சென்னை, செப்.5 எதற்கெடுத்தாலும் குண்டர் சட்டம் என்பது ஆபத்து என்று தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித் துள்ளார். கலைஞர் கேள்வி பதில் விவரம் வருமாறு:
கேள்வி :- நில அபகரிப்பு என்ற பெயரில் கொடுக்கப்படும் புகார்கள் அ.தி.மு.க.வினர் தொடர்புடையது என்றால்; காவல்துறையினர் நடவ டிக்கை எடுக்கத் தயங்குவதாகவும், அவர்களது அணுகு முறை பார பட்சமானது என்றும் தெரிகிறதே?
கலைஞர்:- நில அபகரிப்பு புகார் களைப் பொறுத்தவரை; அ.தி.மு.க. ஆட்சியாளர் களோடு சேர்ந்து காவல் துறையினர் சட்ட நெறிமுறைகளை, தமது விருப்பத்திற்கு வளைக்கி றார்கள் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு. அமைச் சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடங்கி, காஞ்சிபுரம் அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர், பவானி அ.தி. மு.க. சட்டப்பேரவை உறுப்பினர், சோழவந்தான் அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர், ஆண்டிப்பட்டி அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப் பினர், நாகர்கோவில் அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர், அ.தி. மு.க. முன்னாள் எம்.பி., என்.ஆர். கோவிந்தராஜன் என்று அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக் கிறது. சமீபத்திய எடுத்துக்காட்டு வேண்டுமென்றால் - காரைக்குடி அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப் பினரைச் சொல்லலாம். இவரைப் பற்றி அ.தி.மு.க. ஆதரவு நாளேடு (தினமலர்) ஒன்று :
சிவகங்கை புதுவயல் அருகே நில அபகரிப்பு புகார் கொடுத்ததற்காக மிரட்டிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சோழன் பழனிச்சாமி மீது நட வடிக்கை கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் ஆனது. புதுவயல் அப்பாளையைச் சேர்ந்த கருப்பையா என்பவர் தாக்கல் செய்த அந்த மனுவில், தாழ்த்தப்பட் டோருக்கு வழங்கப்பட்ட நிலங் களை, கணேசன் என்பவரிடமிருந்து சோழன் பழனிச்சாமி, எம்.எல்.ஏ., கிரையம் பெற்று, அவரது மனைவி பஞ்சவர்ணம் பெயரில் பட்டா மாறுதல் செய்தது குறித்து சிவகங்கை எஸ்.பி.யிடம் புகார் கொடுத்ததாகவும்; இதனால் எம்.எல்.ஏ., தூண்டுதல் பேரில் அவரது ஆதரவாளர்களால், தான் கடத்திச் செல்லப்பட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும்; தன்னிடமிருந்து வெள்ளைத் தாளில் அவர்கள் கையெழுத்து வாங்கியதாக வும்; இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீசில் புகார் கொடுத்தும் நட வடிக்கை இல்லை என்பதால், நட வடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டு மென்றும் தெரிவிக்கப் பட்டுள்ளதாக, செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று ஒரு மாலை ஏட்டில், ஈரோடு மாவட்டத்தில் நில அபகரிப்புப் புகார்கள் பற்றிய நிலை விளக்கப்பட்டுள்ளது. அந்த ஏட்டில்:
ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க. வினர் மீதுதான் அதிக அளவில் புகார்கள் குவிந்துள்ளன. முன்னாள் எம்.பி., கோவிந்தராஜன், பவானி எம்.எல்.ஏ., நாராயணன், அம்மாப் பேட்டை அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் சரவணபவா, முன்னாள் செயலாளர் சரவணன், அத்தாணி நகர அ.தி.மு.க. செயலாளர் ராஜா, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட நிர்வாகி வேங்கை ராஜேந்திரன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர்மீது புகார் கள் வந்துள்ளன. ஆனால், இவர்கள் மீதான புகார்களில் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. பவானி எம்.எல்.ஏ., நாராயணன் மீது இரண்டு புகார்கள் ஆதாரத்துடன் தெரிவிக்கப்பட்ட போதிலும் தனிப் பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்கா மல் உள்ளனர் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் முறையான புலன் விசாரணைக்கு முன்னரே - அ.தி.மு.க.வினர் என்றால் ஏதுமறியா நிரபராதிகள்; தி.மு.க.வினர் என்றால் குற்றவாளிகள் என்று ஏற்கனவே இத யத்தில் பதிவு செய்து கொண்ட எண் ணத்தில் காவல்துறை செயல்படுவ தாகத் தெரிகிறது.
தகுந்த ஆதாரங்களோடு செய்யப் படும் புகார்களின் மீது -அந்தப் புகார்கள் யார்மீது செய்யப்பட்டிருந் தாலும் - சட்டப்படி நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும்; அவற்றை அலட் சியப்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் நடப்ப தென்ன?
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உயரிய கொள்கையை உணர்த் திடும் சட்டத்தின்படி நடக்கும் ஆட்சி என்பதற்கு மாறாக வும் - முரணாகவும் - எதிராகவும், சர்வாதிகார ஆட்சி அல்லது போலீஸ் ராஜ்யம் எனக் குற்றம் சாற்றிடும் வகையில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியினர் தரும் அரசியல் ரீதியான ஆணைகளுக்குப் பணிந்து; கழகத் தோழர்களைக் காவல்துறை யினர் கொடுமைப் படுத்துகின்றனர். பொய்ப் புகார்களின் அடிப்படை யிலான வழக்குகளில் கைது செய்தல்;
பொய்ப் புகார்கள்கூட இல்லாமல், கைது செய்துவிட்டு, பிறகு புகார் களைத் தயாரித்துக் கொள்ளுதல்;
வாரண்ட் இல்லாமலேயே கைது செய்தல்;
ஒரு புகாரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற ஜாமீன் மூலம் வெளியே வந்த ஒருவரை, வேறொரு பொய்ப் புகார் தயார் செய்து கைது செய்தல்;
முதல் தகவல் அறிக் கையில் பெயர் குறிப் பிடப்படாதவர்களைக் கைது செய்தல்;
ஏற்கனவே குற்ற வாளியாக உள்ள ஒரு வரிடமிருந்து பொய்ப் புகார் பெற்றுக் கைது செய்தல்;
தி.மு.க.வைச் சேர்ந்த வர்கள் என்றால் ஓர் அளவுகோல் - ஆளும் அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் என்றால் மற்றொரு அளவுகோல் என - ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு, மற்றொரு கண்ணுக்கு வெண்ணெய் என்ற வெறுப்பினை அடிப்படையாகக் கொண்ட வித்தியாசமான சட்டப் பிரயோகத்தின்படி கைது செய்தல்;
போன்ற நடவடிக்கைகளில் காவல் துறையினர் கடந்த மூன்று மாதங் களாக தொடர்ந்து ஈடுபட்டு வருகி றார்கள். கைது செய்யப்படும் கழகத் தினரை, மதுரையிலிருந்து பாளையங் கோட்டைக்கும் - சேலத்திலிருந்தும், சென்னையிலிருந்தும் கோவைக்கும் - திருச்சியிலிருந்து கடலூருக்கும், சேலத் துக்கும் கொண்டு சென்று சிறையில் அடைக்கின்றனர்.
குடும்பத்தினரோ, உறவினர்களோ, நண்பர்களோ எளிதில் சென்று அவர்களை பார்க்கக் கூடாது என்பதற்காகக் கல் நெஞ் சத்தினர் செய்து வரும் ஏற்பாடு இது. இத்தகைய நிலை நெருக்கடி காலத்தில் கூட இல்லை. தொடங்கப்பட்ட எல்லாவற்றுக்குமே முடிவு என்று ஒன்று உண்டு. சட்டத்தைச் சற்றும் மதிக்காத இதுபோன்ற சாகசங்கள் இன்னும் எத்தனை நாளைக்கு என் பதை நீதிமன்றங்கள் நிர்ணயித்திடும் என நிச்சயம் நம்புவோம்!
கேள்வி :- குண்டர் சட்டத்தைக் காட்டி, விருதுநகர் மாவட்ட ஆட் சியர் பயமுறுத்து வதாக; அ.தி.மு.க. ஆதரவு மார்க்சிஸ்ட் நாளேடான தீக்கதிர் செய்தி வெளியிட் டுள்ளதே?
கலைஞர் :- அந்த நாளேடு, குண்டர் சட்டம் பாயுமென மிரட்டல்; விருது நகர் ஆட்சியாளரின் அராஜகம் என்ற தலைப்பில், மக்களின் கோரிக்கை களை மனுவாக அளித்து முறையிடச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை, குண்டர் சட்டம் பாயும் என மிரட்டிய விருது நகர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பாலாஜியைக் கண்டித்து, ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. என்று செய்தி வெளியிட்டுள்ளது.
குண்டர் சட்டம் என்பது 1982ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. சட்டம் - ஒழுங்கிற்கு பாதகம் விளை விக்கும் செயலில் அடிக்கடி ஈடுபடு பவர்கள்; வழிப்பறி - செயின் பறிப்பு - திருட்டு - விபச்சாரத் தொழில் - கள்ளச் சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற சம்பவங் களில் அடிக்கடி ஈடுபடுபவர்கள்; ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். இந்தச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப் படுபவர்கள் உடனடியாக ஜாமீனில் வெளிவர முடியாது; இந்தச் சட்டத் தின் பிரிவு 13ன் கீழ் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சியின் 100 நாள் சாதனைகளில் ஒன்றாக இதுவரை தமிழகத்தில் 323 பேர் குண்டர் சட்டத் தின்கீழ் கைது செய்யப் பட்டுள்ளனர்; சென்னையில் மட்டும் 139 பேர் சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர். இவ்வளவு குறுகிய காலத்தில், இத் தனை பேர் இந்தக் கடுமையான குண்டர் சட்டத்தில் கைது செய்யப் படுவதற்கு என்ன காரணம்?
திடீ ரெனக் குற்ற நிகழ்வுகள் அதிகரித் திருக்க வேண்டும் அல்லது பயமுறுத் திப் பணிய வைக்க வேண்டும் என்ப தற்காக வேண்டுமென்றே குண்டர் சட்டத்தை தவறான முறையில் பிர யோகித் திருக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியினர் பெருமளவுக்கு குண்டர் சட்டத்தை பயன்படுத்துவதற்கு இந்த இரண்டுமே காரணங்களாகும்.
அடிப்படையில், மனித உரிமை களுக்கு எதிரானது குண்டர் சட்டம். எனவே அதைப் பிரயோகிப்பதற்கு முன், ஒரு முறை அல்லது இரு முறை - பல முறை ஆழ்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும். ஆனால் கொடுங் குற்ற வாளிகள் மீது பாய்ச்சிட வேண்டிய குண்டர் சட்டத்தை, தி.மு.க.வினர் 15 பேர் மீது, உள்நோக்கத்தோடு - மேலோட்டமான எண்ணத்தின் அடிப்படையில் பாய்ச்சியுள்ளனர். குண்டர் சட்டத்தின் அடிப்படை அம்சங்கள் இவர்களுக்கு எப்படிப் பொருந்தும் என்பது தெரியவில்லை.
சட்ட உரிமைகளில் ஒன்றான ஜாமீன் பெறுவதற்கும் வழியின்றி, அவர்கள் சிறைக்குள்ளே வாடிக் கொண்டிருக் கிறார்கள். நில அபகரிப்பு - குண்டர் சட்டம் என்றெல்லாம் ஆட்சியாளர் கள் கழகத் தோழர்களை அச்சுறுத்தி விட முடியாது. இதைவிடப் பெரிய சோதனைகளையும் - துன்பங்களையும் சந்தித்து, புடம் போட்ட பொன்னாக ஒளிர்பவர்கள் கழகத்தினராவார்கள்! ஜனநாயக நாட்டில், சட்டப்படியான ஆட்சிக்கு விடை கொடுத்துவிட்டு; சுதந்திரமான எண்ணம் - அச்சமில்லாத கருத்துப் பரிமாற்றம் - கலந்தா லோசனை - விவாதம் இவையேது மின்றி; நானே எல்லாம்; நானே இந்த மாநிலம் எனும் சர்வாதிகாரப் போக் கில்; எதிர்க் கட்சியினரையும், பொது மக்களையும் அச்சுறுத்தியே ஆட்சி நடத்தலாம் - ஒருவகை டென்ஷனில் வைத்தே ஆட்சி நடத்தலாம் என்று நினைத்தால்; ஆட்சியாளர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும்! வர லாற்றின் உயிரோட்டமுள்ள வாக்கு இது!
அச்சுறுத்தியே ஆட்சி நடத்தலாம் என்று எண்ணும் அ.தி.மு.க. ஆட்சி யாளர்களுக்கு - அதிகமாக முறுக் கேற்றப்பட்ட கயிறு அறுந்து விடும் என்ற அறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழியை நினைவுபடுத்துகி றேன்!
Sunday, September 4, 2011
எதற்கெடுத்தாலும் குண்டர் சட்டம் என்பது ஆபத்து! தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் ...
-
கொள்கைகள், லட்சியங்களைக் கொண்ட எந்த ஓர் இயக்கமும் வரலாற்றில் பல்வேறு கட்டங்களைக் கடந்துதான் வெற்றி வாகை சூடிட முடியும். அதிலும் மிகவும் கடி...
No comments:
Post a Comment