Monday, February 10, 2020

கமாண்டர் பதவியில் பெண்களுக்கு வாய்ப்பு இல்லையா?

மத்திய அரசின் பிற்போக்கு சிந்தனைக்கு

பெண் இராணுவ அதிகாரிகள் கடும் கண்டன


விமானப் படை, கடற்படை ஆகியவற்றில் பெண்களுக்கு முழுமையான பணிச் சேவை வழங்குவது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வரு கிறது. இதன் ஒருபகுதியாக, இராணுவத்தில் பெண்களுக்கு ஏன் கமாண்டர் பதவி வழங்கக் கூடாது? என நீதிபதிகள் அண் மையில் கேள்வியெழுப்பியிருந் தனர்.
இதற்கு மத்திய அரசு சார்பில் கடந்த 4ஆ-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆண்களைவிட பெண்களுக்கு உடல் வலிமை குறைவு என்றும், இதனால் ஒரு படைக்கு தலைமை வகிக்கும் கமாண்டர் பதவியை பெண்களுக்கு வழங்குவது சிரமம்" என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதற்கு பதில ளிக்கும் விதமாக பெண் இரா ணுவ அதிகாரிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஓர் அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது. அதில் கூறப்பட்டுள்ள தாவது: இராணுவ கமாண்டர் பதவி களுக்கு பெண்கள் தகுதியற்ற வர்கள் என மத்திய அரசு எவ் வாறு கூறுகிறது? மத்திய அரசின் மனுவில் கூறப்பட்டுள்ள கார ணங்கள் அனைத்தும் தவறான புரிதலின் அடிப்படையில் எடுக் கப்பட்டிருக்கின்றன. மேலும், மத்திய அரசின் பிற்போக்கான சிந்தனையையே அவை வெளிப் படுத்துகின்றன.
அனுபவ ரீதியான மற்றும் புள்ளி விவரங்களின் அடிப்படை யில் எந்த தகவலையும் அரசு சேகரிக்கவில்லை. உதாரணமாக, விமானப் படையில் ஒரு படைப் பிரிவின் தலைவராக உள்ள பெண் அதிகாரி மின்ட்டி அகர் வாலின் சிறப்பான நடவடிக்கை களை பாராட்டி அவருக்கு அண்மையில் `யுத் சேவா' விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதனை மத்திய அரசு கவனத்தில் எடுத் துக் கொள்ளாதது ஏன்? என அந்த மனுவில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...