Wednesday, April 11, 2012

பொய்ப் பிரச்சாரம்!


சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் -  நிறைவேற்றப்பட்டு, கப்பல்களின் போக்குவரத்து நடைபெற்று வருவாய் வந்து சேர வேண்டிய நேரத்தில், மக்கள் நலத் திட்டத்தின் குறுக்கே புராணக் குப்பைப் பாத்திரமான ராமனைக் குறுக்கே கொண்டு வந்து போட்டு குளறுபடிகளைச் செய்து விட்டனர்.
ராமன் என்ற ஒருவன் இருந்தானா? பாலம் கட்டினானா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.
ராமன் கடவுள் அவதாரம் என்றால் அவன் எய்த அம்பு யார் யாரையோ, எதை எதையோ, துளைத்துச் சென்று, சீதை மீது இராவணன் கொண்ட ஆசையின் அணுக்களை எல்லாம் குத்திக் குதறி, மீண்டும் இராமனிடமே வந்து சேர்ந்தது என்று சொல்வதில் இந்துத்துவா வாதிகளுக்கும், சுப்பிர மணிய சாமிக்கும், அதிமுக பொதுச் செயலாள ருக்கும், நம்பிக்கை இருக்குமேயானால், அந்த ராமன் பாலத்தைக் காப்பாற்றிக் கொள்ள ராமனால் முடியாதா? ராமன் பாலத்தைக் காப்பாற்ற இந்த அற்பமானிடர்கள் யார் என்ற கேள்வி எழாதா?
இன்னொரு கேள்வியும் இருக்கிறது. அவர்கள் நம்பும், ஆதாரம் காட்டும் அந்தப் புராண நம்பிக் கையின் அடிப்படையிலேயே கேட்கிறோம்.
ராமன் கட்டிய பாலத்தை அந்த ராமனே இடித்து விட்டான் என்று சேது புராணமே கூறுகிறதே. இதற்கு என்ன பதில்?
சேது புராணம் என்ன? கம்ப இராமாயணமே கூறுகிறதே. மீட்சிப் படலம் 17 ஆவது பாடல் என்ன கூறுகிறது?
மரக்கால் மியங்க வேண்டி
வரிசிலைக் குதையாற்
கூறித் தருக்கிய
விடத்தினை எனும் பாடலில் போர் முடிந்த பின்னர் ராமன் புஷ்பக விமானத்தில் பறந்து செல்கையில் கடலில் அவ்விடத்து மரக்கலங்கள் இனிது செல்லும் பொருட்டு தனது வில்லின் நுனியால், சேதுவை ராமனே உடைத்தார் என்று கம்பநாட்டாழ்வாரே சொன்ன பிறகு இந்த இந்துத்துவ வாதிகள் யார்?
ஒன்றைப் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளும், மதமும், சாத்திரங்களும் மக்கள் நலனுக்கும், வளர்ச்சிக்கும் முட்டுக் கட்டையானது என்று தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்து கொண்டு வருகிறதே. அது எவ்வளவு பெரிய உண்மை என்பதற்கு ராமன் பாலத்தைக் காட்டி மக்கள் நலத் திட்டமான சேதுக் கால்வாய்த் திட்டத்தை முடக்குகிறார்களே இது ஒன்று போதாதா?
எந்த காட்டு விலங்காண்டிக் காலத்திலோ எந்த ஒருவனாலோ கிறுக்கப்பட்ட குப்பைகள் எல்லாம் அறிவியல் எழுச்சி மிகுந்த 21 ஆம் நூற்றாண்டில் அழுக்குத் தலைகளைத் தூக்கிட அனுமதிக் கலாமா?
உலகம் தட்டை என்று மதம் சொன்னது என்ப தற்காக அதை நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா?
பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்று கலிலியோ சொன்னதற்காக அன்று அந்த விஞ்ஞானி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
அப்படி செய்தது தவறுதான் என்று ஒப்புக் கொண்டு கலிலியோவைப் பற்றி கல்வி நிறுவ னங்களில் சொல்லிக் கொடுங்கள் என்று தவறை உணர்ந்த நிலையில் அறிவிப்பைக் கொடுத்துள்ளார் கத்தோலிக்க மதக்குருவும், வாடிகன் நகரின் ஆட்சித் தலைவருமான போப்.
அதே நேரத்தில் இந்த இந்துத்துவாவாதிகளின் புத்தியும் போக்கும் என்ன? 17  லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராமன் பாலம் கட்டினான் என்று இன்றைக்கு வரை, பிடிவாதம் காட்டு கிறார்களே.
எதற்கெடுத்தாலும் இந்து மதத்தைப்பற்றித் தானே விமர்சனம் செய்கிறீர்கள். கிறித்துவ மதம் பற்றிப் பேசுவதில்லையே என்று கேட்கும் இந்து அபிமானப் புத்திரர்கள், காலத்துக்கேற்ப மறுபரி சீலனை செய்யத் தயாராக இருக்கும்அந்த கிறித்துவ மதத்தையும், மாறுதலுக்குத் தயாராக இல்லாத தங்கள் இந்து மதத்தையும் ஒப்பிட்டுத் தெரிந்து கொள்ளட்டுமே!
ராமன் பாலம் என்ற பொய் மூட்டையை அம்பலப்படுத்துவதன் மூலம் இந்து மதத்தின் யோக்கியதையை நாடெல்லாம் தோலுரித்துக் காட்ட தோழர்களே புறப்படுங்கள்!


.
 1

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...