எந்தவொரு கோயி லுக்கும் சென்று வழிபாடு
செய்வதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர்
சரத்பவார் கூறினார்.
நாத்திகத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு
அரசியல் தலைவர்களையும் மதம் தொடர் பான நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம்
என்று சரத் பவாரை குறிப்பிட்டு ராஷ்ட்ரீய வாகாரி பரிசத் அமைப்பு அறிக்கை
வெளியிட்ட நிலை யில், சரத்பவார் இவ்வாறு கூறியுள்ளார். மகா ராட்டிர
மாநிலம், புனேவில் உள்ள வழிபாட்டுத் தலமான ஆலண்டியில் சனிக் கிழமை நடை
பெற்ற கூட்டத்தில் சரத்பவார் மேலும் பேசிய தாவது:
பந்தாபூர் பகுதியில் உள்ள விட்டல் கோயி
லுக்குச் சென்று வழிபாடு செய்வதற்கு எவரது அனுமதியும் தேவையில்லை. அதேபோல்,
துறவி தன்யானேஷ்வர், துறவி துக்காராம் ஆகியோரை வழிபட விரும்பினால், முறையே
ஆலண்டி, தேஹு ஆகிய தலங்களுக்கு நாம் செல்லலாம்.
எந்தவொரு கோயிலுக்கும் சென்று வழி பாடு
செய்வதற்கு எவரது அனுமதியும் தேவை யில்லை. ஒருவேளை அவ்வாறு கோயில்
களுக்குச் செல்ல நமக்கு அனுமதியில்லை என்று எவரேனும் கூறினால், வாகாரி
சமூகத் தின் சித்தாந்தத்தை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று
அர்த்தம்.
எந்தவொரு உண்மையான வாகாரியும் அத்தகைய
நிலைப்பாட்டை எடுக்க மாட்டார். அதுபோன்றவர்களின் பேச்சை நாம் ஒதுக்கி
விட்டு, நமது விருப்பத்தின் பேரில் செயல்பட வேண்டும் என்று சரத்பவார்
பேசினார்.
முன்னதாக ராஷ்ட்ரீய வாகாரி பரிஷத் அமைப்பு
சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில், ராமாயணம் தேவையில்லை என்று
மதிப்பிற்குரிய சரத்பவார் கூறுகிறார். கடவுளர்கள், துறவிகள், இந்து மதத்தை
அவமதிப்போரை அவர் ஆதரிக்கிறார்.
அவர் போன்ற அரசியல்வாதிகளை மத ரீதியிலான
நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வாகாரிகள் அழைப்பு விடுக்கக் கூடாது. தாங்கள்
இந்துக்கள் என்பதை வாகாரிகள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று
கூறப் பட்டிருந்தது.
No comments:
Post a Comment