Sunday, March 8, 2020

ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு

கரோனா வைரஸ் எதிரொலி

உலக பொருளாதாரத்தில் ரூ.25 லட்சம் கோடி

இழப்பு ஏற்படும்


 கரோனா வைரஸ் காரணமாக, உலக பொருளாதாரத்தில் ரூ.25 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. ஆசிய நாடுகளுக்கு பல்வேறு கடன் உதவிகளை அளித்து வருகிறது. கரோனா வைரசை கட்டுப்படுத்த ஆசிய நாடுகளுக்கு கடந்த மாதம் ரூ.29 கோடி நிதி உதவி அறிவித்தது.
இதற்கிடையே, கரோனா வைரசால் ஆசிய பொருளாதாரம் மற்றும் உலக பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து ஆசிய வளர்ச்சி வங்கி ஆய்வு நடத்தியது.
அதன் முடிவுகள் குறித்து ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பொருளாதார இழப்பு என்பது, இந்த வைரஸ் எப்படி உருவெடுக்கிறது என்பதை பொறுத்து அமையும். அது இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது.
வளர்ந்து வரும் ஆசிய பொருளாதாரத்துக்கு பல்வேறு வழிகளில் இழப்பு ஏற்படும். உதாரணமாக, உள்நாட்டு தேவை வீழ்ச்சி, சுற்றுலா வருமான வீழ்ச்சி, குறைவான வர்த்தக பயணம், வினியோகத்தில் தடங்கல், உடல்நல பாதிப்பு என்ற வகையில் பாதிப்புகள் ஏற்படலாம்.
உலக பொருளாதாரத்துக்கு ரூ.5 லட்சத்து 54 ஆயிரம் கோடி முதல் ரூ.24 லட்சத்து 98 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படலாம் என்று கணித்துள்ளோம்.
இது, உலக உள்நாட்டு மொத்த உற்பத்தி யில் 0.1 முதல் 0.4 சதவீதம் ஆகும்.
சீன பொருளாதாரத்துக்கு ரூ.7 லட்சத்து 41 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படலாம். இதர வளரும் ஆசிய நாடுகளுக்கு ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படக்கூடும்.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த பிரச்சினையில் வளரும் ஆசிய நாடுகளுக்கு மேலும் உதவ தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...