இஸ்ரேல் நாட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல்
மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ் சமின் நேட்டன்யாஹூவின்
ஆளும் லிகுயிட் கட்சியும், எதிர்க்கட்சியான பென்னி காண்ட்ஸின் புளூ அண்ட்
ஒயிட் கட்சியும் தலா 35 இடங்களில் வெற்றி பெற்றன.
120 இடங்களை கொண்ட நாடாளு மன்றத்தில் எந்த கட்சிக்கும் பெரும் பான்மை கிடைக்கவில்லை.
இதையடுத்து செப்டம்பரில் மறுதேர் தல்
நடந்தது. இந்த தேர்தலில் பென்னி காண்ட்ஸின் புளூ அண்ட் ஒயிட் கட்சி 33
இடங்களையும், பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிகுயிட் கட்சி 32
இடங்களையும் வென்றன. இதிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை.
எதிர்க்கட்சியான புளூ அண்ட் ஒயிட் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும்
முயற்சியில் பெஞ்சமின் நேட்டன்யாஹூ ஈடுபட்டும், அதில் வெற்றி
கிடைக்கவில்லை.
இதன் காரணமாக ஓராண்டுக்குள் மூன்றாவது
முறையாக அங்கு மார்ச் மாதம் 2ஆம் தேதி நாடாளுமன்றத்துக்கு தேர் தல்
நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் கொரோனா வைரஸ்
பீதிகளுக்கு நடுவி லும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந் தது. 71 சதவீத
ஓட்டுகள் பதிவாகின. இது முந்தைய இரு தேர்தல்களைக் காட்டி லும் அதிகம்
ஆகும்.ஓட்டுப்பதிவு முடிந்த உடனேயே தேர்தலுக்கு பிந்தைய கருத் துக்கணிப்பு
முடிவுகள் வெளிவந்தன. இதில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன் யாஹூ தலைமையிலான
லிகுயிட் கட்சி கூட்டணிக்கு 60 இடங்கள் கிடைக்கும் என தெரியவந்தது.
ஏனெனில் 120 இடங்களை கொண்ட
நாடாளுமன்றத்தில் 61 இடங்கள் கிடைத்தால் தனிப்பெரும்பான்மை பலம் கிடைத்து
விடும். எனவே தனிப் பெரும்பான்மைக்கு ஒரு இடம் மட்டுமே குறைவாக கிடைக்கும்
என்ற நிலையில் அவர் எளிதாக ஆட்சி அமைத்து விடலாம்.
ஓட்டுப்பதிவு முடிந்த உடனேயே ஓட்டு
எண்ணிக்கை தொடங்கி நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள், பெஞ்சமின்
நேட்டன்யாஹூவின் லிகுயிட் கட்சிக்கு ஆதரவாக அமைந்துள்ளன.
நேற்று 91 சதவீத ஓட்டுகள் எண் ணப்பட்ட
நிலையில் ஆளும் லிகுயிட் கட்சி 36 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்
கட்சியாக வந்தது. எதிர்க் கட்சியான புளூ அண்ட் ஒயிட் கட்சிக்கு 32 இடங்கள்
கிடைத்தன.
எனவே கூட்டணி கட்சிகளின் ஆதர வுடன்
பெஞ்சமின் நேட்டன்யாஹூ மீண்டும் பிரதமர் ஆவதில் சிக்கல்கள் இருக்காது என்று
இஸ்ரேலில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment