யாரும் அணுக இயலாத அய்பி முகவரிகள்
மற்றும் பாதுகாப்பான தனி இணைய இணைப்பு மற்றும் விரல் ரேகையுடன் கூடிய வெப்
கேமிரா ஆகியவற்றுடன் இணைத்து புதிய வாக்களிக்கும் இயந்திரத் தினை உருவாக்க
உள்ளதாக மூத்த துணைத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்
இந்திய தேர்தல் ஆணையமும், இந்திய தொழில்நுட்ப ஆய்வுக்கழகம்-சென்னையும் இணைந்து புதிய வாக்களிக்கும் இயந்திரத் தினை உருவாக்கி உள்ளன.
இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகப்
படுத்தப்பட்டால் வாக்காளர்கள் இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும்
தங்கள் வாக்கை பதிவு செய்யலாம்,
வாக்காளரை சரிபார்த்தபின்னர் மின்னணு
வாக்களிக்கும் தாள் ஒன்று உருவாக்கப்படு கிறது. வாக்களித்தபின்னர்
அளிக்கப்பட்ட வாக்கானது பாதுகாப்பாக மறைகுறிமுறை யாக்கப்பட்டு
மென்பொருள்(பிளாக்செயின்) சேமிக்கப்படுகிறது. சேமிக்கப்பட்ட பின்னர் அதன்
விபரம் வாக்கு சார்ந்த நபர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படுகிறது
அளித்த வாக்கினை சரி பார்க்கும்போது
ஓட்டு அந்த கணுவில் சரியாக சேமிப்பட்டுள் ளதா? சேதமடைந்துள்ளதா ?அல்லது
ஏதே னும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்றும் சோதித்தபிறகே வாக்கு
எண்ணிக்கையில் வரும்.
எங்கிருந்து வேண்டுமானாலும் ஓட்டளிக்
கலாம் என்பது வாக்காளர் வீட்டில் இருந்து கொண்டே வாக்களிக்கலாம் என்பதல்ல ,
எந்த வாக்குச்சாவடியிலும் வாக்களிக்கலாம் என்பதே என்று மூத்த தேர்தல் துணை
ஆணையாளர் சக்சேனா தெரிவித்தார்
நவீனங்கள் வரவேற்கவேண்டியது, கால
மாற்றத்திற்கு ஏற்றாற் போல் உலகம் மாறிக் கொண்டே இருக்கவேண்டும் ஆனால் இந்த
மாற்றத்தை ஆட்சியாளர்கள் தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.
குஜராத் மாநில சட்டபேரவைத் தேர்தலில் போது
வாக்காளர் களின் எண்ணிக்கையை விட பதிவு பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை
அதிகம் இருந்தது, அதாவது பாஜக உறுப்
பினர் வெற்றி பெறு வதற்கு ஏற்றாற் போல் வாக்கு எண்ணிக்கையை அதிகரித்து உள்ளனர்.
2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்
போதும் மின்னணு வாக்குப்பதிவு கருவிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையில்
பெரும் குழப்பம் நேர்ந்திருந்தது,
இது தொடர்பான வழக்குகள் பல நீதிமன்ற
நிலுவையில் உள்ளது, இந்த நிலையில் எங்கிருந்தும் வாக்களிக்கும் முறை என்ப
திலும் ஆட்சியாளர்கள் முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ளது.
ஒரு வேட்பாளர் தோல்வி அடையும் நிலை யில்
இருந் தால் வேறு ஒரு இடத்திலி ருந்து வாக்குகளை சேர்த்து தோல்வியில்
இருக்கும் வேட் பாளர்களை வெற்றிபெறச் செய்யும் முறைகேடான நிகழ்வுக்கு வழி
வகுத்துவிடும் என்று சமூக ஆர்வலர்கள் கூறு கின்றனர்.
No comments:
Post a Comment