Wednesday, March 4, 2020

நாடுமுழுவதும் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை!

'இந்தியாவில், பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டு உள்ள மந்தநிலை காரணமாக, நாடு முழுவதும், வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளது' என, பொருளாதார கண்காணிப்பு மய்யம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில், பொருளாதார மந்தநிலை காரண மாக, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. இது குறித்து, இந்திய பொருளாதார கண்காணிப்பு மய்யம், நேற்று முன்தினம் (2.3.2020) வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய பொருளாதார வளர்ச்சி, கடந்த, ஆறு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டின், கடைசி மூன்று மாதங்களில் மிக மந்தமாகவே இருந்தது.உலக அளவிலான, 'கரோனா' வைரஸ் தாக்குதல், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை பாதித்துள்ளது. இதில், மேலும் சரிவு ஏற்படலாம்.பொருளாதார மந்தநிலை காரணமாக, வேலை வாய்ப்பின்மையும் அதிகரித்து வருகிறது. இதன்படி, நாடு தழுவிய அளவில், வேலை வாய்ப்பின்மை, பிப்ரவரியில், 7.78 சதவீதமாக இருந்தது. ஜனவரி மாதம் இது, 7.16 சதவீதமாக காணப்பட்டது. கிராமப் பகுதிகளில் வேலை வாய்ப்பின்மை ஜனவரியில், 5.97 சதவீதமாக இருந்தது. இது, பிப்ரவரியில், 7.37 சதவீத மாக உயர்ந்து உள்ளது. ஆனால், நகர் பகுதிகளில், ஜனவரி மாதம், 9.7 சதவீதமாக இருந்த வேலை வாய்ப் பின்மை, கடந்த மாதம், 8.65 சதவீதமாக குறைந்துள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...