Sunday, March 8, 2020

2ஆம் நிலை காவலர் தேர்வை ரத்து செய்யக் கோரி வழக்கு

தமிழ்நாடு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் என 8,888 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பாணையை வெளியிட்டது.
அதன் படி பிப்ரவரி 2ஆம் தேதி, தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.  இதில், வேலூர் மாவட்டத்தில் 1019 பேர் விழுப்புரத்தில் 763 பேர் தேர்வானதாகவும், இவர்கள் அனைவரும் "சிகரம்" என்ற
பயிற்சி மய்யத்தில் படித்தவர்கள் எனவும், இவர்களில் பலர் முறைகேடு செய்து தேர்வானவர்கள் எனவும், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிட கோரி திருவண்ணாமலையை சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதன் மேல் முறையீடு வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத் ஆஜராகி, மனுதாரர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் தவறானது. இது தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என்றார். அதையடுத்து நீதிபதி,தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழக அரசு  மார்ச் 26க்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...