ஆப்கானிஸ் தானின் உள்நாட்டு போரை
முடிவுக்கு கொண்டு வர அந்த நாட்டு அரசின் உத வியோடு தலிபான்களுடன்
அமெரிக்கா அமைதி பேச்சு வார்த்தையை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையின்
முடிவில் ஏற்பட்ட ஒப்பந் தத்தை தலிபான் தரப்பு ஏற் றுக்கொண்டது. அமெரிக்கா
வும் அந்த ஒப்பந்தத்தை ஏற்க தயாராக இருந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் நடந்த
பயங்கரவாத தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் பலியா கினர்.
இதனால் கோபம் அடைந்த டிரம்ப்,
தலிபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக கடந்த செப் டம்பர்
மாதம் அதிரடியாக அறிவித்தார். இதனால் அமெ ரிக்கா மற்றும் தலிபான்கள் இடையே
மீண்டும் மோதல் வலுத்தது. இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம்
ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணமாக சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்
தலிபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கி இருப்ப தாக
அறிவித்தார்.
அதன்படி கத்தார் தலை நகர் தோகாவில்
அமெரிக்க அதிகாரிகளுக்கும், தலிபான் பிரதிநிதிகளுக்கும் இடையே
பேச்சுவார்த்தை நடந்து வந் தது. இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க
முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், முதற்கட்டமாக ஆப்கானிஸ் தானில் 2 நாள்
சண்டை நிறுத்தத்தை கொண்டுவர இருதரப்புக்கும் இடையே ஒரு வாரத்துக்குள்
ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் தெரிவித்தன. ஆனால் ஒரு சில
அரசியல் காரணங்களால் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக
அமெரிக்கா அறிவித்தது.
இந்நிலையில், தலிபான் களுடனான அமைதி
ஒப்பந் தம் ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை விறுவிறுப்பு
அடைந்துள்ளதாகவும், ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா மற்றும் தலிபான்
பிரதிநிதிகள் நெருங்கி வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
தெரிவித்துள்ளார்.
‘தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட
நல்ல வாய்ப்பு உள்ளது என நான் நினைக்கிறேன். அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் 19
ஆண்டுகால போருக்கு பின்னர் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து
வெளியேறும். அடுத்த இரு வாரங்களில் இதுகுறித்த முடிவு தெரியும்’ என டிரம்ப்
தெரிவித்தார்.
No comments:
Post a Comment