Thursday, February 13, 2020

காற்றிலிருந்து நீர் அறுவடை!


சுற்றுச்சூழலிலிருந்து நீரை ஈர்த்து, சேர்த்து தரும் தொழில்நுட்பம் புதிதல்ல. என்றாலும், அதில், புதிய சாதனையை படைத்துள்ளனர், அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் இயற்பியல் அறிவியல் கூடத்தின் விஞ்ஞானிகள்.
பாலைவனக் காற்றில் கூட மிகச் சிறு திவலைகளாக நீர் இருக்கும். இந்த நீரை சேகரிக்க உலோகக் கரிம சட்டகத்தை -மெட் டல் ஆர்கானிக் பிரேம்வொர்க் உருவாக்கி வைத்துவிட்டால், அந்த சட்டகத்தில் சேரும் தண்ணீர், புவியீர்ப்பு விசையால், அடிப் பகுதிக்கு வந்து கலனில் தேங்கிவிடும்.
இப்படி சேகரிக்கும் சட்டகத்தில் பயன்படுத்தப்படும் உலோகத்தின் மூலக்கூறு அமைப்பு அதிக பரப்பளவு கொண்டதாக இருக்க வேண்டும். ஜான் ஹாப்கின்ஸ் கூடத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள உலோக சட்டகம் அதிமான நுண் பரப் பளவைக் கொண்டிருப்பதால், அந்த உலோ கத்தின், 1 கிலோ எடை கொண்ட சட்டகம், ஒரு நாளைக்கு, 8.66 லிட்டர் தண்ணீரை சேமித்து சாதனை புரிந்து உள்ளது.
இதற்கு முன்பு பெர்க்லி பல்கலைக் கழகத்தினர் உருவாக்கிய சட்டகம், கிலோ வுக்கு, 1.3 லிட்டர் அளவுக்கே தண்ணீரை காற்றிலிருந்து ஈர்த்து சேகரித்தது. ஆனால், ஜான் ஹாப்கின்ஸ் விஞ்ஞானிகள், வறட்சிப் பகுதிகளில், இதைவிட அதிக நீரை காற்றி லிருந்து அறுவடை செய்யும் உலோகங்களை தொடர்ந்து தேடப் போவதாக, 'சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ்' இதழில் தெரிவித்துள்ளனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...