அறிஞர் அண்ணா ஆசிரியராக இருந்த விடுதலை ஏட்டுக்கு நூலகங் களில் தடை விதிப்பதா? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அ.தி.மு.க. அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப் பினார்.
புதுக்கோட்டையில் திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் தேன்மொழி மாவட்ட திக அமைப் பாளர் சுப்பையா ஆகியோரது மகன் அறிவரசன் ஆந்திர மாநிலம் குடிபாலா மண்டலம் சித்தூர் மாவட்டம் சித்தப்பாறையைச் சேர்ந்த மரியா-ராசு ஆகியோரின் மகள் ரமீளா ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடந்தது. பொதுக்குழு உறுப்பினர் தேன்மொழி அனைவரையும் வரவேற்றார்.
தமிழர் தலைவரின் துணைவியார் மோகனா அம்மையார், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் குணசேகரன், கழகப் பேச்சாளர்கள் இராம.அன்பழகன், மாங்காடு மணியரசன், மாவட்டத் தலைவர்கள் புதுக் கோட்டை மு.அறிவொளி, அறந்தாங்கி பெ.இராவ ணன், மாவட்ட செயலாளர்கள் புதுக்கோட்டை ப.வீரப்பன், அறந்தாங்கி க.மாரிமுத்து, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அறந்தாங்கி கு.கண் ணுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழர் தலைவர் உரை
இந்நிகழ்வில் மணமக்களுக்கு வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நடத்தி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது இந்த திருமண விழாவின் பெற்றோரான அமைப்பாளர் சுப்பையா மகளிரணியைச் சார்ந்த பொதுக்குழு உறுப்பினரான தோழியர் தேன்மொழி யும் அவரது சகோதரிகள் அனைவரும் அய்யாவின் கொள்கையில் புடம் போட்ட நல்ல தங்கங்கள். அவர்கள் எல்லாப் போராட்டங்களிலும், கழக நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடியவர்கள். சிறப்பாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
மத மறுப்பு திருமணமும்கூட...
அய்யாவின் கொள்கையின்படி சுயமரியாதைத் திருமணம் நடத் துவது என்பது புதிதல்ல. ஆனால் இந்த மண விழா வில் உள்ள சிறப்பு மணமகள் ரமீளா கிறிஸ்தவ மதத் தைச் சார்ந்தவர். இங்கு நடப்பது ஜாதி மறுப்புத் திருமணம் மட்டுமல்ல பெற்றோரின் ஒப்புதலோடு மத மறுப்புத் திருமணமும் கூட. 1973ஆம் ஆண்டு அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைந்தபிறகு இந்த இயக்கம் இருக்குமா இருக்காதா என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் இவ்வளவு பெரிய இயக்கமாக வளர்ந்து இன்றைக்கும் அய்யாவின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்றால் அய்யாவின் கொள்கையின் தாக்கம்தான் காரணம்.
இப்போதுகூட அய்யாவின் கருத்துகள் நூலகங் கள் வாயிலாக மக்களுக்கும் இளைய தலைமுறையி னருக்கும் போய்விடக் கூடாது என்பதற்காக புதிதாக வந்த அரசு அறிஞர் அண்ணா ஆசிரியராக இருந்த விடுதலை இதழை நூலகங்களுக்கு நிறுத்தச் செய் துள்ளது. மாற்றுக் கருத்துக்கு எங்களிடம் இட மில்லை என்பதைச் சொல்கிறது
துன்பத்திலும் ஓய்வெடுக்காமல்...
1933ஆம் ஆண்டு மே மாதம் அன்னை நாகம்மை யார் அவர்கள் மறைந்த அன்று பெரியார் அவர்கள் அடக்கம் செய்த அடுத்த நாள் அந்தத் துன்பத்திலும் ஓய்வெடுக்காமல் திருச்சியில் பாலக்கரை அருகே ஒரு சுயமரியாதைத் திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் மணமக்களில் ஒருவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்.
அவர்களுக்கு அய்யாவின் தலைமையில் திருமணம் நடப்பதாக இருக்கிறது. பாதிரியார் நடத்தி வைக்க வேண்டிய திருமணத்தை அய்யா அவர்கள் நடத்தி வைக்கக் கூடாது என்று காவல் நிலையத்தில் பாதிரியாரே புகார் தெரிவித் தார். அய்யாவிடம் வந்து பேசினார்கள். அய்யாவோ நான் இன்னும் திருமணமே நடத்தி வைக்கவில்லை.
திருமணம் பாதிரியாருக்கு அல்ல
அதற்குள் வந்து பேசுகிறீர்கள். திருமணம் நடத்தி வைத்த பிறகு அவ்வாறு திருமணம் நடத்தியதற்கு சட்டத்தில் என்ன குற்றமோ அதன்படி பிறகு நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். திருமணம் மணமக்களுக்கே தவிர பாதிரியாருக்கு அல்ல. மணமக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு திருமணம் நடந்தது. அது போன்றதொரு எதிர்ப்பு கள் எல்லாம் இப்போது இல்லை என்றால் பெரியார் வெற்றி பெற்றிருக்கிறார். பெரியாரின் கொள்கை வெற்றி பெற்றிருக்கிறது.
லண்டனில் இன்றைக்கு சிந்தனை
லண்டனில் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேல் பகுத்தறிவாளர்கள் இயக்கம் நடத்திக் கொண்டி ருப்பவர்கள் மதச்சடங்குகளையும் சம்பிரதாயங் களையும் தகர்த்துவிட்டு எப்படி திருமணம் செய்து கொள்வது என்று இப்போதுதான் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் 80 ஆண்டுகளுக்கு முன்னரே சடங்கு சம்பிரதாயங்களைத் தகர்த்து விட்டு சுயமரியாதைத் திருமணம் நடத்தி வைத்தவர் தந்தை பெரியார் அவர்கள். மணமக்களுக்கு மன ஒற்றுமைதான் முக்கியமே தவிர மதங்கள் முக்கியமில்லை. மக்கள் சோதிடம் பார்த்து திருமணம் செய்வதைத் தவிர்த்து விட்டு உடற்கூறு பார்த்து திருமணம் செய்வது அவசியம்.
ஜாதியை பார்ப்பவர்கள் ரத்த வகையைப் பார்ப்பதில்லை
ஜாதியைப் பார்க்கும் அளவுக்கு ரத்தவகையை யாரும் பார்ப்பதில்லை. சுயமரியாதைத் திருமணத்திற்கு யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்று நடத்தி வைக்கலாம். அது சட்டப்படி செல்லும். தனக்கு என்கிற தன்முனைப்பு இல்லாமல் வாழ்க்கை நடத்த வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை. கெட்டுப் போவோர் விட்டுக் கொடுப்பதில்லை.
பெரியாரின் தொண்டறம்
இதுவரை இல்லறம் துறவறம் என்றுதான் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அய்யா ஒருவர்தான் தொண்டறம் என்பதை அறி முகப்படுத்தி வாழ்வில் ஒவ்வொருவரும் கடைப் பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக் கிறார்கள். மணமக்கள் தந்தை பெரியாரின் கொள்கைகளை வாழ்வில் ஏற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்.
- இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பேசினார்.
No comments:
Post a Comment