திருவொற்றியூர், குடியாத்தம் சட்டசபை தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்
காத்தவராயன் (குடியாத்தம்), கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்) ஆகியோர்
உடல்நலக்குறைவால் கடந்த வாரம் இறந்தனர். இதனையொட்டி தமிழக சட்டசபை செய
லாளர் சீனிவாசன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுக்கு 2 சட்டசபை
உறுப்பி னர்களும் மறைந்ததால் அந்த தொகுதிகளை காலியாக அறிவிக்க வேண்டும்
என்று தகவல் தெரிவித்து இருந்தார்.
அதன்படி சத்யபிரத சாகு, டில்லியில் உள்ள
தலைமை தேர்தல் அதிகாரிக்கு 2 தொகுதிகளும் காலியாக இருப்பதாக தெரிவித்து
அறிக்கை அளித்து உள்ளார்.
இதுகுறித்து தலைமை தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழக சட்டசபை செயலாளரிடம் இருந்து வந்த
தகவலின் பேரில் குடியாத்தம் மற்றும் திருவொற்றியூர் தொகுதிகள் காலியாக
இருப்பது தெரியவந்து உள்ளது. அதன்படி இந்த 2 தொகுதிகளையும் முறையாக காலி
யானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து முறையான தகவலும் இந்திய
தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தப்பட்டு உள் ளது.
தொகுதி காலி என அறிவிப்பு வெளியாகி 6
மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால்
அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடக்கவிருப்பதால், இந்த 2 தொகுதிகளிலும்
இடைத்தேர்தல் நடத்தப்படுமா? அல்லது நேரடியாக பொதுத்தேர்தல்தான்
நடத்தப்படுமா? என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்து
அறிவிப்பு வெளியிடும்.
தமிழகத்தில் வரும் மே-24-க்கு பிறகு தொகு
திகள் காலியானால் அங்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை. காரணம் வெற்றி
பெற்று பதவி ஏற்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் குறைந்தபட்சம் ஒரு ஆண்டுகளாவது
பதவியில் இருக்க வேண்டும்.
ஆனால் அடுத்த ஆண்டு தேர்தல்
நடக்கவிருப்பதால் தற்போது வரும் மே 24-க்கு பிறகு எந்த தொகுதியிலும்
இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
No comments:
Post a Comment