சட்டம் ஒழுங்கு கெட்டது எப்பொழுது? யார் ஆட்சியில்?
தி.மு.க. ஆட்சிமீது வைக்கப்படும் குற்றச்சாற்றுகளுள் ஒன்று - சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்ப தாகும்.
குற்றம் சுமத்துகிறவர் யார் என்றால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா - கோவைக் கூட்டத் தில்கூட (6.4.2011) இந்தக் குற்றச் சாற்றை முன் வைத்துள்ளார்; திருவாளர் சோ ராமசாமி அய்யர் போன்றவர்களும் இதற்குப் பின் பாட்டுப் பாடி வருகின்றனர்.
நாட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச் சினையைப் பாதுகாக்க வேண்டிய முதல் அமைச்சராக இருந்த ஜெய லலிதா அம்மையாரே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சது ராடியது சாதாரணமானதுதானா? சட்டத்தைத் தவறாகக் கையாண் டதில் இந்த அம்மையாருக்கு நிகராக இன்னொருவரைக் காட்ட முடியுமா?
எத்தனை எத்தனையோ எடுத் துக்காட்டுகளைக் கையும் களவு மாகக் கொண்டு வந்து நிறுத்த முடியும்! எடுத்துக்காட்டுக்கு இதோ சில:
ஆட்சிப் பொறுப்பேற்ற 15ஆம் நாள் என்ன செய்தார்?
முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன், முன்னாள் மேயர் மு.க. ஸ்டாலின் ஆகியோர்மீது ரூ.15 கோடி மதிப்பிலான சாலை போடும் காண்டிராக்ட் வழங்கியதில் ஊழல் என்று வழக்குப் போட்டார். இது தொடர்பாக தி.மு.க. நாடாளுமன்ற முன்னால் உறுப்பினர் பரசுராமன் கைதும் செய்யப்பட்டார். அந்த வழக்கில் அவர்களைக் குற்றவாளி யாக நிரூபிக்க முடிந்ததா?
தனது வளர்ப்பு மகனாக அறிவிக்கப்பட்ட சுதாகரன்மீது கொலை வழக்கு 16 கிராம் ஹெரா யின் போதை வைத்திருந்தாகவும் கூறி, இரு வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டாரே (13.6.2001) வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வந்ததா? சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் என்றுகூறி தி.மு.க. தலைவர் கலைஞர் மற்றும் மு.க. ஸ்டாலின் மற்றும் பன்னிருவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதே அந்த வழக்கின் கதி என்னாயிற்று?
மதுரையைச் சேர்ந்த செரினா அவர்தம் தாயார் ரெஜினாவை கஞ்சா கடத்தியதாகக் கைது செய்து சிறையில் அடைக்கவில்லையா? (10.6.2003)
செரினாவின் வீட்டை சோதனை செய்தபோது 30 கிலோ கஞ்சாவும், ஒரு கோடியே 40 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பணமும், 7.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரும் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டதே - கடைசியில் அந்த வழக்கில் தமிழக அரசு மூக்கறுபட்டது தானே மிச்சம்.
மற்றதை விட்டுத் தள்ளுங்கள்! திண்டிவனம் அருகே தமிழக ஆளுநர் சென்னா ரெட்டியே அச்சுறுத்தப்பட வில்லையா? அதன் பின்னணியில் அரசே இல்லையா?
இந்தியத் தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் சென்னை விமான நிலையத்திலும் ,அவர் தங்கியிருந்த விடுதியிலும் தாக்குதல் தொடுக்கப் பட்டது எந்த ஆட்சியில்?
மத்திய அமைச்சராகவிருந்த ப. சிதம்பரம் காரை மறித்து தாக்கப் படவில்லையா?
முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி யான பெண் ஒருவரின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டது, யார் முதல்வராக இருந்த போது?
வழக்கறிஞர் விஜயன், முன்னாள் துணைவேந்தர் மு. ஆனந்த கிருஷ் ணன், வழக்கறிஞர் சண்முகசுந்தரம், என்.ஜி.ஜி.ஓ. சங்கத் தலைவர்கள் சிவ. இளங்கோ, சு.அறிவுக்கரசு போன்ற வர்கள் வீடு புகுந்து தாக்கப்பட வில்லையா? இது எந்த ஆட்சியில்? இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார்?
கோவை வேளாண் பல்கலைக் கழக மாணவிகள் மூன்று பேர்களை பேருந் திலேயே வைத்துக் கொளுத்தியவர்கள் யார்? ஆளும் அ.இ.அ.தி.மு.க.வினர் அல்லவா? அந்த வழக்கு ஒழுங்காக அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடத்தப் பட்டதா? இப்பொழுதுதானே அவர் களுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
பத்திரிக்கைகாரர்கள் ஜெய லலிதா அம்மையார் காலத்தில் பட்டபாடு கொஞ்சமா - நஞ்சமா?
ஃ சன் டி.வி. செய்தியாளர் விழுப் புரத்தில் கைது
ஃ 29.6.2001இல் 300-க்கும் மேற் பட்ட பத்திரிகையாளர்களை கைது செய்து வேப்பேரி காவல் நிலையத்தில் அடைக்கப்படவில்லையா?
ஃ 12.8.2001 அன்று சென்னை டாக்டர் ராதாகிருட்டிணன் சாலை விளக்குகளையெல்லாம் அணைத்து விட்டு பத்திரிகையாளர்களை கண் மூடித்தனமாகத் தாக்கினர். நக்கீரன் செய்தியாளர் பிரகாஷ், இந்து ஒளிப்படக்காரர் மூர்த்தி, தினமணி ஒளிப்படக்காரர் ராஜி, ஜீ டி.வி. ஒளிப்படக்காரர் மணீஷ், ஆஜ்தக் செய்தியாளர் ஜெயசிறீ போன்றோர் தாக்கப்பட்டு, அவர்களது புகைப்படக் கருவிகள், வீடியோ சாதனங்கள் பறிக்கப்படவில்லையா?
ஃ ஜெவுக்கு எதிராக எழுதியதற் காக இந்து பதிப்பாசிரியர், சிறப்புச் செய்தியாளர் இராதா வெங்கடேசன், கட்டுரை ஆசிரியர் வி. ஜெயந்த் ஆகி யோர்களுக்கு 7 நாள்கள் சிறைத் தண்டனை.
ஃ இந்து பத்திரிகை செய்தியை தமிழில் வெளியிட்டதற்காக முரசொலி ஆசிரியர் செல்வத்திற்கு 7 நாள்கள் சிறைத் தண்டனை வழங்கவேண்டு மென்று சட்டசபையில் தீர்மானம்.
ஃ சந்தன வீரப்பன் சம்பந்த மான பழைய வழக்குகளை மீண்டும் கிளறி, நக்கீரன் கோபால் பெயரை புதிதாகச் சேர்த்து, இரவு நேரத்தில் பொடா சட்டத்தில் கைது செய்து சென்னை, திருச்சி, சேலம், கோவை என பல சிறைகளுக்கு அலைக் கழித்துக் கொடுமைப்படுத்தப்பட வில்லையா?
ஃ இந்து ஏட்டின்மீது 17 வழக் குகள்; முரசொலி ஏட்டின்மீது 6 வழக்குகள்.
ஃ நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினகரன், இந்தியா டுடே, ஸ்டேட்ஸ்மென், தி வீக், டெலிகிராப், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, அவுட்லுக் போன்றவை மீது நடவடிக்கை.
130-க்கும் மேற்பட்ட வழக்குகள் பத்திரிகையாளர்கள்மீது தொடரப் பட்டனவே - இதற்கு என்ன பதில்?
(இவ்வளவு கொடுமைகளுக்கும் ஆளான பத்திரிகைகளில் சில இன்று ஜெ.மீது கரிசனம் காட்டு கின்றன. காரணம், ரத்தம் தண் ணீரை விட கெட்டியானது.)
இவ்வளவு பொய் வழக்குகளை யும், வன்முறைகளையும் ஓர் அரசே முன்னின்று செய்துவிட்டு, இப் பொழுது தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விட்டது என்று சொல்லும் தகுதி ஜெய லலிதாவுக்கோ, அவருக்குத் தாளம் போடும் துக்ளக் கும்பலுக்கோ உண்டா? உண்டா?
மக்கள் மறதிக்குப் பெயர் போனவர்கள் என்ற மமதையில், புழுதிவாரித் தூற்றுவோருக்கு ஏப்ரல் 13-இல் பாடம் புகட்டுவீர்! பாடம் புகட்டுவீர்!!

No comments:
Post a Comment