உலகப் புகழ்பெற்ற நாடுகளில் ஒன்றான நியூயார்க் டைம்ஸ் என்ற ஏடு (3.11.82) இதழில் திராவிடர் கழகம் பற்றியும் தமிழர் தலைவர் பற்றியும் எழுதியுள்ள கட்டுரையின் மொழி பெயர்ப்பு இங்குத் தரப்படுகிறது
இந்தியாவில் பார்ப்பனர்கள் புரோகித, படித்த ஜாதியாக வளர்ந்தவர்கள். பார்ப்பனர்களைப் பொறுத்தவரை அவர்கள் க்ஷத்திரியர்களைப்போல் உலகியல் வாழ்வு சார்ந்த தன்மை கொண்டவர்கள் அல்ல. பொதுவாக செல்வ நிலையிலும் அவர்கள் மிகவும் வளர்ந்தவர்கள் இல்லை. ஆனால் மதத்தின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு நாட்டில் கடவுளின் தரகர்களாக அவர்கள் தங்களை ஆக்கிக் கொண்டு சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவர் களாகப் பெருமைப்படுத்தப்பட்டனர்.
பிரிட்டிஷார் வந்த காலத்தில், பார்ப்பனர்கள் அதைப் பயன்படுத்திற்கொண்டு தங்கள் கல்வி யையும் அறிவையும் உயர்த்திக் கொண்டனர்.
ஆங்கிலத்தை உற்சாகத்தோடு படித்து, அரசாங்கத்தின் உயர்ந்த இடங்களைப்பிடித்தனர்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு பார்ப்பனர், நேருவின் மகள் இந்திரா காந்தியும் அவரது மிக முக்கியமான ஆலோசர்களும் பார்ப் பனர்கள். இன்றைக்கும் இந்தியாவில் பத்திரிகைத் துறையிலும், இலக்கியத் துறையிலும், கலாச்சார நடவடிக்கைகளிலும், பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டில்
ஆனால்- தமிழகத்தைப் பொறுத்தவரை, வியாபாரம், பத்திரிகைத் துறை, இதரத் தொழில் துறைகளில், பார்ப்பனர்கள் இருந்த இடத்திற்குப் பார்ப்பனரல்லாதோரும் வந்திருக்கின்றனர்.
தங்களுக்கு வாய்ப்புகள் மிகவும் கட்டுப் படுத்தப் பட்டுவிட்டதாகப் பார்ப்பனர்கள் கூறுகிறார்கள்.
இந்தியாவில் மற்றப் பகுதிகளைவிட, தமிழ் நாட்டில்தான் பார்ப்பனர்களுக்கு நெருக்கடியான சூழ்நிலைகள் தோன்றியுள்ளதாகத் தெரிகிறது. அதற்கு ஒரு காரணம் நீண்ட காலமாகவே வட நாட்டவர்களை தென்னாட்டு மக்கள் நம்புவது கிடையாது. சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே, தென்னாட்டில் திராவிடர்கள் வாழ்ந்து வந்தனர்.
ஆரியர்கள் வடநாட்டில் குடிபுகுந்து தங்கினர். எனவே, தமிழ் பேசும் திராவிடர்கள், பார்ப்பனர் களை வடநாட்டின் ஏஜெண்ட்டுகள் என்றும், சமஸ்கிருத கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள் என்றும் கருதுகின்றனர்.
பொதுச்செயலாளர் வீரமணி
பிராமணர்கள் மனிதர்களாகத்தான் இருக்க வேண்டும்; தங்களை மற்றவர்களைவிட உயர்ந்தவர் களாக கருத கூடாது என்று திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி கூறுகிறார். தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று பார்ப் பனர்கள் உரிமை கொண்டாடக் கூடாது; சமு தாயத்தில் அவர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கக்கூடாது என்றும் திரு.வீரமணி சொல்லுகிறார். திராவிடர் கழகம் ஒரு பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கமாகும்.
நாங்கள் தனிச் சலுகைகள் எதுவும் கேட்கவில்லை என்று பார்ப்பன இளைஞர் பிரிவு அமைப்பாளரான சிவராம கிருஷ்ணன் என்பவர் கூறினார்.
காலம் மாறி விட்டது; பார்ப்பன இளைஞர்கள் இன்னும் தங்களை உயர்ந்த ஜாதிக்காரர்களாக கருத விரும்பவில்லை. எல்லா ஜாதியாரோடும் அவர்கள் கலந்து இருக்கிறார்கள்.
சென்னைப் பார்ப்பனர்கள் வடநாட்டு சமஸ்கிருதப் பார்ப்பனர்களும் அல்ல என்றும் அவர் மேலும் கூறினார்.
25 வயதுடைய ராமச்சந்திரன் என்ற இன்ஜினீயரிங் படித்திருக்கும் பார்ப்பனர் மேற்கத் திய முறையில் பேண்ட், டி சர்ட் அணிந்திருக் கின்றார். பெயரில் ஜாதிப்பெயர் போட்டுக் கொள்ளவில்லை. ஆனால் நெற்றியில் நேர்கோடு போல விபூதி அடித்துத் தன்னை ஒரு சிவ பக்தர் என்று பறைசாற்றிக் கொண்டிருக்கிறார். அந்த நவீனமான டி ஷர்ட்டுக்குள்ளே பூணூல் இருக்கின்றது. அந்த பூணூல்தான் இந்திய ஏற்றத் தாழ்வு சமூக அமைப்பில் சவாலே விடமுடியாத அளவுக்கு உயர்ந்த இடத்தில் பார்ப்பனர்களை நிறுத்துகிறது. சவால் விடப்பட முடியாத நிலை அந்த காலத்தில் மட்டுமல்ல; இன்று வரையும் அதே நிலைதான்.
பார்ப்பனரல்லாத இந்துக்கள்-சட்டப்படியான சமத்துவ உரிமைகோரி இந்தியா முழுவதும், தங்கள் உரிமையை மிகக் கடுமையாக வலியுறுத்தி வருகின்றனர் என்று அந்த ஏடு எழுதியிருக்கின்றது-
தென்னகத்தில் முழுமையான மாற்றம் ஏற் பட்டிருக்கிறது என்றும், கல்வி வேலை வாய்ப்பு களில் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டதாகப் பார்ப்பனர்கள் கருதுகிறார்கள் என்றும், தங்களுக்குச் சமத்துவம் வேண்டுமென்று, சென்னை யிலே பார்ப்பனர்கள் சங்கம் அமைத்திருக் கின்றார்கள் என்றும், நிலைமை தலைகீழாகப் போய்க் கொண்டிருக்கிறது என்றும் அந்த ஏடு மேலும் எழுதியிருக்கிறது.
கடைசிப் பூணூல் இருக்கும் வரை- கருஞ்சட்டைப் படை ஓயாது என்று சென்னைச் சுவரில் எழுதப்பட்டுள்ள வாசகம் ஒன்றையும் நியூயார்க் டைம்ஸ் ஏடு குறிப்பிட்டிருக்கிறது.
பாம்பையும், பார்ப்பனரையும் கண்டால் பாம்பைவிட்டு, பார்ப்பனரை அடி என்று சென்னைச் சுவரில் எழுதப்பட்டுள்ளதாகவும் அந்தக் கட்டுரை கூறுகிறது.
பார்ப்பனர்கள் இப்போது சங்கம் அமைத்து எதிர்த்துப் போராடக் கிளம்பிவிட்டதால் பார்ப் பனருக்கு எதிரான கொடுமைகள் குறைந்துவிட்டன என்று பார்ப்பன சங்கத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் கூறியதாகவும் அந்த ஏடு எழுதியிருக்கிறது.
பார்ப்பனர்களின் எண்ணிக்கை 3.5 சதவிகிதம் தான்; எனவே மக்கள் இயக்கம் எதையும் அவர்கள் நடத்திவிட முடியாது; தமிழ்நாட்டில் பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் மிகவும் வலிமை பெற்றுத் திகழ்கிறது.
எனவே பல படித்த பார்ப்பன இளைஞர்கள் வெளிநாடுகளுக்குப் போக ஆரம்பித்து விட்டார்கள் என்றும் நியூயார்க் டைம்ஸ் ஏடு குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment