ஜாதிச் சான்றிதழ் என்பது சம்பந்தப்பட்டவர்கள் என்ன ஜாதியில் பிறந்தவர் என்பதன் அடிப்படையில் தரப்படக் கூடியதாகும்.
ஆனால் அண்ணா தி.மு.க. ஆட்சி எப்பொழுது ஆச்சாரியார் ஆட்சியாக மாறியது என்று தெரியவில்லை. ஜாதி சான்றிதழ் பெறவேண்டுமென்றால், சம்பந்தப்பட்டவரோ, அல்லது அவர் குடும்பத்தவரோ, ஜாதிக் குலத் தொழிலைச் செய்ய வேண்டுமாம்!
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம் திம்மா புரத்தைச் சேர்ந்த சீ.தமிழ்ச் செல்வி (தந்தை -சீனிவாசன்) என்பவர் கிருஷ்ணகிரி வட்டாட்சியருக்கு ஜாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். பன்னியாண்டி (தாழ்த்தப்பட்டவர்) பிரிவைச் சேர்ந்தவர் என்பதற்கான சான் றினை (தந்தைக்கு அளிக்கப்பட்ட சான்றிதழை) இணைத்து விண்ணப்பித்து இருந்தார்.
அந்த விண்ணப்பத்தின் மீது கிருஷ்ணகிரி துணை வட்டாட்சியர் அனுப்பிய பதில் (ஓ.மு.எண். 11235/2011 நாள் 4-10-2011) தான் அதிர்ச்சிக்குரியது.
என்ன காரணம் சொல்லியுள்ளார்?
சீனிவாசன் என்பவரது குடும்பத்தவர் பன்னியாண்டி சாதியைச் சேர்ந்தவர் என்பதற்கான குலத்தொழில் எதிலும் ஈடுபடவில்லை என்று தெரிய வருகிறது. எனவே பன்னியாண்டி சாதி சான்றிதழ் வழங்க வழிவகை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாதிச் சான்று அளிக்கப்படுபவர்களெல்லாம் குலத் தொழில் செய்தால்தான் அளிக்கப்பட்டு வருகிறதா? இதுவரை அப்படித்தான் அளிக்கப்பட்டு வருகிறதா?
ஜாதித் தொழிலைச் செய்பவர்களுக்குத்தான் சம்பந்தப்பட்ட ஜாதிச் சான்று அளிக்க வேண்டும் என்று அதிமுக அரசு ஏதாவது தனிச் சிறப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளதா? ஆம் எனில், எந்தச் சட்டத்தின்படி அப்படி ஒரு சுற்றறிக்கையை அதிமுக அரசு அனுப்பியுள்ளது? அளிக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் தானடித்த மூப்பாக நடந்து கொள் கிறாரா?
ஜாதிச் சான்றிதழ் கிடைக்க வேண்டுமானால் குலத் தொழிலை, ஜாதித் தொழிலைச் செய்துதான் தீரவேண்டும் என்று மறைமுகமாக நிர்ப்பந்தம் அளிக்கப்படுகிறதா?
இதன்மீது உரிய நடவடிக்கையை அரசு எடுக்குமா?
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- காவேரிப்பட்டினம் பள்ளி வளாகத்தையொட்டி பெரியார் சிலை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு அவர்களின் உன்னதத் தீர்ப்பு
- கடவுளின் சக்தி இவ்வளவுதான்
- மாங்கனி வாங்கலியோ மாங்கனி!
- என்னே தோழர்களின் அணுகுமுறைகள்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment