சென்னை,ஜீலை13-
தமிழகத்தில் காலியாகவுள்ள 1,870 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை 10.08.2012 அன்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வின் மூலமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.க்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், மேலும் காலியாக உள்ள 1,870 இடங்களுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டுள்ளது .
தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வாணையத்தின் இணையதளத்தை (http://www.tnpsc.gov.in) மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே நிரந்தரப் பதிவு எண் வைத்திருப்பவர்கள் அதையே பயன்படுத்தி வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை இணையதளம் மூலம் அனுப்புவதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 10 ஆகும். வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணத்தைச் செலுத்த ஆகஸ்ட் 14-ம் தேதி கடைசி நாளாகும். செப்டம்பர் மாதம் 30-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 வரை தேர்வு நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 21 ஆகும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
பொது அறிவுடன் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் இருந்து 100 வினாக்களும், பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருந்து 100 வினாக்களும் கேட்கப்படும்.
தேர்வுக் கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- ஓரியண்டல் வங்கியில் புரபேஷனரி அதிகாரி பணிகள்
- 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை (15.07.12) கடைசி நாள்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment