Friday, April 8, 2011

வன்முறையைத் தூண்டும் பார்ப்பனர் சங்கம்

வன்முறையைத் தூண்டும் பார்ப்பனர் சங்கம்


பூணூலை உருவிக் கொண்டு ஒரு சிறு கூட்டம் புறப்பட்டு இருக்கிறது என்று முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் கூறி விட்டாராம். உடனே பார்ப்பன சங்கம் பூணூலை உருவிக் கொண்டு புறப்பட்டு விட்டது. நாகர்கோயிலில் செய்தியாளர்களிடம் பேசிய பார்ப்பன சங்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் திருவாளர் சங்கர நாராயண அய்யர் என்ற பார்ப்பனர் பின்வருமாறு கூறியுள்ளார்:

தமிழக முதல்வர் கருணாநிதி வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் பிராமணர்களின் தெய்வீகத் தன்மை வாய்ந்த பூணூலைப்பற்றி அவதூறாக பேசியுள்ளார். இப்பேச்சானது எங்கள் சமுதாயத்தை இழிவுபடுத்தும் செயலாகக் கருத வேண்டியுள்ளது. ஒவ்வொரு அந்தணருக்கும் பூணூல் தன்மானத்தைக் காக்கும் அடையாள சின்னமாகும். இதை அவமதிப்பதை தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும் தேர்தல் ஆணையத்திடம் இதுகுறித்து புகார் மனு அளிக்கப்படும். எங்களைப் பற்றி அவதூறு பேசுவதை நிறுத்திக் கொண்டு தேர்தல் பணியை மட்டும் கருணாநிதி பார்த்துக் கொள்ளட்டும். இல்லையென்றால் எங்கள் சமுதாய வீர இளைஞன் வாஞ்சிநாதன் எடுத்த புரட்சிகரமான முடிவை எடுக்கத் தயங்க மாட்டோம்.

மேலும் இத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும், அவர்களுக்கு எதிராக வாக்களிப்பது என்றும், நமது சமுதாய வாக்குகளை அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

(தினமலர் - நெல்லைப் பதிப்பு 5.4.2011)

மானமிகு கலைஞர் அவர்கள் தவறாக எதையும் கூறிடவில்லை. ஓர் உண்மையைத்தான் கூறியுள்ளார். பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பனர்களும் திட்டமிட்ட வகையில் தி.மு.க.வுக்கு எதிராகப் பொய்ப் பிரச்சாரம் செய்வதைக் கருத்தில் கொண்டு, ஒரு சிறு கூட்டம் பூணூலை உருவிக் கொண்டு புறப்பட்டுள்ளது என்று தான் கூறினார்.

இதில் என்ன தவறினைப் பார்ப்பன சங்கப் பிரமுகர் கண்டு விட்டார் என்று தெரியவில்லை. நியாயமாகப் பூணூல் அணிந்து வருபவர்களை - எதிர்த்து பார்ப்பனர் அல்லாதார் கோபம் கொள்ள வேண்டும். பிராமணர் என்பதற்கு அடையாளம் பூணூல் என்றாகி, அதனை அணிய உரிமையில்லாதவர்களைச் சூத்திரர்களாகக் கூறுவதாகத்தான் பொருள்.

தமிழர்களை இந்த வகையில் அவமானப்படுத்தும் பார்ப்பனர்கள் அடுத்த வகையில் தமிழினத்தின் தனிப்பெரும் தலைவராக இருக்கக்கூடிய மானமிகு கலைஞர் அவர்களை ஆஷ்துரையை வாஞ்சிநாதன் என்னும் பார்ப்பனன் தீர்த்துக் காட்டியதுபோல தீர்த்துக் கட்ட இருப்பதாகத் தெரிவித்திருப்பது தமிழ் மண்ணை கலவரப் பூமியாக்கும் திட்டமாகும்.

இந்தப் பார்ப்பனர்மீது தேர்தல் ஆணையமோ, காவல்துறையோ தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அமைதித் தென்றல் தவழும் தமிழ்ப் பூமியை வன்முறை தாண்டவமாடும் கலவரப் பூமியாக மாற்றிடத் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.

சனாதன தர்மத்துக்கு விரோதமாக நடந்து கொண்டார் என்பதற்காக ஆஷ்துரையை வாஞ்சிநாதன் என்ற பார்ப்பான் திட்டமிட்ட முறையில் இரயிலுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டு தன்னையும் சுட்டுக் கொண்டு விட்டான். சனாதன தருமத்திற்கு எதிரான சமதர்மத்தை கலைஞர் அவர்கள் பிரச்சாரம் செய்வதால், பார்ப்பனர்கள் வாஞ்சிநாதனாக மாறுவார்களேயானால், அதன் விளைவு கடும் விலையைக் கொடுப்பதாகவே ஆகும்.

இதற்கு முன்பேகூட சென்னை அண்ணா நகரில் பார்ப்பனர்கள் நடத்திய மாநாட்டு மேடையில் சில பார்ப்பனர்கள் அரிவாளைத் தூக்கிக் காட்டிக் கொக்கரித்தனர்.

தந்தை பெரியார் பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தை நடத்தி வந்திருந்தாலும், எந்த நிலையிலும் வன்முறைக்கு இடம் கொடுக்கவில்லை. அதனை அவர் விரும்புவதும் இல்லை.

காந்தியார் நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரால் சுட்டுக் கொல்லப்பட்ட போது மும்பையில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர். ஆனால் தமிழ்நாட்டில் அந்த நிலை ஏற்படாமல் தடுத்தவர் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் மட்டும் கொஞ்சம் ஜாடை காட்டியிருந்தால் தமிழ்நாடே தீப்பற்றி எரிந்திருக்காதா?

மக்களுக்கு வழி காட்டும் பொறுப்பு வாய்ந்த தலைவ ராகத் தந்தை பெரியார் திகழ்ந்ததால் வன்முறையைத் தவிர்த்து அமைதிக்கு உத்தரவாதத்தை ஏற்படுத்தினார்.

ஆனால் பார்ப்பனர்களுக்கு வழிகாட்டும் தலைவர்கள் யாரும் இன்றி, தான் தோன்றித்தனமாக வம்பை விலைக்கு வாங்குகிறார்கள். முளையிலேயே இதனைக் கிள்ளி எறியவில்லையானால் விபரீதத்திற்கு வழி வகுக்கக் கூடும் என்று எச்சரிக்கிறோம்.

வன்முறையைத் தூண்டியுள்ள பார்ப்பனர் சங்கத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்டவர்மீது சட்டப்படியான நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை, காவல்துறையை வலியுறுத்துகிறோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...