மத வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்படும்
நன்கொடைகள், சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளுக்கு
பயன்படுத்தப்படுமானால், அதை கட்டுப்படுத்தும் அதிகாரம் சட்டத்துக்கு
உள்ளது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சபரிமலை வழக்கை விசாரித்து வரும்,
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான 9 நீதி பதிகளைக்
கொண்ட அரசியல் சாசன அமாவில் நேற்றைய விசாரணையின்போது, ஆஜரான மத்திய
அரசின் சொலி சிட்டா ஜெனரல் துஷார் மேத்தா, அரச மைப்புச் சட்டத்தின் 25
மற்றும் 26-ஆவது பிரிவுகளின்படி, அனைவருக்கும் மதச் சுதந்திரம்
அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த சுதந்திரம் பொது அமைதி, நெறிமுறைகள்,
சுகாதாரம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும். அதாவது, ஒரு
மதத்தில் பின்பற்றப்படும் வழிபாட்டு முறைகள், சடங்குகள், விழாக்கள்
மற்றும், ஒரு மதத்தில் பின்பற்றப்படும் குறிப்பிட்ட சடங்கு முக்கியமானதா?
இல்லையா? என்று முடிவு செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,
கோயில்களும் உள்பட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக் கும் நன்கொடை
அளிப்பது, அந்தந்த மதங்களின் சடங்கின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால்,
அந்த நன்கொடைகள் தவறாகப் பயன்படுத்தப்படுமானால், அதை சட்டத்தால்
முறைப்படுத்த முடியும், அரசுக்கும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உண்டு
என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment