Tuesday, March 3, 2020

குஜராத் கலவரத்தின் மாதிரிக் களமா டில்லி?

டில்லியின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட பெரும் கலவரத்தில் வன்முறையாளர்கள் ஷிவ் விஹாரில் உள்ள பள்ளியையும் முழுமையாகச் சேதப்படுத்தியுள்ளனர். அங்கிருந்த மேஜை, நாற்காலிகள் மற்றும் புத்தகங்களை தீ வைத்து எரித்துள்ளனர். மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு அங்கிருந்த படியே அந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக ஷிவ் விஹாரில் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் டிஆர்பி கான்வென்ட் பள்ளியின் நிர்வாகத் தலைவர் தர்மேஷ் சர்மா கூறும்போது, "திங்கட்கிழமையன்று, வன்முறையாளர்கள் அருகில் உள்ள கட்டடத்திலிருந்து கயிறுகளைக் கட்டி பள்ளி வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். தொடர்ந்து, பள்ளியிலிருந்த கரும்பலகை, மேஜை, நாற்காலிகள், நூலகங்கள் என அனைத்திற்கும் தீ வைத்து எரித்துள்ளனர்.
இந்த தாக்குதல் நடப்பதற்கு முன்பாக மாணவர்கள் தங்கள் தேர்வுகளை முடித்துவிட்டு பள்ளியிலிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர். தொடர்ந்து, 24 மணி நேரமாகப் பள்ளி தீப்பற்றி எரிந்துள்ளது.  தீயணைப்பு வாகனங்கள் எதுவும் வரவில்லை.  மேலும், தீயணைப்புப் படையினரையும் வரவிடாமல் தடுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 3 நாட்களுக்குப் பின்பே காவல்துறையினரால் இங்கு வர முடிந்தது" என்று தெரிவித்துள்ளார்.
இந்த டிஆர்பி கான்வென்ட் பள்ளிக்கு அருகில் உள்ள ராஜ்தானி பள்ளியில் தான் முதலில் தாக்குதல் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த தாக்குதல் குறித்து, பள்ளியிலிருந்த பணியாளர்கள் இரண்டு பேர் கூறும்போது, பள்ளி வளாகத்திலே தாங்கள் அடைத்து வைக்கப்பட்டதாகவும், 2 நாட்களுக்குப் பின்னர் புதன்கிழமையன்றுதான் காவல்துறையினர் அவர்களை மீட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அவர்கள் அந்தப் பள்ளியில் பாதுகாவலராகப் பணிபுரியும் மனோஜூம், ராஜ்குமாரும் ஆவார்கள். இதில் ராஜ்குமார் குடும்பத்துடன் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.  "அவர்கள் எங்களைக் கடுமையாகத் தாக்கினர், குழந்தைகளையும் அடிக்க முற்பட்டனர். நாங்கள் சாப்பிடுவதற்கு எதையும் விட்டு வைக்காமல்  அனைத்தையும் எடுத்துச் சென்று விட்டனர்" என்று கண்ணீருடன் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
இதுதொடர்பாக பள்ளியின் உரிமையாளர் ராஜ்தானி என்டிடிவியிடம் கூறும்போது, "திங்கட்கிழமையன்று பள்ளி கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளியிலிருந்த அனைத்தையும் அவர்கள் அடித்து நொறுக்கியதுடன், தீவைத்து எரித்தும் உள்ளனர். நாங்கள் காவல்துறைக்குத் தொடர்ந்து தகவல் தெரிவித்தும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை" என்றார்.  டில்லியின் வடகிழக்குப்  பகுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதல்  சம்பவம் அடுத்தடுத்து வளர்ந்து, பெரும் வன்முறையாக வெடித்தது. இதில் வன்முறையாளர்களால்  வாகனங்கள், கடைகள், கட்டடங்கள் தீ வைத்துச் சேதப்படுத்தப்பட்டன. கடந்த 7 நாட்களில் மட்டும் கலவரம் காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
டில்லியின் வடகிழக்குப் பகுதியில் வெவ்வேறு இடங்களில் உள்ள 3 பள்ளிகள் வன்முறையாளர்களால் குறி வைக்கப்பட்டுள்ளன. பிரிஜூபுரியில் உள்ள 3000 மாணவர்கள் படிக்கும் மேல்நிலைப் பள்ளியிலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வன்முறையாளர்கள் சூழ்ந்து தீ வைத்துள்ளனர். நல்ல வாய்ப்பாக பள்ளியில் தேர்வு நடந்ததால் மாணவர்கள் தேர்வை முடித்து முன்னதாக கிளம்பிச் சென்றுவிட்டனர்.
பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் ஒரு பட்டப் பகலில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராசரை உயிருடன் கொளுத்திட எத்தகைய கலவரங்களில், (விசுவ ஹிந்து பரிஷத்துக்காரர்கள், ஜனசங்கத்தினர், நிர்வாண சாமியார்கள், சங்கராச்சாரியார்களும்கூட) எத்தகைய வன்முறைகளில் ஈடுபட்டார்கள் என்பதை நாடறியும்!
அதே கூட்டம் இப்பொழுது வன்முறையைக் கையில் எடுத்துக் கொண்டு 'சூரசம்ஹாரம்' வெறியில் இறங்கியுள்ளது.
குஜராத்தில் மோடி ஆட்சியில் முன்பு என்ன நடந்தது?
டில்லியின் பாதுகாப்பு மத்திய உள்துறையிடம் உள்ளது. இதற்குப் பொறுப்பு அமைச்சர் அமித்ஷாதான். குஜராத் கலவரத்தின் போதும் இவர்தான் அம்மாநில உள்துறை அமைச்சர் என்பதை நினைவுபடுத்துகிறோம்.
நாட்டின் அமைதிக்குப் பொறுப்புள்ள தலைவர்கள் குரல் கொடுக்கட்டும்; கலவரத்துக்குக் காரணமானவர்கள் தண்டிக் கப்பட வேண்டும்; உடனடியாக குடியுரிமை தொடர்பான மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும்; செய்யுமா மத்திய அரசு?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...