தற்போது குடும்பத்துடன் வந்து சென்ற
அமெரிக்க அதி பர் டிரம்ப் க்கு இந்தியாவில் கோலாகல வரவேற்பு அளிக்
கப்பட்டது. இதற்காக குஜராத் அரசு சார்பில் ரூ.100 கோடி செலவு
செய்யப்பட்டுள்ளது. டிரம்ப் வருகைக்கு இத்தனை ஆடம்பர செலவுகள் செய்வ
தற்காக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. டிரம்ப்புக்கு
குடியரசுத் தலை வர் மாளிகையில் அளிக்கப் பட்ட விருந்தை காங்கிரஸ் கட்சி
புறக்கணித்தது.
அமெரிக்க அதிபரின் தனது இந்தியா வருகையின்
போது எவ்வித பொருளாதார ஒப்பந்தமும் கையெழுத்தா காது என அரசு தெரிவித்தி
ருந்தது. இரு நாட்டுத் தலை வர்களும் அரசாங்க ரீதியான பேச்சு
வார்த்தையில் மட் டுமே ஈடுபடுவார்கள் என கூறப்பட்டது. கடந்த ஆண்டு
அமெரிக்கா இந்தியாவை விருப்பமான வர்த்தக நாடு கள் பட்டியலில் இருந்து
நீக்கி வளர்ந்த நாடு என அறிவித் தது.
இது குறித்து எவ்வித கலந்துரையாடலும்
நடந்த தாகத் தெரியவில்லை. அமெ ரிக்க அதிபர் டிரம்ப் தான் செல்லும்
நாடுகளுடன் பாது காப்பு ஒப்பந்தங்கள் செய்து கொள்வதை வழக்கமாகக்
கொண்டுள்ளார். அந்த வகை யில் தற்போது இந்திய வருகை யின் போதும் பாதுகாப்பு
உபகரணங்கள் விற்க ஒப்பந் தம் இட்டுள்ளார்.
இதற்கு அமெரிக்கக் குடிய ரசுக் கட்சியின்
தலைவர்களில் ஒருவரும் அதிபர் வேட்பாள ருமான பென்னி சாண்டர்ஸ், கடும்
எதிர்ப்பு தெரிவித்துள் ளார். இந்தியாவுக்கு வந்த டிரம்ப் பருவ நிலை
மாற்றம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து ஒப்பந்தங்கள் ஏதும் செய்யாமல்
ஆயுத விற்பனை ஒப்பந்தம் செய்திருப்பதற்கு அவர் கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment