Friday, February 21, 2020

முஸ்லிம்களின் கல்லறையிலா கோயிலை கட்ட போகிறீர்கள்?

உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் கடிதம்
‘பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தை சுற்றியுள்ள முஸ்லிம்களின் கல்லறை மீதா ராமர் கோயிலை கட்டப் போகிறீர்கள்?’ என ராமர் கோயில் அறக் கட்டளைக்கு உச்சநீதிமன்ற மூத்த வழக் குரைஞர் கடிதம் எழுதியுள் ளார்.
அயோத்தியில் சர்ச்சைக் குரியதாக இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது. மேலும், ராமர் கோயிலை கட்டுவதற்காக 3 மாதங்களுக்குள்  அறக்கட் டளை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கும்  உத்தரவிட்டது. அதன்படி, கோயில் கட்டுவதற்காக கடந்த 4 ஆம் தேதி 15 உறுப்பினர்களை கொண்ட ‘ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் பிரதமர் மோடி அறக்கட் டளை அமைத்துள்ளார்.
இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்களுக்கு உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரை ஞர் எம்.ஆர். ஷம்ஷாத் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 1885 ஆம் ஆண்டு அயோத்தியில் நடந்த வன் முறையின்போது 75 முஸ்லிம்கள் உயிரிழந்தனர்.
முஸ்லிம்களால் கன்ஜ் ஷாகிதான் என அழைக் கப்படும் இறந்தவர்களின் கல்லறைகள் அமைந்துள்ள மயானமானது,  இடிக்கப் பட்ட பாபர் மசூதியை சுற்றிதான் அமைந்துள்ளது. முஸ்லிம்களின் இடுகாட் டினை ராமர் கோயிலை கட்டுவதற்கு பயன்படுத்தக் கூடாது என்பது தொடர் பான  விவகாரத்தை மத்திய அரசு கருத்தில் கொள்ள வில்லை. இது தர்மத்தை மீறிய செயலாகும். சனாதன தர்மத்தை பார்க்கும்போது முஸ்லிம்களின் கல்லறை மீதான அடித்தளத்தை கொண்டு ராமர் கோயிலை கட்ட முடியுமா? என்பது குறித்து சிந்திக்க வேண்டும். இது அறக்கட்டளை நிர் வாகம் எடுக்க வேண்டிய ஒரு முடிவாகும். ராமர் மீது கொண்டுள்ள மரியாதை காரணமாக, இடிக்கப்பட்ட மசூதியை சுற்றியுள்ள முஸ்லிம்களின் கல்லறைகள் அமைந்துள்ள 4 முதல் 5 ஏக்கர் நிலத்தை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...