எஸ். குருமூர்த்தியின் கட்டுரையில் குடியரசுத் தலைவராக வருபவர்கள் நேரு குடும்பத்தில் சமைப்பது, டீ காபி கொடுப்பது, பாத்திரங்களைக் கழுவுவது எனக் கவுரவம் பார்க்காமல் சேவை செய்தவர்களுக் குத்தான் வழங்கப்படும். பத்துப் பாத்திரம் தேய்ந்த நன்றி விசு வாசத்துக்குக் கொடுப்பட்டதுதான் குடியரசுத் தலைவர் பதவி என்று கொச்சையாக இழிவுபடுத்தி எழுதப் பட்டுள்ளது. இதைவிட யாரும் தரம் தாழ்ந்து எழுதிவிட முடியாது.
யாரைப்பற்றி யார் எழுதுவது? நேருவைப் பற்றி எழுதுவதற்குக் குருமூர்த்திக்குத் தகுதி இருக்கிறதா? விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயர்களின் ஒற்றர் படையாக இருந்த ஆர்.எஸ்.எஸ்.ஸின் தயாரிப் பான குருமூர்த்திக்கு நேருவை விமர்சிக்க என்ன உரிமை இருக்கிறது? இந்திய விடுதலைக்காக 17 ஆண்டுகாலம் சிறையில் வாடிய ஜவஹர்லால் நேருவை இழிவுபடுத் துவது மிக மிகக் கேவலமான செயலாகும். அரண்மனை போன்ற ஆனந்த பவனத்தையே நாட்டுக்கு நன்கொடையாகக் கொடுத்தவர்கள் நேரு குடும்பத்தினர். இப்படிப்பட் டவரது வீட்டில் பத்துப்பாத்திரம் தேய்க்க ஆளில்லாததுபோலவும், அதைத் தேய்த்தவர்களுக்குக் குடிய ரசுத் தலைவர் பதவி கொடுக்கப் பட்டதாகவும் குருமுர்த்தி பிதற்றி யிருக்கிறார்.
இன்று குடியரசுத் தலைவராக இருக்கும் பிரதிபா பாட்டீலையும் இழிவுபடுத்துகிற அதே நேரத்தில், ஆர். வெங்கட்ராமன்தான் ரூல் புக் பிரசிடெண்ட் என்று புகழ்மாலை சூட்டுகிறார். யார் இந்த வெங்கட் ராமன்?
ஏன் இந்த பராபட்சம்?
தஞ்சை மாவட்டம், பட்டுக் கோட்டைக்கு அருகிலுள்ள ராஜா மடத்தில் பிறந்த ஆர்.வெங்கட் ராமனுக்குப் பதவியும் பவிசும் எப்படி வந்தன? கிராம காங்கிரஸ் கமிட்டி, மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி, மாநிலக் காங்கிரஸ் கமிட்டி எனப் படிப்படியாகக் கட்சிப் பணியாற்றிப் பதவிகளைப் பெற்றவரா ஆர்.வி?
சென்னை இராயப்பேட்டையில் போனியாகாத வழக்குரைஞராக இருந்தவர், தொழிற்சங்கத்தில் ஈடுபட ஆரம்பித்தார். பிறகு காமராஜரின் கடைக்கண் பார்வையால் 1952-இல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1957இல் காமராஜர் அமைச்சரவையில் பல்வேறு பொறுப்புக்களை பெற்று, பத்தாண்டு காலம் 1967வரை அமைச் சராக நீடித்தார்.
1967இல் காங்கிரஸ் தோல்வி அடைந்ததும், காமராஜரைவிட்டு விலகி ஒதுங்கியிருந்தார். பிறகு இந்திரா காந்தியின் ஆதரவைப் பெற்று 1977இல் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராகத் திடீரெனத் தேர்வு செய்யப்பட்டார். நாடு முழுவதும் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், எந்தக் கட்சியையும் சாராதவர்(Unattached) என்று நாளுமன்றத்தில் இருக் கையைக் கேட்டு வாங்கியவர், அதற்குப்பிறகு, மறுபடியும் இந்திரா காந்தியின் ஆதரவு பெற்று 1980இல் மீண்டும் நாடாளுமன்ற உறுப் பினராகத் தேர்வு செய்யப்பட்டவர், இது எப்படிச் சாத்தியமாயிற்று? கடவு ளுக்கே வெளிச்சம்!
இந்திரா காந்தியின் அமைச் சரவையில் முதலில் நிதி அமைச்சராக வும், பிறகு ராணுவ அமைச்சராகவும் பதவி வகித்தார். இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு, ராஜீவ்காந்தியின் ஆதரவில் துணைக் குடியரசுத் தலைவராகவும், 1987இல் குடியரசுத் தலைவராகவும் பதவிக்கு வந்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சியிலோ, தமிழக மக்களிடமோ எந்தத் தொடர்பும் இல்லாத ஆர். வெங்கட் ராமனுக்கு இவ்வளவு பெரும் பொறுப்புகள் வருவதற்குக் காரணம் என்ன? அவரது உயர்வுகளுக்கு யார் காரணம்? பெருந் தலைவர் காமராஜரோ, மக்கள் தலைவர் மூப்பனாரோ அடைய முடியாத பதவிகளையெல்லாம் இவரால் எப்படி அடைய முடிந்தது? அதன் சூத்திரம் என்ன? ரகசியம் என்ன? இவ்வளவு பதவிகளைப் பெற்றாரே, பதவி வழங்கியவர்களுக்கு
விசுவாச மாக இருந்தாரா? நன்றியோடு இருந்தாரா?
1967இல் பெருந் தலைவர் காமராஜருக்குப் பச்சை துரோகம் செய்தவர் ஆர்.வி! 1977இல் அன்னை இந்திராவின் முதுகில் குத்தியவர் ஆர்.வி! காங்கிரஸ் கட்சியால் பல்வேறு பொறுப்புகளைப் பெற்று, 98 வயது வரை வாழ்ந்த ஆர்.வி. குறைந்தபட்சம் காங்கிரசுக்காவது துரோகம் செய்யாமல் இருந்தாரா?
2004இல் காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டபோது, அதை எதிர்த்து பா.ஜ.க., தில்லியிலுள்ள படேல் சதுக்கத்தில் பேரணி நடத்தியது; அதில் வாஜ்பாய், எல்.கே. அத்வானி ஆகியவர்களுடன் கை கோர்த்துக் கொண்டு ஆதரவுக்கரம் நீட்டியவர்தான் ஆர்.வி.!
பொதுவாகக் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்தவர்கள் பதவி காலத் திற்குப்பிறகு தீவிரமான அரசியலில் ஈடுபடுவதில்லை. ஆனால் ஆர். வெங்கட்ராமனோ கொஞ்சம்கூட வெட்கமில்லாமல், காங்கிரசின் பரம எதிரியான பா.ஜ.க.வோடு கை கோர்த்துக் கொண்டார். இதற்கு என்ன காரணம்?
சிலருக்கு வியப்பாக இருக்கலாம்! ராஜா மடத்துக்கு சங்கர மடத்தின் ஆதரவு எப்போதும் உண்டு. குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த ஆர். வெங்கட்ராமன் சென்னை வரும்போதெல்லாம் காஞ்சிபுரம் சென்று ஜெயேந்திரரின் இருக் கைக்குக் கீழே தரையில் பவ்யமாக அமர்ந்து ஆசி பெறுகிற புகைப் படத்தைப் பார்த்து முகம் சுளிக்காத தமிழர்களே இல்லை! இதை எந்த நாளேடாவது கண்டித்ததுண்டா?
தமது அரசியல் வாழ்க்கையில் துரோகத்தையும் சூது சூழ்ச்சி களையும், இருந்த இடத்திலேயே நகராமல் செய்யக்கூடிய ஆற்றலும் வல்லமையும் பெற்ற ஆர். வெங்கட் ராமன், விதிமுறைகளை நிலை நாட்டிய குடியரசுத் தலைவர் என்று கூறுவதற்கு நா கூசவில்லையா?
- ஆதி
(நன்றி: தேசிய முரசு ஜூன் 16-_30 2012)
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- குறும்பா..!
- தன்னாட்சியும் தனியாட்சியும்
- உலகின் தலைசிறந்த 10 கண்டுபிடிப்புகள்
- திராவிடத்திலிருந்து தமிழைப் பிரிப்பது... அறிவுத் தடுமாற்றமா...! ஆரிய மயக்கமா ...!
- சொர்க்கத்திற்கு குறுக்குவழி
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- வால்நட்சத்திரம் தெரிந்தால் ஆட்சி மாற்றம் வருமா?
- பெரியார் பக்கத்தில் அமர்ந்ததும் பெரியாருக்கு சிலை எழுப்பியதும் மறக்க முடியாதவை! பெரியார் பெருந்தொண்டர் அ. மஜீத் நினைவலைகள்
- நெல்லை-தென்காசி அகல ரயில்பாதையில் ரயில் பெட்டிகள் பற்றாக்குறையால் ரயில்கள் இயக்குவதில் தாமதம்
- வழக்கு விசாரணையில் ஏன் கொலை வழக்காக பதிவு செய்யக்கூடாது உயர்நீதிமன்றம் கேள்வி
- அறிவிப்பு
<< முன்புஅடுத்து >>
ஆகஸ்ட் 01-15
"விடுதலை" நமக்கு ஓர் போர்வாள்
அந்நாளில்...
அய்யா - ஆசிரியர் உறவு
இணையத்தில் முதல் தமிழ் நாளிதழ்
இணையத்தில் விடுதலையின் போராட்டம்
கடவுள் கடத்தல் கலை
கருத்தாளர் பெரியாரின் கண்ணின்மணி வாழ்க!
கருத்தாளர்-எழுத்தாளர்-தொகுப்பாளர்
கவிதை - ஆசிரியரின் முகம் "விடுதலை"
சமூக நீதிப் பொரில் ஆசிரியரின் 'விடுதலை"
சிறைக் கைதிக்கு இருக்கும் விடுதலை படிக்கும் ஆர்வம்!
தன்னிகரற்ற பன்முக ஆற்றல்
திரிபுவாதிகளுக்கு பதிலடி
தோழர் வீரமணியின் சேவை!
நாளேட்டின் நாயகர்
நிகழ்ந்தவை
நினைவில் நிற்பவை
பெரியார் ஒப்படைத்த பெரும்பணி
முகநூல் பேசுகிறது
வரலாறு தவிர்க்க இயலாத நாளிதழ்
வரவேற்கிறேன் - தந்தை பெரியார்
விடுதலை "லை"
விடுதலை வளர்ச்சியில் ஆசிரியர்!
விடுதலை வாசித்தால் திருப்தி
No comments:
Post a Comment