வீட்டில் யாரும் குடியேறவில்லை என்றால் பேய் புகுந்துவிடுமாம்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370-ஆவது
பிரிவு என்பது பேய் போன்றது, அதை நீக்கியதால் அங்கு தீயசக்திகள் வெளி யேறி
விட்டது என்று உடுக்கை அடி சாமியார் போல் கேரள ஆளுநர் குறிசொல்கிறார்.
‘இந்திய மாணவர் நாடா ளுமன்றம்’ என்ற
நிகழ்ச்சி டில்லியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கேரள ஆளுநர்
ஆரிஃப் முக மது கான் பங்கேற்று பேசி னார். அப்போது, வீட்டில் யாரும்
வசிக்காமல் காலியாக இருந்தால், அங்கு தீய சக் திகள் குடியேறும்.
அதுபோலவே, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம்
நுழைந்துவிட்டது. தற் போது, அங்கு அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு
ரத்து செய்யப்பட்டுவிட்ட தால் மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்குத்
திரும்பி வருகிறது, அரசமைப்புச் சட் டத்தின் 370-ஆவது பிரிவு குறித்து
முறையாகத் தெரிந்து கொண்டால், அதை ரத்து செய்தது சரியே என்பது புரியும்.
என்று மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக பேசினார்.
தொடர்ந்து, ஷாஹீன் பாக் பகுதியில்
நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் குறித்தும் தனது கருத்தை பதிவு செய்தார்.
அப்போது, நாட்டில் மாறுபட்ட கருத் தைக் கொண்டிருப்பதுதான்
மக்களாட்சியின் அடிப் படை, இதில் எந்தவிதப் பிரச் சினையுமில்லை. ஆனால்,
குறிப்பிட்ட விவகாரம் தொடர் பாக, ‘நாங்கள் விரும்பும் வகையில் தீர்மானம்
நிறை வேற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் தங்கள் கருத்தை பிறர் மீது
திணிப் பதற்காக, சாலை மறியலில் ஈடுபட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது
முறையானது அல்ல... இதுவும் பயங்கர வாதத்தின் மற்றொரு வடி வம்தான் என்று
தெரிவித் தார்.
தொடர்ந்து பேசியவர்...சில அமைப்புகள்
தேவையில்லாமல் மக்களைக் குழப்பி வருகின்றன அதுபோன்று ஒருபோதும் செய்ய வேண்
டாம் என வலியுறுத்தியவர.. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் உங்களுடைய கருத்
துகளை மற்றவர்கள் மீது திணிக்க முற்பட வேண்டாம்.
நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர்
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சாலைமறியல் உள்பட பல்வேறுவகையான
போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் டில்லியில் நடைபெற்ற
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான்,
தங்கள் கருத்தை பிறர் மீது திணிப் பதற்காக, சாலை மறி யலில் ஈடுபட்டு மக்
களுக்கு பாதிப்பு ஏற்படுத்து வதும் பயங்கர வாதத்தின் மற்றொரு வடிவம் தான்
என்று கூறி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment