வாஷிங்டன், செப்.8- இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் கடைசி கட்டத்தில் நிராயுதபாணிகளான தமிழர்களை வஞ்சகமாக போர்ப் பகுதியில் தள்ளி, தப்பவிடாமல் பீரங்கிகளுக்கும் தானியங்கி துப்பாக்கிகளுக்கும் இரையாக்கி ஆயிரக்கணக்கானவர்களை காக்கை, குருவிகளைப் போல சுட்டுக்கொன்ற ராணு வத்தின் கயமையை முறையாக விசாரிக்கா மல் பூசி மெழுகப் பார்க்கிறது இலங்கை அரசு நியமித்த விசாரணை ஆணையம் என்று லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்' என்ற மனித உரிமைகள் அமைப்பு கண் டனம் தெரிவித்துள்ளது.
கற்ற பாடங்கள் மூலம் சமரசம் காண்ப தற்கான ஆணையம் (எல்.எல்.ஆர்.சி.) என்ற பெயரில் போர்க் குற்றங்களை விசாரிப்பதற் கான ஆணையத்தை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே நியமித் திருந்தார்.
போரின் கடைசி கட்டத்தில் தமிழர் களை மனிதக் கேடயமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தினர் என்ற எதிர்ப்பிரச் சாரத்தை இலங்கை அரசு மேற்கொண்டது.
அப்படியே நடந்திருந்தது என்றாலும் இலங்கை அரசின் விசாரணை வெளிப் படையாகக் கூறப்பட்ட புகார்களைக்கூட விசாரிக்காமல், பத்திரிகை களிலும் பிற ஊடகங்களிலும் வெளியான தகவல்களைக் கூட சரிபார்க்காமல் முழுப் பூசணிக் காயையும் சோற்றில் மறைக்கிற கதையாக, இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய மனித இனப் படுகொலையை எதுவுமே நடக்காத மாதிரி மூடி மறைத்து விட்டது. இதைத்தான் ஆம்னஸ்டி இன் டர்நேஷனல் அறிக்கை சுட்டிக்காட்டு கிறது.
தமிழர்களில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள்கூட விட்டுவைக்கப்படாமல் போர் தீவிரமாக நடந்த பகுதியையே போர் நிறுத்தப் பகுதியாக அறிவித்து, அடிபட்ட வர்கள் பெயரளவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மருத்துவ முகாம்களையும் இரக்கமின்றி தாக்கி அழித்த வீடியோ ஆதாரங்களைக் கூட புனைந்தது, செயற்கையானது என்று கூறி நிராகரித்துவிட்டது இலங்கை அரசு.
அய்க்கிய நாடுகள் சபையால் அனுப் பப்பட்ட நடுநிலைப் பார்வையாளர்களும், சமாதானத் தூதர்களும் போர் தொடங்கும் முன்னதாக இலங்கையிலிருந்து புறப் பட்டபோது தமிழர்கள் அவர்களைப் போக வேண்டாம் என்று கெஞ்சி கதறியதன் காரணம் என்னவென்று பிறகு நடந்த படுகொலைகள் எடுத்துக்காட்டி விட்டன.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள்கூட, இலங்கையில் நடந்த மனித உரிமைகள் மீறலுக்குக் கார ணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தபோது இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள் இலங் கைக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவது நடுநிலையாளர்களை, மனித உரிமை ஆர்வலர்களை திடுக்கிடச் செய்கிறது.
இந்நிலையில் ஆம்னஸ்டி இன்டர் நேஷனல் மீண்டும் இந்த அக்கிரமத்தைப் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை, தமிழர் களுக்கு ஈழம் கிடைக்காவிட்டாலும் அவர்கள்பட்ட துயரத்துக்கு சிறிதளவாவது நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. போர்க் குற்றவாளி களை அடையாளம் காணும் பணியை, போர்க் குற்றவாளி என்று குற்றம் சாட் டப்படும் அதிபரே நியமித்த குழு மேற் கொள்ளும் என்று உலகம் எதிர்பார்ப்பது வெட்டிவேலைதான்.
பன்னாட்டு சமூகம் வேறு ஏதாவது வழிமுறைகள் மூலம்தான் கயவர்களை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி நியாயம் கேட்க வேண்டும்.
திட்டமிட்ட படுகொலைகளையும், ஏராளமான தமிழர்கள் கைதும் செய்யப் படாமல், காவலிலும் வைக்கப்படாமல் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவங்களையும் சரியாக விசாரிக்க வில்லை என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷன லின் ஆசிய-பசிபிக் பகுதி இயக்குநர் சாம் ஜாரிஃபி சுட்டிக்காட்டுகிறார். அவரது அறிக்கை 69 பக்கங்களுக்குத் தயாரிக்கப் பட்டிருக்கிறது. அவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?' என்று பொருத்தமான தலைப்பையும் இட்டிருக்கிறார்.
இலங்கை அரசு நியமித்த ஆணையம் விசாரித்து அளித்த அறிக்கையானது சர்வ தேச தரத்துக்கு வெகு தொலைவில் இருக் கிறது என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.
உண்மைகள் வெளியே வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் நடந்த விசாரணைகளிலிருந்து என்ன மாதிரி அறிக்கை தயாரிக்க முடியும்? இப்படிப் பட்ட தகுதிக்குறைவான அறிக்கையைத் தான் இலங்கை அரசால் தர முடியும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் பொருமு கின்றனர். இனியாவது பன்னாட்டு சமு தாயம் விழித்தெழுந்து இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை உரிய கண் ணோட்டத்தில் பார்த்து போர்க் குற்றவாளி களைத் தண்டிக்க வேண்டும்.

No comments:
Post a Comment