நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது
பதிலளித்த சமூகநலத்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே "கடந்த மாதம் (ஜனவரி 31)
வரை 48,345 பேர் கையால் கழிவகற்றும் பணியாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்"
என்று தகவல் அளித்தார்.
மனிதக் கழிவை மனிதனே அகற்றுதல் என்னும்
தொழில்முறை அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்ட ஒன்று. எனினும், முற்றிலுமாக
இந்தத் தொழில் முறை ஒழிந்தபாடில்லை. 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட
கணக்கெடுப்பின்படி சுமார் 1,80,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள்
வாழ்வாதாரத்துக்காகச் சார்ந்திருக்கும் தொழிலாக இந்தத் தொழில் இருக்கிறது
என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
மக்களவையில் எழுப்பப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய சமூக நலத்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அளித்த பதில்:
''2013-2014 முதல் 2020 ஜனவரி 31 வரை 13
மாநிலங்களில் நகராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் மொத்தம் 14,559
பேர் அடையாளம் காணப்பட்டனர். இது தவிர, 18 மாநிலங்களில் 194 மாவட்டங்களில்
ஒரு தேசியக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் கடந்த மாதம் (ஜனவரி 31 வரை)
48,345 பேர் கையால் கழிவகற்றும் பணியாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டனர்.
ஆக மொத்தம் கையால் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 62,904 ஆக இருந்தது.
சாக்கடை அகற்றும் பணிகளின்போது உயிரிழந்த
நபர்களின் மரணம் குறித்து முறையான எந்தத் தகவலும் வரவில்லை. ஆனால், இதற்கான
புள்ளிவிவரம் துப்புரவுப் பணியாளர் களுக்கான தேசிய ஆணையம் (National
Commission for Safai Karamcharis) மூலம் பெறப்பட்டுள்ளது
ஆணையக் குழுவின் அறிக்கைகளின்படி, கடந்த
ஒவ்வொரு ஆண்டும் பாதாளச் சாக்கடையில் 'மேன் ஹோல்' எனப்படும் ஆளிறங்கும்
சாக்கடைக்குழியிலோ அல்லது கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்
பணிகளில் விஷவாயு தாக்கியோ தொடர்ந்து மனித உயிரிழப்புகள் ஏற்பட்டுத்தான்
வருகின்றன.
2018-இல் 68, 2017-இல் 93, 2016-இல் 48,
2015-இல் 57 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அய்ந்து
ஆண்டுகளில் கடந்த 2019-இல் மட்டும் மிக அதிக எண்ணிக்கையில், 110
துப்புரவுப் பணியாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த உயிரிழப்புகள் 18 மாநிலங்கள் மற்றும்
யூனியன் பிரதேசங்களிலிருந்து பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் 13 மாநிலங்கள்
மற்றும் யூனியன் பிரதேசங்களில் அவ்வாறு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை
என்பதற்கான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அருணாச்சலப் பிரதேசம், அசாம், ஒடிசா,
ஜார்க்கண்ட், மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம், தாத்ரா மற்றும்
நகர் ஹவேலி, புதுச்சேரி, மேகாலயா, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள்
ஆகியனவற்றில் 2015 முதல் 2019 வரை ''உயிரிழப்புகள் இல்லை'' என்று அந்த
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுத்தமற்ற கழிப்பறைகளிலிருந்து வடிகாலில் வெளி யேற்றப் படும் கழிவுகளால்தான் இத்தகைய மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன
பெரும்பாலும் இவை 'ஸ்வச் பாரத்'
திட்டத்தால் முன்னெடுக்கப்பட்டு தற்போது அத்தகைய தூய்மையற்ற பொது
சுகாதாரத்திற்குக் கேடு விளைவிக்கக்கூடிய கழிப்பறைகள் சுகாதாரமான இடங்களாக
மாற்றப்படு கின்றன". இவ்வாறு அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பதிலளித்தார்.
நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள்
ஓடிவிட்டன. குடியரசாகி 70 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனாலும் மனிதன் மலத்தை
மனிதனே கையால் கையாளுவது எத்தகைய கேவலமான - 'ஆபாசமான' அருவருப்பான -
வேலையில் ஈடுபட மனிதன் நிர்பந்திக்கப்படுகிறான்!
அந்தத் தொழிலைச் செய்ய மனிதனுக்கு ஆசையா?
வயிற்றுப் பிழைப்புக்காகவேதான் செய்கிறான். இந்த நிலைக்குக் காரணம்
அரசாங்கம்தானே! நரேந்திர மோடி இத்தகைய தொழிலைச் செய்வது 'கர்மயோக்' -
'தெய்வப் பணி' என்று கூசாமல் சொன்னவர்தானே! எப்பொழுது? குஜராத் மாநில
முதலமைச்சராக இருந்தபோது! இப் பொழுது அவரே பிரதமர், என்னதான் நடக்காது?
No comments:
Post a Comment