Saturday, October 1, 2011

மருத்துவரின் மருத்துவர்!


மருத்துவரின் மருத்துவர்!


மானமிகு ஆசிரியர் அய்யா வாழ்வியல் சிந்தனையாக இதயத்தைப் பற்றி மருத்துவர்களை மிஞ்சும் அளவிற்கு "மருத்துவரின் மருத்துவராக" எழுதியிருந்தார். ஒரு மருத்துவர் என்ற முறையிலும், நானும் ஏதோ கொஞ்சம் எழுதுவேன் என்ற முறையிலும் நான் மிகவும் பாராட்டி வியக்கின்றேன்.
ஒவ்வொருவரும் பல முறைப் படிக்க வேண்டிய முக்கிய "மந்திரம்" அந்த வார்த்தைகள். இன்றைய கால கட்டத்திலே "மாரடைப்பால் எதிர் பாரா சாவு" என்பது, அனைவரும் மன்னிக்க வேண்டுகின்றேன் "மடத்தனத்தால் சாவு" என்றுதான் சொல்லப்பட வேண்டும். ஏன் ?
மாரடைப்பால் சாவதைப் பெரும்பாலும் தடுத்துவிட முடியும். 40 வயதிற்கு மேலே ஆண், பெண் இரு பாலரும் மூன்று அல்லது அய்ந்தாண்டுகளுக்கு ஒரு முறை டிரெட்மில் ஈ.கே.ஜி"  எனும் ஒடச்சொல்லி, அப்போது இதயம் ஒழுங்காக இருக்கிறதா என்ற சோதனையைச் செய்து கொள்ளவேண்டும். இதில் இதயம் வேகமாகத் துடித்து, அதிகமாக வேலை செய்யும் போது இதயத்திற்கு வேண்டிய அளவு ரத்தம் வருகிறதா இல்லை அடைப்பு இருக்கிறதா என்பதை அறிந்து அதற்கு மேலே ஆவன செய்யலாம். அது மாரடைப்பைத் தடுக்கும் மருத்துவ அல்லது அறுவை சிகிச்சை, ஸ்டெண்ட் என்பன ஆகும். வருமுன் காப்பது என்பது இதுதான்.ஆம்! செல வாகுமே! கட்டாயம் ஆகும். ஆனால் மாரடைப்பால் இறப்பதை விடவோ, வந்த பின் துடித்துக் கொண்டு ஒன்றுக்குப் பத்தாகச் செலவு செய்வதையோ தடுக்குமே! பெரியார் திடல் மருத்துவ மனையிலும், மற்றும் மருத்துவ வசதிகள் உள்ள நமது நிறுவனங்களிலும் முன்னோடிகளாக இந்தப் பரிசோதனை இதய மருத்துவர்களைக் கொண்டு வாரம் ஒரு முறை அல்லது இரு முறை என்று செய்யலாம். மாரடைப்பு யாருக்கு வரும் என்று சொல்ல முடியாது. புகை பிடித்தல், வேறு எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாத, ஒல்லியாக மிகவும் சுறு சுறுப்பாக இருக்கும் ஆசிரியர் அவர்களுக்கே வந்துள்ளது என்றால் என்ன சொல்ல முடியும்? நமது தாத்தாவையா மாற்ற முடியும் ? ஆகவே அனைவரும் இந்தப் பரிசோதனை செய்து கொள்வது தான் சிறந்த வழி.
வாழட்டும் இதயம்.  வாழ்க பெரியார் ! வளர்க மருத்துவப் பகுத்தறிவு!
- சோம.இளங்கோவன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...