கொள்ளேகால், செப்.5- முதல் அமைச்சர் பதவி பறிபோகாமல் இருக்க சாம்ராஜ்நகரில் உள்ள சாம்ராஜேஸ்வரர் கோவிலுக்கு நேற்று மாலை 6.30 மணியள வில் கேரளாவைச் சேர்ந்த ஜோதிடர்கள் மற்றும் புரோகிதர்கள் வந்து சிறப்பு யாக பூஜை நடத்தினார்கள்.
சாம்ராஜ்நகருக்கு வந்தால் கர்நாடக மாநில முதல்-அமைச்சர் பதவி பறிபோய் விடும் என்ற நம்பிக்கை உள்ளது. இதை யடுத்து சிறப்பு யாகம் செய்வதற்காக நேற்று மாலை 6.30 மணியளவில் கேர ளாவை சேர்ந்த ஜோதிடர் ரவிநம்பூதரி, மங்களூர் பிரசாத் மற்றும் உடுப்பி, புதுச்சேரியை சேர்ந்த 20 ஜோதிடர்கள் திடீரென்று சாம்ராஜ்நகரில் உள்ள சாம்ராஜேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். அந்த ஜோதிடர்கள், சாம்ராஜேஸ்வரர் கோவிலில் 5 இடங்களில் யாக குண்டங்கள் அமைத்து சிறப்பு யாக பூஜைகள் செய்தனர்.
நேற்று தொடங்கிய இந்த யாக பூஜை, நாளை வரை 3 நாட்கள் நடக்கிறதாம். முதல் அமைச்சர் பதவி பறிபோகாமல் தடுக்க இந்த சிறப்பு யாகம் செய்யப்பட்டதாம். இதற்கான செலவுகளை அமைச்சர் ஷோபா வழங்கி உள்ளதாக கூறப்படு கிறது. மேலும் இந்த சிறப்பு யாகத்தை கண் காணிக்க சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவின் தலைவராக சாம்ராஜ்நகர் சூடா தலைவர் சுந்தர் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் ...
-
கொள்கைகள், லட்சியங்களைக் கொண்ட எந்த ஓர் இயக்கமும் வரலாற்றில் பல்வேறு கட்டங்களைக் கடந்துதான் வெற்றி வாகை சூடிட முடியும். அதிலும் மிகவும் கடி...
No comments:
Post a Comment